எங்க கையை வச்சி தள்ளினான் தெரியுமா..அசிங்கமாக திட்டிய தனலட்சுமி.. அசீமுக்கு ரெட் கார்டு கிடைக்குமா?

சென்னை: கூட்டத்தில் கும்பலாக விளையாடும் போது ஷெரினாவை தனலட்சுமி தள்ளி விட்டதை பார்த்து தனாவிடம் சண்டை பிடித்த அசீம், இன்று நேருக்கு நேர் நெஞ்சருகே கை வைத்து ஒரு பொம்பளை பிள்ளையை தள்ளி விட்டு அதற்கு சப்பைக்கட்டு கட்டி கத்தி பேசும் புத்தியை என்ன சொல்வது என பிக் பாஸ் ரசிகர்கள் அசீமுக்கு இந்த வாரம் இமிடியேட் ரெட் கார்டு கமல் கொடுக்கணும் என பிக் பாஸ் ரசிகர்கள் தற்போது நடைபெற்ற நிகழ்ச்சியை பார்த்து கொந்தளித்துள்ளனர்.

ஷெரினாவை தனலட்சுமி தள்ளி விட்டதை வைத்து இன்றும் பேசி வரும் அசீம், தனலட்சுமியை தள்ளி விட்டது மட்டும் தப்பில்லை என வாதாடுவதும் அவருக்கு ஜால்ரா அடிக்கும் வகையில் ஷெரினா, விஜே மகேஸ்வரி, ஏடிகே எல்லாம் பேசியதை பார்த்து ரசிகர்கள் ரொம்பவே அப்செட் ஆகி உள்ளனர்.

அதே சமயம் விக்ரமன், ஷிவின் தனலட்சுமிக்காக குரல் கொடுத்ததை பார்த்து பாராட்டி வருகின்றனர்.

அங்க கை வச்சு

அங்க கை வச்சு

பொம்மை கூடாரத்தில் அசீமை மறைத்தபடி நின்ற தனலட்சுமியை அவரது நெஞ்சி பகுதியிலேயே கை வைத்து அசீம் வேண்டுமென்றே பழிவாங்கும் முயற்சியில் தள்ளிவிட்டதை பார்த்த பிக் பாஸ் ரசிகர்கள், இவனெல்லாம் ஒரு மனுஷனா? என திட்டித் தீர்த்து வருகின்றனர்.

எங்க கையை வச்சி தள்ளினான் தெரியுமா

எங்க கையை வச்சி தள்ளினான் தெரியுமா

அசீம் அப்படி தள்ளி விட்டதும் அதிர்ச்சியான தனலட்சுமி.. அவன் எங்க கையை வச்சி தள்ளினான் தெரியுமா.. நான் இந்த விஷயத்தை சும்மா விட மாட்டேன் என அசீமை அசிங்கமாக திட்டியதும் ஒட்டுமொத்த பிக் பாஸ் வீடே போர்க்களமாக வெடித்தது. தனலட்சுமிக்கு ஆதரவாக சிலரும், அசீமுக்கு ஆதரவாக சிலரும் ஒன்று திரண்டனர்.

விக்ரமன் விளாசல்

விக்ரமன் விளாசல்

நேற்று நடந்த நிகழ்ச்சியிலேயே ஷெரினா தலையில் அடிபட வில்லை என அடித்து தெளிவாக சொன்ன விக்ரமன் பேச்சை எதிர்த்து தொடர்ந்து அசீம் நீயெல்லாம் ஒரு நியாயவானா என கேட்டு வருகிறார். இதற்காகவே கமலிடம் இந்த வாரம் அசீம் வாங்க கட்டப் போகிறார். தனலட்சுமியிடம் அசீம் பண்ணது ரொம்ப தப்பான விஷயம் என தொடர்ந்து எதிர்த்து நின்று பேசிய நிலையில், ரசிகர்கள் மத்தியில் பாராட்டுக்களை அள்ளி உள்ளார்.

ஓட்டுக்காக மகேஸ்வரி

ஓட்டுக்காக மகேஸ்வரி

இந்த வாரம் எப்படியாவது அசீம் கூட சேர்ந்து கொண்டால் அவரது ரசிகர்கள் நமக்கும் ஓட்டுப் போடுவார்கள் என நினைத்த மகேஸ்வரி அசீமுக்கு ஆதரவாகவும் தனலட்சுமிக்கு எதிராகவும் பேசி வருவதை பார்த்த ரசிகர்கள் மகேஸ்வரிக்கு ஏன் ஓட்டுப் போட மாட்டுறாங்கன்னு இப்போ புரியுது என கமெண்ட் போட்டு வருகின்றனர்.

ரெட் கார்டு கொடுங்க கமல்

ரெட் கார்டு கொடுங்க கமல்

கடந்த வாரமே அசீமுக்கு ரெட் கார்டு கொடுத்து வெளியே அனுப்பி இருக்க வேண்டும். ஆயிஷாவை வாடி போடின்னு பேசியதற்கு போட்டியாளர்கள் அனைவரும் ரெட் கார்டு கொடுத்தனர். ஆனால், கமல் கொடுக்காமல் காப்பாற்றினார். ஆனால், இந்த வாரம் தனலட்சுமியிடம் தகாத முறையில் அசீம் நடந்து கொண்டதற்கு எதிராக அவருக்கு கண்டிப்பாக ரெட் கார்டு கொடுக்க வேண்டும் என்றும் அசீம் மாதிரி ஒரு கேரக்டர் எல்லாம் ஏன் தான் பிக் பாஸ் வீட்டுக்கு அனுப்பினாங்களோ என நெட்டிசன்கள் திட்டித் தீர்த்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X