»   »  தனுஷ், சிவகார்த்திகேயன் செய்த செயலால் ரசிகர்கள் அதிர்ச்சி

தனுஷ், சிவகார்த்திகேயன் செய்த செயலால் ரசிகர்கள் அதிர்ச்சி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: மவுன போராட்டத்தில் தனுஷ், சிவகார்த்திகேயன் செய்த காரியத்தை பார்த்து ரசிகர்களே அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

சின்னத் திரையில் இருந்து பெரிய திரைக்கு வந்த சிவகார்த்திகேயனை வளர்த்து விட்டு அழகு பார்த்தவர் தனுஷ். பின்னர் இருவருக்கும் இடையே மனக்கசப்பு ஏற்பட்டு பிரிந்துவிட்டனர்.

இதற்கிடையே தனுஷ் அனிருத்தையும் கழற்றிவிட்டார்.

அனிருத்

அனிருத்

தனுஷை பிரிந்த பிறகு சிவகார்த்திகேயனின் ஆஸ்தான இசையமைப்பாளராக உள்ளார் அனிருத். இந்நிலையில் அடுத்த ஆண்டு மீண்டும் தனுஷுடன் சேர்ந்து பணியாற்றப் போவதாக தெரிவித்துள்ளார் அனிருத்.

எதிர்பார்ப்பு

எதிர்பார்ப்பு

தனுஷும், அனிருத்தும் சேரவிருப்பதை பார்த்த ரசிகர்கள் அப்படியே சிவகார்த்திகேயனும் சேர்ந்துவிட மாட்டாரா என்று எதிர்பார்த்தனர். இந்நிலையில் தான் இன்று அந்த அதிசயம் நடந்துள்ளது.

பேச்சு

பேச்சு

காவிரி மற்றும் ஸ்டெர்லைட் விவகாரங்களுக்காக திரையுலகினர் நடத்திய மவுன போராட்டத்தில் சிவகார்த்திகேயனும், தனுஷும் அருகருகே அமர்ந்தது மட்டும் அல்லாமல் ஜாலியாக பேசிக் கொண்டனர்.

அதிர்ச்சி

அதிர்ச்சி

தனுஷும், சிவகார்த்திகேயனும் பேசிக் கொண்டதை பார்த்தால் எதிரியாக இருப்பவர்கள் பேசுவது போன்று இல்லை. ரொம்ப நாட்களாக நண்பர்களாக இருப்பவர்கள் பேசுவது போன்று இருந்ததை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். ஒன்றாக இருந்து கொண்டு ஊருக்கு முன்பு பிரச்சனை என ஏன் நடித்தார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது.

English summary
Actors Dhanush and Sivakarthikeyan who behave as though they are not in talking terms have stunned the fans today at celebs protest held in Valluvar Kottam.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X