»   »  சேச்சே.. தனுஷை நாங்க கூப்பிடவே இல்லையே... "அடல்ட்ஸ் ஒன்லி" இயக்குநர் பைசல்

சேச்சே.. தனுஷை நாங்க கூப்பிடவே இல்லையே... "அடல்ட்ஸ் ஒன்லி" இயக்குநர் பைசல்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பார் அடல்ட்ஸ் ஒன்லி படத்தில் நடிக்கக் கோரி நடிகர் தனுஷை நாங்கள் அணுகவில்லை என்று அப்படத்தின் இயக்குநர் பைசல் சைப் கூறியுள்ளார்.

அதேசமயம், கிம் கர்தஷியானை அணுகியதாகவும், அவர் நிச்சயம் நடிக்க சம்மதிப்பார் என நம்புவதாகவும் அவர் கூறியுள்ளார்.

சைப் இயக்கும் புதிய படம் பார் அடல்ட்ஸ் ஒன்லி. இந்தியாவின் முதல் பலான படம் என்ற பெயரை இதற்குச் சூட்டியுள்ளனர் திரயுலகினர். இந்தி, தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் இது உருவாகிறது.

தனுஷ் பெயர்

தனுஷ் பெயர்

இந்தப் படத்தில் தனுஷ் நடிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. தனுஷ் எப்படி இதில் நடிப்பார், அவருக்கு என்ன வேடம், கிம் கர்தஷியானுக்கு ஜோடியாமே என்றெல்லாம் பேச்சுக்கள் எழுந்தன.

அதெல்லாம் இல்லை

அதெல்லாம் இல்லை

ஆனால் இயக்குநர் சைப் இதை மறுத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் தனுஷ் அருமையான நடிகர். அதில் சந்தேகமே தேவையில்லை. ஆனால் இந்தப் படத்திற்காக நாங்கள் அவரை அணுகவில்லை.

கிம்மைக் கூப்பிட்டுள்ளோம்

கிம்மைக் கூப்பிட்டுள்ளோம்

அதேசமயம், கிம் கர்தஷியானை நாங்கள் அணுகியுள்ளோம். அனைத்தும் நன்றாகப் போனால் அவரும் இப்படத்தில் இடம் பெறுவார் என்றார் சைப்.

தமிழ் நடிகர் நிச்சயம் உண்டு

தமிழ் நடிகர் நிச்சயம் உண்டு

சைப் மேலும் கூறுகையில், இந்தப் படம் தமிழிலும் தயாரிக்கப்படுகிறது. எனவே நிச்சயம் ஒரு தமிழ் நடிகரும் இருப்பார். ஆனால் யாரையும் இன்னும் நாங்கள் முடிவு செய்யவில்லை என்றார் அவர்.

ஆண்டிரியா ரெடி

ஆண்டிரியா ரெடி

இப்படத்தில் துபாயைச் சேர்ந்த ஆண்டிரியா டிசோசா ஹீரோயினாக நடிக்கவுள்ளார். ஏற்கனவே அவர் ஒப்பந்தத்தில் கையெழுத்துப் போட்டு விட்டார். தற்போது நாயகனையும், முக்கிய கேரக்டர்களுக்கு ஆட்களையும் தேடி வருகிறார்களாம்.

English summary
Filmmaker Faisal Saif admires Dhanush as an actor, but clarifies that he never approached him for a role in his upcoming multi-lingual film “For Adults Only”, which is likely to feature American TV reality star Kim Kardashian in a cameo.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil