Devayani Daughter: அம்மாவை போலவே அதே அழகு.. செல்ஃபி புள்ளையாக மாறிய தேவயாணி மகள்!

சென்னை: ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் 'சரிகமப சீனியர் சீசன் 5' நிகழ்ச்சியில் நடிகை தேவயானியின் மகள் இனியா போட்டியாளராக கலந்து கொண்டு கலக்கி வருகிறார். அம்மாவைப் போல மகளும் நடிகையாக வருவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தன் சொந்த முயற்சியால் பாடகியாக வருவதற்கு கடுமையான முயற்சி எடுத்து வருகிறார்.

இந்த சீசனில் சீனிவாஸ், விஜய் ஸ்ரீ பிரசாத், கார்த்திக் மற்றும் ஸ்வேதா மோகன் ஆகியோர் நடுவர்களாக உள்ளனர். இதில், நடிகை தேவயாணியின் மூத்த மகள் இனியா கலந்து கொண்டு, பாடகி பவதாரணி பாடிய மயில் போல பொண்ணு ஒன்னு என்ற பாடலை பாடி பலருடைய மனதில் இடம் பிடித்தார்.. அதைத் தொடர்ந்து 'பல்லாங்குழியின் வட்டம் பார்த்தேன்', 'வா வா என் தேவதையே' போன்ற பாடல்களை பாடி அசத்தி வருகிறார்.

Devayani iniya photo
Photo Credit:

தேவயானியின் மகள் இனியா: கண்கலங்கிய தேவயானி: பல கட்டமாக நடந்து வரும் நிகழ்ச்சியில், மகள் இனியா நன்றாக பாடுவதை பார்த்து ரசித்து வருகிறார். இந்த நிகழ்ச்சியில் கடந்த வாரம் கலந்து கொண்ட ராஜகுமாரன், இனியா பாடுவதை கேட்கும் போது ஏதோ சாதித்த மாதிரி ஒரு உணர்வு ஏற்படுகிறது. இது எல்லாத்திற்கும் காரணம் நான் இல்லை, என் மனைவி தேவயானி தான். அவள் தான் குழந்தைகளை நன்றாக கவனித்து அவர்களின் திறமையை வெளியில் கொண்டு வர கடுமையாக உழைத்தார் என்று உருக்கமாக பேசி இருந்தார். மற்ற போட்டியாளர்களை போல ஒவ்வொரு வாரமும், தன் மகள் இனியாவுக்காக நடிகை தேவயானி இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, பெற்றோர்கள் அமரும் வரிசையில் அமைந்து நிகழ்ச்சியை பார்த்து வருகிறார். அவரின் இந்த பண்பு பலரையும் வியப்பில் ஆழ்த்தி வருகிறது.

செல்ஃபி புள்ள: சரிகபம நிகழ்ச்சி சென்ற பின் இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் தேவயானியின் மகள் இனியா, நிகழ்ச்சியின் போது எடுக்கும் போட்டோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்து வருகிறார். அந்த வகையில், இனியா முதன் முறையாக ஸ்டைலான உடையில் இருக்கும் போட்டோவை ஷேர் செய்துள்ளார். அந்த போட்டோவை பார்த்த ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். நடிகை தேவயானி சரத்குமாரின் சூர்யவம்சம் படத்தில் நடித்த போது உதவி இயக்குநராக இருந்தார் ராஜகுமாரனை வீட்டில் எதிர்ப்பை மீறி காதலித்து திருமணம் செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X