தனலட்சுமியின் துரோகம்..மழுப்பிய விக்ரமன்..கதறி அழுத குயின்சி..ஆறுதல் கூறிய பிக்பாஸ்

நியாயம் பேசும் நீங்களே இப்படி செய்யலாமா? குயின்சியின் கேள்வியால் சங்கடப்பட்டு வாயடைத்து போனார் விக்ரமன்.

இந்த வாரம் ராஜா ராணி டாஸ்கை பிக் பாஸ் அறிமுகப்படுத்தினார். இதில் இளவரசி போட்டியில் ஜனனி ஆயிஷா மைனா உள்ளிட்டவர்கள் போட்டியிட்டனர், இதில் குயின்சிக்கு விக்ரமனை வாக்களிக்க விடாமல் தனலட்சுமி தடுத்தார்.

இதுகுறித்து குயின்ஸி கேட்டதற்கு நியாயவான் விக்ரமனால் பதில் சொல்ல இயலவில்லை.

 ராஜாராணி டாஸ்க்கும் போட்டியிட்ட ஹவுஸ்மேட்ஸும்

ராஜாராணி டாஸ்க்கும் போட்டியிட்ட ஹவுஸ்மேட்ஸும்

பிக் பாஸ் வீட்டில் இருந்த வாரம் ராஜா ராணி டாஸ்க்கை பிக்பாஸ் கொடுத்துள்ளார். இதில் மூன்று வகையாக மூன்று பிரிவாக போட்டியாளர்கள் பிரிய வேண்டும். ராஜா, ராணி, இளவரசன், இளவரசி, ராஜகுரு, படைத்தளபதி ஒரு குழுவாகவும் அவர்களுக்கு சேவை செய்யும் 6 பேர் கொண்ட சேவர்களும், அரண்மனையின் மியூசியத்தை பாதுகாக்கும் ஐந்து வீரர்களும் கொண்ட மூன்று பிரிவு அமைக்கப்பட்டுள்ளது. அனைவரும் சேர்ந்து செந்தமிழில் பேச வேண்டும் ராஜா ராணி குடும்பத்தை தவிர மற்றவர்கள் அவர்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்று டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது.

 இளவரசி பதவிக்கு போட்டியிட்ட குயின்சி

இளவரசி பதவிக்கு போட்டியிட்ட குயின்சி

இதில் ராஜா ராணி குடும்பத்தில் இளவரசிக்கு பெரும் போட்டி நடந்தது. பின்னர் அது வாக்கெடுப்பாக மாற்றப்பட்டது. இதில் குயின்சி ஜனனி ஆயிஷா மைனா லிட்டர் இளவரசியாக இருக்க போட்டி போட்டனர். இந்த போட்டியின் பொழுது ஆயிஷாக்கு ஓட்டு கிடைக்கவில்லை, மைனாவுக்கு ஒரு ஓட்டும் கிடைக்கவில்லை.குயின்சிக்கு சில ஓட்டுகள் கிடைத்தன. ஜனனி அதிகமாக வாக்குகள் கிடைத்து இளவரசியாக தேர்வு செய்யப்பட்டார்.

 குயின்சிக்கு ஓட்டுப்போடாமல் விக்ரமன் கையை பிடித்து தடுத்த தனலட்சுமி

குயின்சிக்கு ஓட்டுப்போடாமல் விக்ரமன் கையை பிடித்து தடுத்த தனலட்சுமி

இந்த போட்டியில் தான் தேர்ந்தெடுக்கப்படுவதற்கு நடந்த வாக்கெடுப்பில் தன்னை ஆதரித்து கை தூக்கிய விக்ரமன் கையை பிடித்து தனலட்சுமி வலுக்கட்டாயமாக கீழே இறக்கியதை குயின்சி கவனித்திருந்தார். இதனால் அவருக்கு மூட்அவுட் ஆகி கதிரவன், ராபர்ட் மாஸ்டரிடம் நியாயத்தை சொன்னார். வழக்கம் போல் இருவரும் நழுவினர். பின்னர் ஏடிகே, விக்ரமன் இருந்த இடத்திற்கு வந்த குயின்சி சாதாரணமாக பேசிக்கொண்டிருந்தார். அப்போது விக்ரமன் நீங்க இளவரசியாக வந்திருக்கணும் என்றார்.

 குயின்சி கேட்ட கேள்வியால் தடுமாறிய விக்ரமன்

குயின்சி கேட்ட கேள்வியால் தடுமாறிய விக்ரமன்

இந்த தேர்தலில் நான் இளவரசியாக போட்டியிட்டேன் அதை சிலர் தடுத்தார்கள் தெரியுமா என்று கேட்டார். விக்ரமன் எனக்காக முதலில் கைய தூக்கி விட்டு பின்னால் இறக்கியதும் எனக்கு தெரியும் அதெல்லாம் நடக்கும் என்று விக்ரம் என்று சொன்னார் அதெல்லாம் நேர்மையாக நடந்தால் சரி ஆனால் அடுத்தவர் உங்கள் கையை பிடித்து இறக்கியதை நீங்கள் ஏற்றுக் கொண்டு எனக்கு வாக்களிக்காமல் இருந்தது சரியா என குயின்சி நேரடியாக கேட்டதால் விக்ரமன் மிரண்டு போனார்.

 தனலட்சுமியின் சூழ்ச்சியில் சிக்கிய விக்ரமன்

தனலட்சுமியின் சூழ்ச்சியில் சிக்கிய விக்ரமன்

முதன் முறையாக தனலட்சுமியின் சூழ்ச்சியில் தான் சிக்கி நியாயமற்று நடந்ததை குயின்சி கவனித்துவிட்டதை சமாளிக்க என்னென்னவோ சொன்னார். ஆனால் குயின்சி நேரடியாக ஒருவர் வாக்களிப்பது அவரவர் உரிமை அதை நான் மதிக்கிறேன், ஆனால் ஒருவருக்கு வாக்களிப்பதை அடுத்தவர் தடுப்பது நியாயமா என்கிற கேள்விக்கு விக்ரமனால் பதிலளிக்க முடியவில்லை. அவர் சங்கடப்பட்டு வார்த்தை வராமல் சும்மா இருந்துவிட்டார்.

 விக்ரமனின் முறையற்ற செயலை கமல் இந்த வாரம் சுட்டிக்காட்டுவாரா?

விக்ரமனின் முறையற்ற செயலை கமல் இந்த வாரம் சுட்டிக்காட்டுவாரா?

பின்னர் குயின்சியை பிக்பாஸ் அழைக்க அங்கு பிக்பாஸ் முன் கதறி அழுதார் குயின்சி. பிக்பாஸ் அவருக்கு ஆறுதல் சொல்லி நீங்கள் நீங்களாக தைரியமாக விளையாடுங்கள் என்று சொல்லி அனுப்பி வைத்தார். மோசடியாக விளையாடி முறையற்று ஜெயித்த தனலட்சுமி கமல்ஹாசனால் கண்டிக்கப்பட்டும் திருந்தியதாக தெரியவில்லை. மவுனமாக மற்றவர்களுக்கு எதிராக வேலை செய்வதை காணமுடிந்தது. விக்ரமன் கூட தனலட்சுமியின் சூழ்ச்சியில் சிக்கியது அவர்மீது உள்ள மரியாதையை இந்தவாரம் குறைத்துள்ளது. வாக்களிக்கும் விஷயம் என்பதால் கமல் இதை சுட்டிக்காட்டுவார் என தெரிகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X