For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  தனுசுக்கு போட்டியா வர சொன்னா.. தனுஷாவே வந்துட்டாரே.. சிம்புவை பங்கமாக கலாய்க்கும் நெட்டிசன்ஸ்!

  |

  சென்னை: வந்தா ராஜாவாதான் வருவேன் படத்தில் உடல் எடை அதிகரித்து விட்டதாக நடிகர் சிம்புவை பலரும் பாடி ஷேமிங் செய்தனர்.

  பழையபடி சிம்புவால் நடனமாடக் கூட முடியவில்லை என்று பயங்கரமாக கிண்டல் செய்தனர்.

  பா.ரஞ்சித் அடுத்து இயக்க போவது யாரை...அடுத்தடுத்து வெளியாகும் தகவல்கள் பா.ரஞ்சித் அடுத்து இயக்க போவது யாரை...அடுத்தடுத்து வெளியாகும் தகவல்கள்

  திடீரென ஈஸ்வரன் படத்திற்காக ஆளே மாறி ஒல்லி பெல்லியாக சிம்பு வந்ததை பார்த்து ஒட்டுமொத்த தமிழ் சினிமாவும் மிரண்டு போனது. இந்நிலையில், அதையும் தாண்டி சமீபத்தில் வெளியான வெந்து தணிந்தது காடு படத்திற்காக நடிகர் சிம்பு அடைந்துள்ள உருமாற்றம் வியக்க வைக்கிறது.

  15 கிலோ எடை குறைப்பு

  15 கிலோ எடை குறைப்பு

  அலை படத்தில் பார்த்த சிம்புவை மீண்டும் இத்தனை வருடங்கள் கழித்து பார்ப்பது போல சுமார் 15 கிலோ எடை குறைத்து இயக்குநர் கெளதம் மேனன் இயக்கும் வெந்து தணிந்தது காடு படத்திற்காக அக்னி குஞ்சாக சிம்பு மாறி இருப்பது ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது.

  குவிகிறது பாராட்டு

  குவிகிறது பாராட்டு

  தனது ரசிகர்களுக்காக எதையாவது செய்து மிகப்பெரிய ஹிட் கொடுக்க வேண்டும் என தன் மீது இருந்த அவப் பெயர்களை மாற்றும் அளவுக்கு உடம்பையும் உயிரையும் உருக்கி நடிகர் சிம்பு யாருமே நினைத்துக் கூட பார்க்க முடியாத அளவுக்கு மாறி இருப்பதை பார்த்த பலரும் அவரை பாராட்டி வருகின்றனர்.

  எப்படி இருந்த நான் இப்படி ஆகிட்டேன்

  எப்படி இருந்த நான் இப்படி ஆகிட்டேன்

  முன்னதாக நதிகளிலே நீராடும் சூரியன் என டைட்டில் வைக்கப்பட்டு இருந்த நிலையில், திடீரென கதையையும் மாற்றி டைட்டிலையும் மாற்றி வெந்து தணிந்தது காடு என மாற்றியுள்ளார் இயக்குநர் கெளதம் மேனன். சிம்புவின் தோற்றத்தை பார்த்த ரசிகர்கள் எப்படி இருந்த நான் இப்படி ஆகிட்டேன் என டைட்டில் வைத்திருந்தால் பக்கவாக இருக்கும் என கலாய்த்து வருகின்றனர்.

  குவிகிறது ட்ரோல்

  குவிகிறது ட்ரோல்

  ஒரு பக்கம் பாராட்டுக்கள் குவிந்தால் இன்னொரு பக்கம் சிம்புவின் ஹேட்டர்ஸ் மற்றும் தனுஷ் ரசிகர்கள் கிண்டல் செய்யாமல் இருப்பார்களா என்ன? சிம்புவின் டிரான்ஸ்ஃபர்மேஷன் ட்வீட்டுக்கு கீழே ஆயிரத்திற்கும் மேற்பட்ட கமெண்ட்டுகள் போட்டு அவரை கலாய்த்து வருகின்றனர்.

  தனுஷாவே மாறிட்டார்

  தனுஷாவே மாறிட்டார்

  சிம்பு ரசிகர்களுக்கும் தனுஷ் ரசிகர்களுக்கும் இடையே தான் சினிமாவில் அப்போது இருந்து இப்போது வரை போட்டியாக இருக்கிறது. இந்நிலையில், தனுசுக்கு போட்டியா வாங்கன்னு சொன்னா.. இவரு தனுஷாவே மாறிட்டாரே என சில நெட்டிசன்கள் பங்கமாக கலாய்த்துள்ளனர்.

  என்ன வியாதி

  என்ன வியாதி

  திடீரென இப்படி துரும்பாய் இளைத்து போய் இருக்கும் சிம்புவை பார்த்து.. ஆஹா. என்ன வியாதியா வந்தது என்றும் சில நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகின்றனர். உடல் நலம் தான் முக்கியம் சிம்பு, உடம்பை நல்லா பார்த்துக்கோங்க.. ஏதாவது செய்ய போய் ஏடாகூடம் ஆகிடப் போகுது என்றும் ஃப்ரீ அட்வைஸ்களும் பறக்கின்றன.

  STR என்ன பாலா பட HEROவா மாறிட்டாரு! அடையாளமே தெரியலயே Simbu | Oneindia Tamil
  பின்றான்ல

  பின்றான்ல

  விட்ட இடத்தை பிடிக்க வேண்டும் என வித விதமான வித்தியாசமான முயற்சிகளையும் கதைகளையும் நடிகர் சிம்பு தேர்வு செய்து நடித்து வருகிறார். உடல் எடையை குறைத்து வெரைட்டி காட்ட வேண்டும் என அவர் எடுத்துள்ள முயற்சியை பார்த்து பின்றான்ல என இந்த நெட்டிசன் பாராட்டி உள்ளார்.

  அழ வச்சிட்ட தலைவா

  அழ வச்சிட்ட தலைவா

  உண்மையாவே இந்த இரு போட்டோவையும் பார்த்த பிறகு எனக்கு வார்த்தையே வரலை.. கண்ணீர் தான் வருது.. அழ வச்சிட்ட தலைவா.. உன்னோட ரசிகனா இருக்கிறதுக்காக நான் உண்மையாவே பெருமைப்படுறேன்.. நீ வா தலைவா. என சிம்பு ரசிகர்கள் சிம்புவின் இந்த உருமாற்றத்தை கொண்டாடி வருகின்றனர்.

  English summary
  Actor Silambarasan TR shares his before and after transformation for his upcoming movie Vendhu Thanindhathu Kaadu. Netizens trolled and appreciate his change over.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X