பாடி ஷேமிங்.. அசல் கோலாருக்கு ஏழரை ஸ்டார்ட் ஆகிடுச்சு.. முதல் பெண்ணாக எதிர்த்து எகிறிய தனலட்சுமி!

சென்னை: பெண் போட்டியாளர்களை சுற்றியே வட்டமிட்டு வந்த அசல் கோலார் யாருகிட்ட செமத்தியா வாங்கப் போறாருன்னு தெரியல என நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வந்த நிலையில், தனலட்சுமி லெஃப்ட் அண்ட் ரைட் வாங்கி உள்ளார்.

அண்ணான்னு ஏன் கூப்பிடுற என தனலட்சுமியிடம் வழிந்த அசலை அப்படித்தான் கூப்பிடுவேன் என அடித்து நொறுக்கி இருக்கிறார் தனலட்சுமி.

பாம் பாம்னு அடிச்சி வெளியே அனுப்பணுமா இப்படி ஒரு பெண்ணிட பேச எப்படி தோணுச்சு என அத்தனை ஹவுஸ்மேட்ஸ் முன்னிலையிலும் சம்பவம் செய்துள்ளார்.

நோண்டுவதே வேலை

நோண்டுவதே வேலை

பெண் போட்டியாளர்கள் பின்னாடி சுற்றி வரும் ஜோர்த்தால புகழ் அசல் கோலார் பிக் பாஸ் வீட்டில் குயின்ஸியின் கையை தடவுவது, மகேஸ்வரியின் முட்டியை நோண்டுவது, நிவாஷினியிடம் நீச்சல் குளம் அருகே கடலை போடுவது, மைனா நந்தினியிடமும் தொட்டு தொட்டு பேசுவது என எல்லை மீறி செல்கிறார் என பிக் பாஸ் நிகழ்ச்சியை பார்க்கும் அத்தனை ரசிகர்களும் அவரை திட்டித் தீர்த்து வருகின்றனர்.

ஜாலியா விளையாடுறாரு

ஜாலியா விளையாடுறாரு

அந்த பெண் போட்டியாளர்கள் யாருமே எதிர்த்து பேசவில்லையே, அவர் ஜாலியா விளையாடுறாரு என அசல் கோலாருக்கு ஆதரவாகவும் சிலர் கருத்து தெரிவித்து வந்த நிலையில், தனலட்சுமி முதல் பெண்ணாக அசல் கோலாரின் அட்டகாசங்களுக்கு முடிவு கட்டும் விதமாக நேற்று சண்டைப் போட்டது பிக் பாஸ் வீட்டையே போர்க்களமாக மாற்றியது.

அண்ணான்னு கூப்பிடக் கூடாதாம்

அண்ணான்னு கூப்பிடக் கூடாதாம்

பிக் பாஸ் போட்டியாளர் தனலட்சுமி அசல் கோலாரை அண்ணான்னு கூப்பிட்டா, அப்படி கூப்பிடக் கூடாதுன்னு சொல்றாரு என ஆரம்பித்து அசல் கோலாரு பண்ண அத்தனை லீலைகளும் ஒன்றன் பின் ஒன்றாக அடுக்க பிக் பாஸ் வீடு ரணகளமாக மாறிவிட்டது. அசீம், ராம் ராமசாமி உள்ளிட்டோர் இருவருக்கும் இடையே நடக்கும் சண்டையை தடுக்க பெருமுயற்சிகள் மேற்கொண்டனர். தலைவர் ஜிபி முத்து தனலட்சுமி பிரச்சனை என்பதால் தலையிட வில்லை.

பாம் பாம்னு அடிச்சி அனுப்பணுமா

பாம் பாம்னு அடிச்சி அனுப்பணுமா

அண்ணான்னு நான் கூப்பிட்டா உடனே பெரியம்மான்னு கூப்பிட்டு பாடி ஷேமிங் பண்றான். அப்புறம் நான் பேசிட்டு வெளியே வந்ததும் பேசவே விட்ருக்கக் கூடாது, பாம் பாம்னு அடிச்சின் வெளியே அனுப்பி இருக்கணும் என அருவறுக்கத்தக்க வகையில் பேசிறான் என தனலட்சுமி ஒட்டுமொத்த புகாரையும் ஒன்றன் பின் ஒன்றாக அடுக்கி விட்டார்.

எங்கிட்ட எகிறாத

எங்கிட்ட எகிறாத

என்னை நெஞ்சை நிமிர்த்திட்டு நின்னா நீ பெரிய ஆளா? என்கிட்ட எகிறாதா என தனலட்சுமி போட்டு வெளுத்து வாங்கி விட்டார். என்ன வா போன்னு பேசுற என அசல் பதிலுக்கு கேட்க, நீ ஏன் என்ன வா போன்னு பேசின என இருவருக்கும் இடையே கடுமையான சண்டையே ஏற்பட்டது. கொஞ்சம் விட்டு இருந்தால், கைகலப்பு கூட நடந்திருக்கும். அசீம், ராம் ராமசாமி இந்த விவகாரத்தில் தலையிட்டு பிரச்சனையை சமாளித்த விதம் பாராட்டுக்குரியது.

கிட்ட வராத குயின்ஸி

கிட்ட வராத குயின்ஸி

அசலுக்கும் தனலட்சுமிக்கும் இடையே சண்டை நடந்து வந்த நிலையில், குயின்ஸி கொஞ்சம் தூரமாக தள்ளி நின்றே வேடிக்கை பார்த்தார். அந்த பிரச்சனை நடந்த இடம் பக்கமே அவர் வரவில்லை. தனலட்சுமியை தொடர்ந்து அடுத்து அசலுக்கும் குயின்ஸிக்கும் தான் பிரச்சனை வெடிக்க போகிறது என பிக் பாஸ் ரசிகர்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர்.

கமல் கண்டிப்பாரா

கமல் கண்டிப்பாரா

இரண்டாவது வாரம் ஆரம்பத்தில் இருந்தே அசலின் சேட்டைகள் எல்லை மீறி சென்றுக் கொண்டிருப்பதாக ஏகப்பட்ட ரசிகர்கள் புகார் தெரிவித்து வருகின்றனர். மேலும், தனலட்சுமிக்கும் அசலுக்கும் இடையே ஏற்பட்ட சண்டை குறித்து கமல் இந்த வாரம் கண்டிப்பாக பேச வேண்டும் என்றும் அசல் கோலாரை கண்டிக்க வேண்டும் என்றும் ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

வெளியே அனுப்புங்க

வெளியே அனுப்புங்க

பெண் போட்டியாளர்களிடம் கண்ணியமாக நடக்க தெரியாத அசல் கோலார் போன்ற போட்டியாளர்களை இன்னும் ஏன் உள்ளே வச்சிருக்கீங்க, வெளியே அனுப்புங்க என பிக் பாஸ் ரசிகர்கள் கொதித்து எழுந்துள்ளனர். தனலட்சுமிக்கு எதிராகவும் அசல் கோலார் ரசிகர்கள் கமெண்ட் போட்டு வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X