»   »  திரைத் துளி

திரைத் துளி

Posted By:
Subscribe to Oneindia Tamil

நடிகர் சங்க தலைவர் பதவிக்கு நடிகர் விஜயகாந்த்தை எதிர்த்து அதிமுக நடிகை தேவி வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.

நடிகர் சங்கத் தேர்தலை போட்டியின்றி ஒரு மனதாக தேர்ந்தெடுக்க முடிவு செய்யப்பட்டது. தலைவர் பதவிக்கு நடிகர் விஜயகாந்தும்,பொதுச் செயலாளர் பதவிக்கு சரத்குமாரும் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டது.

இந் நிலையில் டப்பிங் கலைஞர்கள் சங்க துணை தலைவராக இருக்கும் தேவி நடிகர் சங்கத் தலைவர் பதவிக்கு வேட்பு மனுத் தாக்கல்செய்துள்ளார்.

இவர் 50-க்கும் மேற்பட்ட படங்களிலும் ஆயிரக்கணக்கான நாடகங்களிலும் நடித்துள்ளார். அதிமுக பிரச்சார கலைகுழுவிலும் இருக்கிறார்.தேர்தலில் போட்டியிடுவது குறித்து தேவி நிருபர்களிடம் கூறியதாவது:

கடந்த 74-ம் ஆண்டு முதல் நடிகர் சங்க உறுப்பினராக நான் இருக்கிறேன். பெண்களுக்கு 33 சதவிகித இட ஒதுக்கீட்டை முதல்வர் ஜெயலலிதாஅறிவித்துள்ளார். அதை நிறைவேற்றவே இப்போது தேர்தலில் போட்டியிடுகிறேன்.

விஜயகாந்த் நல்ல முறையில் பணியாற்றினார் என்பதை நான் மறுக்கவில்லை. அதற்காக அவரே தொடர்ந்து தலைவராக இருக்கவேண்டுமா?.

விஜயகாந்த் மிகவும் பிசியான நடிகர். அவரால் முழுநேரமும் நடிகர் சங்கத்திற்காக உழைக்க முடியாது. நடிகர் சங்கத்தில் அதிக அளவில்நாடக நடிகர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். அவர்கள் எனக்குதான் வாக்களிப்பார்கள்.

மேலும் பல பிரபல நடிகர்கள் எனக்கு போன் செய்து தங்கள் ஆதரவை தெரிவித்துள்ளனர். எனவே நான் வெற்றி பெறுவது உறுதி என்றுகூறினார்.

மன்சூரலிகான் உண்ணாவிரதம்:

இந் நிலையில் நடிகர் மன்சூரலிகான் நடிகர் சங்கம் முன்பு திடீரென்று காலவரையற்ற உண்ணாவிரதம் தொடங்கினார்.

இது குறித்து நிருபர்களிடம் அவர் கூறியதாவது:

நடிகர் சங்கத்தில் தலைவர் விஜயகாந்துக்குத் தெரியாமல் சிலர் தனி ராஜ்யம் நடத்திக்கொண்டு இருக்கிறார்கள். கடந்த 5-ம் தேதி துணைதலைவர் பதவிக்கு மனு செய்தேன். ஆனால் நான் 100 ரூபாய் கட்டவில்லை என்று கூறி எனது மனுவை தள்ளுபடி செய்து விட்டதாகமானேஜர் கூறுகிறார்.

என்னிடம் முன்னரே சொல்லியிருந்தால் அதைக் கட்டியிருப்பேன். இது வேண்டுமென்றே அந்த மானேஜர் செய்த வேலை. தேர்தல்அதிகாரியிடம் கேட்டால் அவருக்கு ஒன்றும் தெரியாது என்கிறார்.

எனவே மானேஜர் மற்றும் தேர்தல் அதிகாரியை மாற்ற தொடர் உண்ணாவிரதம் இருக்கிறேன். இது விஜயகாந்துக்கு எதிரான போரட்டம்அல்ல. அவரது விசுவாச தொண்டர்களில் நானும் ஒருவன். அவரையும் மீறி நடைபெறும் சில காரியங்களைத் தட்டிக் கேட்கவேஉண்ணாவிரதம் இருக்கிறேன் என்று கூறினார்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil