தளபதி 66 ல் விஜய்யுடன் ஜோடி சேர போறது இவர் தானா?...செம போட்டியா இருக்கே

சென்னை : தளபதி 66 படத்தில் விஜய்யுடன் ஜோடி சேர போகிறவர் யார் என ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கையில், வாரம் ஒரு நடிகையின் பெயர் சொல்லப்பட்டு வருகிறது. இதனால் விஜய்யுடன் ஜோடி சேர போவதாக சொல்லப்படும் நடிகைகளின் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது.

விஜய்யின் பீஸ்ட் படத்தின் அப்டேட் எப்போது வரும் என ரசிகர்கள் மட்டுமல்ல பிரபலங்களே எதிர்பார்க்க துவங்கி விட்டனர். பீஸ்ட் டைரக்டர் நெல்சன் திலீப்குமாரிடம், டைரக்டர் லோகேஷ் கனகராஜ் பீஸ்ட் பட அப்டேட் கேட்டுள்ளார். ஃபஸ்ட் சிங்கிளாக அரபிக்குத்தை வெளியிட்டவர்கள் சூட்டோடு சூடாக டீசரையும் வெளியிடுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அரபிக்குத்து பாடல் ரிலீசுக்கு பிறகு அனைவரும் அப்பீட் ஆகி விட்டனர்.

பீஸ்ட் ஆடியோ ரிலீஸ் எப்போ

பீஸ்ட் ஆடியோ ரிலீஸ் எப்போ

பீஸ்ட் ஆடியோ வெளியீடு மார்ச் 20 ம் தேதி சென்னையில் மிக பிரம்மாண்டமாக நடத்தப்பட உள்ளதாகவும், இதற்காக பல முக்கிய இடங்களைச் சொல்லி சோஷியல் மீடியாவில் பலர் தகவல் பகிர்ந்து வருகின்றனர். ஆனால் அது பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதுவரை வெளியிடப்படவில்லை. மற்ற ஹீரோக்களின் பட ரிலீஸ் அப்டேட்கள் வந்து கொண்டிருப்பதால் பீஸ்ட் ரிலீஸ் எப்போது என விஜய் ரசிகர்கள் தொடர்ந்து கேட்டு வருகின்றனர்.

மிரட்டும் தளபதி 66 அப்டேட்

மிரட்டும் தளபதி 66 அப்டேட்

பீஸ்ட் அப்டேட் வரவில்லை என்றாலும் விஜய் ரசிகர்களை குஷிப்படுத்த விஜய் அடுத்ததாக நடிக்க உள்ள தளபதி 66, தளபதி 67 படங்கள் பற்றிய தகவல் வந்து கொண்டே இருக்கின்றன. தெலுங்கு, தமிழ் என இரு மொழிகளில் உருவாக்கப்பட உள்ள வம்சி பைடபள்ளி இயக்கும் தளபதி 66 படத்தை தில் ராஜு தயாரிக்க உள்ளார். இதில் பிரகாஷ்ராஜ் முக்கிய ரோலில் நடிக்க உள்ளதாகவும், வில்லனாக விவேக் ஓபராய் நடிக்க உள்ளதாகவும், விஜய்யின் மகளாக மகேஷ்பாபுவின் மகள் சித்தாரா நடிக்க உள்ளதாகவும் கூறப்பட்டது.

விஜய்க்கு ஜோடி இவரா

விஜய்க்கு ஜோடி இவரா

இதில் விஜய்க்கு ஜோடியாக முதலில் கீர்த்தி சுரேஷ் நடிக்க உள்ளதாக கூறப்பட்டது. ஆனால் அது இல்லை என அவரே மறுத்து விட்டார். அதன் பிறகு கியாரா அத்வானி நடிப்பதாக கூறினார்கள். கடந்த வாரம் ராஷ்மிகா மந்தனா நடிக்க உள்ளதாக கூறப்பட்டது. ஆனால் லேட்டஸ்ட் தகவலாக இதில் விஜய்க்கு ஜோடியாக, பட்டாஸ் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்த மெஹ்ரீன் பிர்சாடா நடிக்க போவதாக சொல்லப்படுகிறது. இவர் தெலுங்கிலும் பிரபலமான நடிகையாக இருப்பதால் இவரை தான் நடிக்க வைக்க படக்குழு திட்டமிட்டுள்ளதாம்.

ஓ...இது தான் பிளானா

ஓ...இது தான் பிளானா

தளபதி 66 படத்தின் ஷுட்டிங் மே மாதம் துவங்க உள்ளதாகவும், பூஜையன்று படத்தின் டைட்டிலை வெளியிடவும் படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. படத்தின் ஹீரோயின் உள்ளிட்ட பல அப்டேட்களை விரைவில் அடுத்தடுத்து வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக ஹீரோயினாக நடிக்க உள்ளவர் தமிழ், தெலுங்கு இரண்டிலும் பிரபலமானவராக இருக்க வேண்டும் என நினைத்து பல நடிகைகளிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறதாம். ஹீரோயின் யார் என்பது முடிவானதும் அடுத்த அப்டேட்டை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X