சரியா சொல்லுங்க...தலைவர் 169 ஐ இயக்குறீங்களா ? இல்லையா ?...குழப்புறீங்களே பாஸ்

சென்னை : ரஜினி தற்போது சிறுத்தை சிவா இயக்கும் அண்ணாத்த படத்தில் நடித்து முடித்துள்ளார். மீனா, நயன்தாரா, குஷ்பு, கீர்த்தி சுரேஷ், சூரி, சதீஷ் உள்ளிட்டோர் முக்கிய ரோல்களில் நடித்துள்ள இந்த படம் தீபாவளிக்கு ரிலீஸாக நவம்பர் 04 ம் தேதி ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கிராமத்து, காமெடி, என்டர்டைன்மென்ட் படமாக உருவாக்கப்பட்டுள்ள அண்ணாத்த படம் பொள்ளாச்சி, ஐதராபாத் உள்ளிட்ட பகுதிகளில் படமாக்கப்பட்டுள்ளது. ரஜினி, மீனா ஆகியோரைத் தொடர்ந்து மற்ற நடிகர், நடிகைகளும் டப்பிங் வேலைகளில் இறங்கி உள்ளனர்.

இதனால் படத்தின் டப்பிங் வேலைகள் வேகமாக முடிக்கப்பட்டு, இறுதிக்கட்ட வேலைகள் நடைபெற்று வருகின்றன. விரைவில் மீதமுள்ள காட்சிகளை படமாக்க சிறுத்தை சிவா கொல்கத்தா செல்ல உள்ளார். சன் பிக்சர்ஸ் இந்த படத்தை தயாரித்துள்ளது.

நான்காவது முறையாக ரஜினியுடன் கூட்டணி

நான்காவது முறையாக ரஜினியுடன் கூட்டணி

எந்திரன், பேட்ட, அண்ணாத்த படங்களைத் தொடர்ந்து நான்காவதாக ரஜினி நடிக்கும் அடுத்த படத்தையும் சன் பிக்சர்ஸ் நிறுவனமே தயாரிக்க உள்ளது. அண்ணாத்த படத்தை தொடர்ந்து தலைவர் 169 என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள ரஜினியின் 169 வது படம் பற்றிய அறிவிப்புக்கள் வெளி வர துவங்கி விட்டன.

தலைவர் 169 ஐ இயக்க போவது யார்

தலைவர் 169 ஐ இயக்க போவது யார்

தலைவர் 169 படத்தை கார்த்திக் சுப்பராஜ் அல்லது கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தை இயக்கிய தேசிங்கு பெரியசாமி இயக்க உள்ளதாக முதலில் கூறப்பட்டது. பிறகு இந்த படத்தை தேசிங்கு பெரியசாமி தான் இயக்க உள்ளதாகவும், இதில் ரஜினிக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் நடிக்க உள்ளதாகவும் தகவல் பரவியது.

அப்படி எந்த பேச்சும் நடக்கல

அப்படி எந்த பேச்சும் நடக்கல

ஆனால் சமீபத்தில் இது பற்றி ட்விட்டரில் கருத்து பதிவிட்ட தேசிங்கு பெரியசாமி, தான் சூப்பர் ஸ்டாரை இயக்க போவதாக வரும் தகவல்கள் உண்மையில்லை. அது போல் எந்த பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை. அதனால் இது போன்ற போலியான தகவல்கள் மற்றும் வதந்திகளை பதிவிடுவதை தயவு செய்து நிறுத்தங்கள் என கூறி வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

குழப்புறீங்களே ப்ரோ

குழப்புறீங்களே ப்ரோ

இதனால் தலைவர் 169 படத்தின் அறிவிப்பு வெளியாகும் என காத்திருந்த ரஜினி ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர். இந்நிலையில் ட்விட்டரில் ரசிகர் ஒருவர் தேசிங்கு பெரியசாமியிடம், தலைவர் 169 நீங்களா பண்ணுறீங்க. நீங்களா இருந்தா வெறித்தனமா செய்யுங்க ப்ரோ என கேட்டிருந்தார். அதற்கு பதிலளித்த தேசிங்கு பெரியசாமி, அது நடக்கும் ப்ரோ என பதிலளித்திருந்தார்.

ரசிகர்களை குழப்பிய தேசிங்கு பெரியசாமி

ரசிகர்களை குழப்பிய தேசிங்கு பெரியசாமி

தேசிங்கு பெரியசாமியின் இந்த பதில் ரஜினி ரசிகர்களை குஷிப்படுத்தி இருந்தாலும், இது உண்மை என்றால் தலைவர் 169 பற்றிய தகவல்களை ஏன் தேசிங்கு பெரியசாமி மறுத்தார் என்ற கேள்வியும், குழப்பமும் எழுந்துள்ளது. முதலில் இல்லை என்கிறார், பிறகு ஆமாம் நடக்கும் என்கிறார். மொத்தத்தில் தேசிங்கு பெரியசாமி என்ன தான் சொல்ல வரார் என்று ரஜினி ரசிகர்கள் குழப்பமடைந்துள்ளனர்.

அரசியல் இனி இல்லை

அரசியல் இனி இல்லை

அண்ணாத்த படத்தை முடித்து விட்டு ரஜினி தீவிர அரசியலில் இறங்குவார். அதனால் அரசியல் தொடர்பாக தகவல்கள் ஏதாவது அண்ணாத்த படத்தில் இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சமீபத்தில் தான் அரசியல் இறங்க போவதில்லை என ரஜினி அறிவித்தார். அதோடு ரஜினி மக்கள் மன்றத்தையும் கலைப்பதாக அறிவித்தார். இனி அரசியல் இல்லை என்பதால் ரஜினி சினிமாவில் கவனம் செலுத்தலாம்.

அடுத்த பட எதிர்பார்ப்பில் ரசிகர்கள்

அடுத்த பட எதிர்பார்ப்பில் ரசிகர்கள்

இதனால் ரஜினியின் அடுத்தடுத்த படங்கள், அவற்றை இயக்க போகும் இயக்குனர்கள் போன்றவை பற்றிய எதிர்பார்ப்புக்கள் ரஜினி ரசிகர்களிடம் அதிகரித்து வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X