வாத்தி கம்மிங், அரபிக்குத்து வரிசையில் பிச்சு உதறும் மாறன் ப்ரோமோஷன்

சென்னை : விஜய் நடித்த மாஸ்டர் படத்தில் வரும் வாத்தி கம்மிங், பீஸ்ட் அரபிக்குத்து வரிசையில் தற்போது தனுஷ் நடிக்கும் மாறன் படத்திற்கும் வேற லெவலில் ப்ரோமோஷன் நடந்து வருகிறது. அதுவும் மக்களை கவரும் வகையில் வித்தியாசமாக ப்ரோமோஷன் செய்து வருகின்றனர்.

டைரக்டர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம் மாறன். சத்யஜோதி ஃபிலிம்ஸ் பேனரில் டி.ஜி.தியாகராஜன் இந்த படத்தை தயாரித்துள்ளார். தனுஷ், மாளவிகா மோகனன், சமுத்திரக்கனி உள்ளிட்டோர் நடித்துள்ள இந்த படம் டிஸ்னி ப்ளஸ் ஹாட் ஸ்டாரில் மார்ச் 11 ம் தேதி ரிலீசாக உள்ளது. இந்த படத்திற்கு திரைக்கதை மற்றும் வசனங்களை சுஹாஸ்-ஷார்ஃபு மற்றும் பாடலாசிரியர் விவேக் ஆகியோர் எழுதி இருந்தனர்.

தனுஷ் பாடிய பொல்லாத உலகம்

தனுஷ் பாடிய பொல்லாத உலகம்

தனுஷ் முதல் முறையாக பத்திரிக்கையாளராக நடித்துள்ள படம். அரசியல் அநியாயங்களை தட்டிக் கேட்கும் பத்திரிக்கையாளரை பற்றியது தான் மாறன் படம் என சொல்லப்படுகிறது. விவேக் வரிகளில் அமைக்கப்பட்டுள்ள இரண்டு பாடல்களுக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். இதில் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ள பொல்லாத உலகம் பாடலை தனுஷே பாடி உள்ளார்.

வாத்தி கம்மிங் ஸ்டைலில் ப்ரோமோஷன்

வாத்தி கம்மிங் ஸ்டைலில் ப்ரோமோஷன்

மாறன் படம் ஓடிடியில் ரிலீசாவதாக இருந்தாலும் ப்ரோமோஷன் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. வாத்தி கம்மிங், அரபிக்குத்து பாடல்களை எப்படி பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் ஒலிக்கச் செய்து ப்ரோமோஷன் செய்தார்களோ அதே ஸ்டைலில் மாறன் படத்திற்கும் பெரிய மால்களில் பொல்லாத உலகம் பாடலை ஒலிக்கச் செய்து, அதற்கு டான்ஸ் குரூப்பை சேர்ந்த சிலர் ஆடி வருகின்றனர். இது மாதிரியான ப்ரோமோஷன் ரசிகர்களையும் அதிகம் கவர்ந்துள்ளது.

தனுஷுக்கு இது ஒன்னும் புதுசு இல்லை

தனுஷுக்கு இது ஒன்னும் புதுசு இல்லை

மால்கள், நகரின் முக்கிய பகுதிகளில் பாடலை ஒலிக்கச் செய்து, அதற்கு டான்ஸ் ஆடி ப்ரோமோஷன் செய்வது தனுஷ் படத்திற்கு இது முதல் முறையல்ல. ஏற்கனவே 3 படத்திற்கும் இதே போல் ஒய் திஸ் கொலவெறி பாடலை பொது இடத்தில் ஒலிக்கச் செய்து ப்ரோமோஷன் செய்தனர். அதுவும் நம் நாட்டில் மட்டுமல்ல வெளிநாட்டிலும் இதே முறையில் ப்ரோமோஷன் செய்தனர்.

அட...இதெல்லாம் சொல்லவேயில்ல

அட...இதெல்லாம் சொல்லவேயில்ல

யூட்யூப்பில் அரபிக்குத்து பாடல் ரிலீஸ் செய்யப்படுவதற்கு முன் அதிக பார்வைகளை பெற்ற பாடலாக பொல்லாத உலகம் பாடல் தான் இருந்தது. இந்த பாடல் 7.8 மில்லியன் பார்வைகளை 24 மணி நேரத்தில் பெற்றிருந்தது. தனுஷின் பொல்லாத உலகம் பாடலின் சாதனையை தான் விஜய்யின் அரபிக்குத்து முறியடித்துள்ளது. ஒரே பாடலே ரசிகர்களை இந்த அளவிற்கு கவர்ந்துள்ளதால் படத்தை பார்க்க தனுஷ் ரசிகர்கள் ஆர்வமாக காத்திருக்கிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X