Don't Miss!
- Sports
ருதுராஜ் கெயிக்வாட்-க்கு என்ன ஆனது? நியூசி, தொடரில் இருந்து திடீர் விலகல்..மேலும் 2 பேருக்கு சிக்கல்
- Lifestyle
உங்க சருமம் பளபளன்னு ஜொலிக்கவும் முடி நீளமா வளரவும் பப்பாளியை எப்படி யூஸ் பண்ணனும் தெரியுமா?
- Finance
TVS: லாபத்தில் 22 சதவீதம் உயர்வு.. ஆனால்..!!
- News
கிளம்பாக்கம் புறநகர் பேருந்து நிலையம் வரை.. வருகிறது சென்னை மெட்ரோ! பிரஷரே இல்லாமல் ஜாலியாக போகலாம்
- Technology
Android போன்களுக்கு புது சோதனை.! 'இதை' செஞ்சுடாதீங்க.! மானம், பணம் எல்லாமே போய்விடும்.! எச்சரிக்கை.!
- Automobiles
குறைவான விலையில் மைலேஜை வாரி வழங்கும் பைக்! பழைய நண்பன் ஹீரோவின் கதையை முடிக்க ஸ்கெட்ச் போட்ட ஹோண்டா!
- Travel
கன்பார்ம் செய்யப்பட்ட ரயில் டிக்கெட்டின் பயண தேதியை மாற்ற வேண்டுமா – இப்படி செய்யுங்கள்!
- Education
CRPF Head constable Recruitment 2023:பிளஸ் டூ பாஸ்? 1,458 பணிக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி வாய்ப்பு...!
Bigg Boss Tamil 6: அடேங்கப்பா.. தனலட்சுமி பிக் பாஸ் வீட்டில் வாங்கிய சம்பளம் இத்தனை லட்சமா?
சென்னை: இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து அதிரடியாக வெளியேற்றப்பட்ட மக்கள் போட்டியாளர் தனலட்சுமி இந்த நிகழ்ச்சியில் பல லட்சம் ரூபாய் சம்பளமாக வாங்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் தொடர்ந்து 3வது வாரமாக பெண் போட்டியாளர் வெளியேற்றப்பட்டது பெரும் விமர்சனங்களை எழுப்பி உள்ளது.
ஆனால், மக்கள் தான் ஓட்டுப் போட்டு பெண் போட்டியாளர்களை காப்பாற்றாமல் ஆண்களை சேவ் செய்கின்றனர் என பிக் பாஸ் டீம் பழியை அழகாக வழக்கம் போல மக்கள் தலையிலேயே போட்டு விட்டு எஸ்கேப் ஆகி வருகிறது.
மகனுடன்
கிறிஸ்துமஸ்
கொண்டாடிய
ஐஸ்வர்யா
ரஜினிகாந்த்..இணையத்தில்
தீயாய்
பரவும்
புகைப்படம்
!

தனலட்சுமி எவிக்ஷன் நியாயமா
இந்த சீசனில் மக்கள் போட்டியாளராக பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு ஷிவின் மற்றும் தனலட்சுமி இருவரும் உள்ளே நுழைந்தனர். இதில், அசீமுக்கு இணையாக முதல் வாரத்தில் இருந்து கன்டென்ட் கொடுத்து வந்தவர் தனலட்சுமி என்றும் அவர் இந்த வாரம் வெளியேற்றப்பட்டது கடைசி நேர மோசடி என ரசிகர்கள் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். தனலட்சுமி வெளியே போனது நல்லது தான். சும்மா கத்தி கத்தியே விளையாடுகிறேன் என வெறுப்பேற்றி வந்தார் என்றும் கமெண்ட்டுகள் குவிகின்றன.

எல்லாரையும் அனுப்பிடுங்க
மேலும், சில பிக் பாஸ் ரசிகர்கள் இந்த சீசனில் யார் வெளியே போனா எங்களுக்கு என்ன என்பது போலத்தான் ஷோவே இருக்கு.. ஒரேயடியாய் எல்லோரையும் அனுப்பிடுங்க என்றும் பங்கமாக கமெண்ட் போட்டு இந்த சீசனே நல்லா இல்லை என கழுவி ஊற்றி வருகின்றனர்.

தனலட்சுமியின் ஒரு நாள் சம்பளம்
டிக் டாக் பிரபலமான தனலட்சுமி கடும் முயற்சிகளுக்கு இடையே பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார். தனலட்சுமிக்கு இந்த ஷோவில் வாய்ப்பு கிடைத்த நிலையில், ஒரு நாள் சம்பளமாக 15 ஆயிரம் ரூபாய் வாங்கியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இத்தனை லட்சமா
தனலட்சுமி பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் நாளில் இருந்து 76 நாட்கள் பிக் பாஸ் வீட்டில் இருந்த நிலையில், 11 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் சம்பளமாக பெற்றுள்ளார் என தகவல்கள் வெளியாகி உள்ளன. இன்னும் கொஞ்ச நாள் இருந்துவிட்டு பெட்டியை எடுத்துக் கொண்டு தனலட்சுமி சென்றிருக்கலாம் என ரசிகர்கள் விருப்பம் தெரிவித்து வருகின்றனர்.

ஏகப்பட்ட வாய்ப்பு வரும்
பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு பிக் பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சி மற்றும் விஜய் டிவி சீரியல்கள் அதையும் தாண்டி சினிமா வாய்ப்புகள் என ஏகப்பட்ட சான்ஸ் தனலட்சுமிக்கு அடுத்தடுத்து கிடைக்கும் அதை அவர் சரியாக பயன்படுத்திக் கொண்டு முன்னேற வேண்டும் என ரசிகர்கள் வாழ்த்தி வருகின்றனர்.