»   »  டெல்லியில் ஈவ் டீஸிங் வழக்கில் கைதானவரிடம் மன்னிப்பு கேட்ட 'லேடி ரஜினி'

டெல்லியில் ஈவ் டீஸிங் வழக்கில் கைதானவரிடம் மன்னிப்பு கேட்ட 'லேடி ரஜினி'

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: டெல்லியில் ஈவ் டீஸிங் வழக்கில் சிக்கிய நபரிடம் பாலிவுட் நடிகை சோனாக்ஷி சின்ஹா மன்னிப்பு கோரியுள்ளார்.

டெல்லியில் உள்ள திலக் நகரில் டிராபிக் சிக்னலில் ஒருவர் தன்னை ஈவ் டீஸிங் செய்ததாகக் கூறி ஜஸ்லீன் கவுர் என்ற பெண் அவரை புகைப்படம் எடுத்து அதை ஃபேஸ்புக்கில் வெளியிட்டார். போலீசாரும் ஜஸ்லீனின் புகாரின் பேரில் அந்த நபரை தேடிக் கண்டுபிடித்து கைது செய்தனர்.

விசாரணையில் அவர் கூறுகையில், தான் ஈவ் டீஸிங் செய்யவில்லை என்றும் ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த ஜஸ்லீன் பப்ளிசிட்டிக்காக அவ்வாறு செய்ததாகவும் தெரிவித்தார். சம்பவத்தை நேரில் பார்த்தவர்களும் அந்த நபருக்கே ஆதரவு தெரிவித்தனர்.

சோனாக்ஷி சின்ஹா

சோனாக்ஷி சின்ஹா

டெல்லி சம்பவம் பற்றி அறிந்த பாலிவுட் நடிகை சோனாக்ஷி சின்ஹா ஒரு பெண்ணாக வெட்கப்பட்டு வேதனைப்பட்டுள்ளார். இது குறித்து அவர் ட்விட்டரில் தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

மன்னிப்பு

ஒரு பெண்ணாக இருப்பதால் சந்தகேத்தின் பலன் பலரைப் போன்று ஜஸ்லீனுக்கு அளிக்கப்பட்டது. பலரைப் போன்று நானும் வெட்கப்படுகிறேன். அந்த நபரிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.

rn

தவறு

தவறை ஒப்புக் கொண்டு மன்னிப்பு கேட்பதால் யாரும் சிறியவர் ஆகிவிட மாட்டார்கள்...அப்படி தான் எனக்கு கற்றுக் கொடுத்துள்ளனர் என்று ட்வீட் செய்துள்ளார் சோனாக்ஷி.

ஜஸ்லீன்

ஜஸ்லீன்

தான் எந்த ஒரு அரசியல் கட்சியைச் சேர்ந்தவளும் இல்லை என்று ஜஸ்லீன் கவுர் தெரிவித்துள்ளார். ஜஸ்லீனின் பொய் நாடகத்தை பலரும் சமூக வலைதளங்களில் விமர்சித்துள்ளனர்.

English summary
Sonakshi Sinha tweeted that, 'Being a girl, gave the benefit of doubt to Jasleen, like many others! And like many others am embarrassed n let down! Apologies to the guy.'

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil