»   »  மீண்டும் இயக்குநராகும் தனுஷ்... அடுத்த படத்தின் அதிரடி அறிவிப்பு! #Dhanush37

மீண்டும் இயக்குநராகும் தனுஷ்... அடுத்த படத்தின் அதிரடி அறிவிப்பு! #Dhanush37

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை : நடிகர் தனுஷ் தற்போது 'வடசென்னை', 'எனை நோக்கி பாயும் தோட்டா' ஆகிய படங்களில் நடித்து வருகிறார். 'மாரி 2' படம் ஷூட்டிங் நடைபெற இருக்கிறது.

இந்நிலையில் ஏற்கெனவே ஶ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்துக்கு தனுஷ் கால்ஷீட் கொடுத்துள்ளார் என்ற செய்தி பரவி வந்தது.

அந்தத் தகவலை நேற்று தனது ட்விட்டர் சமூக வலைதளத்தில் வெளியிட்ட ட்வீட்டின் மூலம் உறுதிசெய்துள்ளார் தனுஷ்.

இயக்குநராகும் தனுஷ்

'ப. பாண்டி' படத்துக்கு பிறகு மீண்டும் இந்த படத்தின் மூலம் இயக்குனர் அவதாரம் எடுக்கிறார் தனுஷ். அதுமட்டுமில்லாமல் அவரே இப்படத்தில் ஹீரோவாக நடிக்கவும் செய்கிறார். இந்தப் படத்தை ஶ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

தனுஷின் 37-வது படம்

தனுஷின் 37-வது படம்

'துள்ளுவதோ இளமை' படத்தின் மூலம் 2002-ம் ஆண்டு நடிகராக அறிமுகமான தனுஷின் 37-வது படமாக இந்தத் திரைப்படம் உருவாகிறது. 15 ஆண்டுகளில் பல சாதனைகளைப் புரிந்து முன்னணி நடிகராக வளர்ந்திருக்கிறார் தனுஷ்.

இயக்குநர் தனுஷ்

இயக்குநர் தனுஷ்

நடிகராக தமிழில் கலக்கிய தனுஷ், பாலிவுட்டிலும் அறிமுகமாகி பாராட்டு பெற்றார். அடுத்து தயாரிப்பாளர் அவதாரம் எடுத்து 'வுண்டர்பார் பிலிம்ஸ்' நிறுவனத்தைத் தொடங்கினார். 'ப.பாண்டி' படத்தின் மூலம் இயக்குநராகி வரவேற்பைப் பெற்றவர் தற்போது தனது இரண்டாவது படத்தை இயக்கவிருக்கிறார்.

ஹாலிவுட்டில் தனுஷ்

ஹாலிவுட்டில் தனுஷ்

'எக்ஸ்டிரானரி ஜர்னி ஆஃப் ஃபாகிர்' படத்தின் மூலம் இப்போது ஹாலிவுட்டிலும் அடியெடுத்து வைத்திருக்கிறார் தனுஷ். இந்தப் படம் வரும் ஆண்டில் ரிலீஸாக இருக்கிறது. இதன் மூலம் ஹாலிவுட் நடிகராகவும் வலம் வர இருக்கிறார்.

English summary
Actor Dhanush is currently acting in films like 'Vada chennai' and 'Enai nokki payum thotta. Dhanush has announced his next film. Dhanush's next directorial venture with sri thenandal films. Besides, he is acting as a hero in this film.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X