»   »  விஜய்யின் புலி பாடலை இளையராஜாவுக்கு சமர்ப்பித்த தேவிஸ்ரீபிரசாத்!

விஜய்யின் புலி பாடலை இளையராஜாவுக்கு சமர்ப்பித்த தேவிஸ்ரீபிரசாத்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

விஜய் நடிப்பில் அடுத்து வெளிவரவிருக்கும் புதிய படமான புலியின் முதல் பாடலை இளையராஜாவுக்கு சமர்ப்பிப்பதாக இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் தெரிவித்தார்.

விஜய், ஸ்ருதிஹாசன், ஹன்சிகா, ஸ்ரீதேவி, சுதீப் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தப் படத்தை சிம்பு தேவன் இயக்கியிருக்கிறார். தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்திருக்கிறார்.

Devi Sri Prasad dedicates Puli song to Ilaiyaraaja

படத்தில் இடம்பெற்றுள்ள ‘ஏண்டி ஏண்டி' என்னும் பாடலை விஜய்யும், ஸ்ருதிஹாசனும் பாடி இருந்தார்கள். இந்த பாடலின் டீசர் நேற்று வெளியானது. இந்த டீசரில் தேவிஸ்ரீ பிரசாத் இந்த பாடல் குறித்து பேசுகையில், "என்னுடைய இசையில் விஜய்யும், ஸ்ருதிஹாசனும் ‘ஏண்டி ஏண்டி' என்னும் பாடலை பாடியிருக்கிறார்கள்.

மிகவும் மெலோடியான இந்த பாடல் அருமையாக வந்திருக்கிறது. நான் தீவிர கிட்டார் பிரியன். கிட்டார் இசையில் மிகவும் ரொமான்டிக்கான பாடலை உருவாக்கியிருக்கிறேன். இந்த பாடலை இசைஞானி இளையராஜாவுக்கு சமர்பிக்கிறேன். இந்த பாடல் உங்களுக்கு கண்டிப்பாக பிடிக்கும்," என்று குறிப்பிட்டுள்ளார்.

English summary
Devi Sri Prasad has dedicated Yeandi Yeandi song from Vijay starred Puli to Maestro Ilaiyaraaja.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil