»   »  ஆர்யா - சந்தானம் - பிரேம்ஜி: வை ராஜா வை அல்லது வருத்தப்படாத வாலிபர் சங்கம்?

ஆர்யா - சந்தானம் - பிரேம்ஜி: வை ராஜா வை அல்லது வருத்தப்படாத வாலிபர் சங்கம்?

Posted By:
Subscribe to Oneindia Tamil
Arya, Santhanam and Premji
இந்தியில் தாங்கள் தயாரித்த சூப்பர் ஹிட் படமான டெல்லி பெல்லியை தமிழுக்கு ஏற்ப ரீமேக் செய்கிறது யுடிவி நிறுவனம்.

இந்தப் படத்தில் ஆர்யா - சந்தானம் - பிரேம்ஜி அமரன் என அதிரடி கூட்டணி உருவாகியுள்ளது.

ஜெயம் கொண்டான், கண்டேன் காதல் போன்ற படங்களை இயக்கிய ஆர் கண்ணன் இந்தப் படத்தை இயக்குகிறார்.

டெல்லி பெல்லியில் வரும் விமான பணிப்பெண் மற்றும் பத்திரிகையாளர் வேடங்களில் ஹன்சிகா மற்றும் அஞ்சலி நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.

அதிரடி சிரிப்பு, கிளுகிளுக்க வைக்கும் கவர்ச்சிதான் இந்தப் படத்தின் பார்முலா.

இப்படத்தில் வசனங்களுக்கு அதிக முக்கியத்துவம் இருப்பதால், ஜான் மகேந்திரனிடம் அந்தப் பொறுப்பை தந்திருக்கிறார்கள். இவர் விஜய் நடித்த 'சச்சின்', ஈழப் போர் குறித்த மறக்கமுடியாத படமான ஆணி வேர் போன்ற படங்களைத் தந்தவர் ஜான்.

இந்தப் படத்துக்கு இரண்டு தலைப்புகள் பரிசீலனையில் உள்ளன. ஒன்று வை ராஜா வை. அடுத்து.. வருத்தப்படாத வாலிபர் சங்கம்!

மே 7-ம் தேதி படப்பிடிப்புக்கு கிளம்புகிறார்கள். படம் பொங்கலுக்கு ரிலீஸ்!!

Read more about: ஆர்யா, arya
English summary
UTV is going to remake its hit comedy Delhi Belly Tamil. Directed by R Kannan, the film will go on the floors on May 7 with Arya in the lead.
Please Wait while comments are loading...