பட்டையை கிளப்பும் சன் பிக்சர்ஸ் அப்டேட்ஸ்...டி 44 டைட்டில் வெளியாகும் தேதியும் வந்தாச்சு

சென்னை : தனுஷ் தான் நடிக்கும் படங்களின் வேலைகளை முடித்து விட்டு, அடுத்தடுத்த படங்களின் வேலைகளில் இறங்கி வருகிறார். தி கிரேமேன் படத்தில் நடித்து முடித்த கையோடு டி 43 படத்தின் வேலைகளை துவக்கி, தற்போது ஐதராபாத்தில் ஷுட்டிங் நடைபெற்று வரும் இந்த படம் இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. கார்த்திக் நரேன் இயக்கும் டி 43 படத்தை சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரிக்கிறது.

கடந்த வாரம் தனுஷின் பிறந்தநாளை முன்னிட்டு டி 43 படத்தின் ஃபஸ்ட்லுக் போஸ்டர் டைட்டிலுடன் வெளியிடப்பட்டது. இந்த படத்திற்கு மாறன் என பெயரிட்டுள்ளனர். இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடிக்கிறார். இவர்கள் இருவருமே பத்திரிக்கையாளர்களாக நடிக்கிறார்கள். இதை காட்டும் விதமாக ஃபஸ்ட்லுக்கில் தனுஷ், ஒரு கையில் பேனாவுடனும், மற்றொரு கையால் ஒருவரின் தலையை கண்ணாடியில் மோதச் செய்வது போலவும் அமைக்கப்பட்டுள்ளது.

சுற்றிலும் செய்தித்தாள்கள் சிதறிக் கடக்க, உடைந்து சிதறும் கண்ணாடியில் 4 விதமான எக்ஸ்பிஷன்களுடன் தனுஷின் முகம் தெரிவது போலவும் இந்த ஃபஸ்ட்லுக் அமைக்கப்பட்டிருந்தது. இந்த படத்தில் மகேந்திரன், சமுத்திரக்கனி, ஸ்மிருதி வெங்கட் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். விரைவில் இந்த படத்தின் ஷுட்டிங் நிறைவடைய உள்ளது.

டி 44 அப்டேட்டும் வந்தாச்சு

டி 44 அப்டேட்டும் வந்தாச்சு

இதற்கிடையில் தனுஷ் அடுத்ததாக நடிக்க உள்ள டி 44 படம் பற்றிய அப்டேட்கள் வந்து கொண்டே இருக்கின்றன. 3 நாட்களுக்கு முன்பு தான், டி 44 படம் ஆகஸ்ட் 6 ம் தேதி பூஜையுடன் துவங்கப்பட உள்ளதாகவும், இதில் தனுஷுக்கு ஜோடியாக இரண்டு ஹீரோயின்கள் நடிக்கிறார்கள் என்றும் அப்டேட் வெளியானது. அதைத் தொடர்ந்து சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் மித்ரன் ஜவஹர் இயக்கும் இந்த படத்தில் ஹீரோயின்களாக ராஷி கன்னா மற்றும் நித்யா மேனன் நடிக்க உள்ளதாக கூறப்பட்டது.

அத்தனையும் தனுஷ் தானா

அத்தனையும் தனுஷ் தானா

கல்லூரி காலம் மற்றும் வாழ்க்கையின் பிற்பகுதி என இரண்டு கால கட்டங்களில் நடப்பது போன்று எடுக்கப்பட உள்ள இந்த படத்திற்கு தனுஷே கதை, திரைக்கதை, வசனம் எழுத போவதாக சொன்னார்கள். இந்நிலையில் இந்த படம் பற்றி நேற்று ஒரே நாளில் அடுத்தடுத்து அப்டேட் வெளியிட்டு அசத்தி உள்ளனர் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தினர்.

டைட்டில் எப்போது வருது

டைட்டில் எப்போது வருது

நேற்று காலையில் டி 44 படத்தில் பாரதிராஜா நடிக்க உள்ளதாக அப்டேட் வெளியிட்டனர். சிறிது நேரத்திலேயே பிரகாஷ் ராஜும் நடிக்க போவதாக அடுத்த அப்டேட் வெளியிட்டனர். மாலையில் மூன்றாவது ஹீரோயினாக பிரியா பவானி சங்கர் நடிக்க உள்ளதாக அடுத்த அப்டேட் வெளியிட்டனர். இந்த ஆச்சரியங்களில் இருந்து மீண்டு வருவதற்குள், அடுத்த இன்ப அதிர்ச்சியாக இன்று மாலை 6 மணிக்கு தனுஷ் நடிக்கும் டி 44 படத்தின் டைட்டில் வெளியிடப்பட உள்ளதாக அறிவித்துள்ளனர்.

ஒரே நாளில் இத்தனை அப்டேட்டா

ஒரே நாளில் இத்தனை அப்டேட்டா

இந்த அப்டேட்கள் அனைத்தும் சாதாரணமாக அல்ல. ஒவ்வொரு நடிகர் பற்றிய அறிவிப்பிற்கும் தனித்தனி வீடியோவாக அப்டேட்டை வெளியிட்டு வருகிறது சன் பிக்சர்ஸ். இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சன் பிக்சர்ஸ் வெளியிட்டுள்ள டி 44 அப்டேட் வீடியோக்களுக்கு லைக்கள் குவிந்து வருகிறது.

ஆவலாக காத்திருக்கும் ரசிகர்கள்

ஆவலாக காத்திருக்கும் ரசிகர்கள்

படம் பூஜை போடுவதற்கு முன்பே அடுத்தடுத்து இத்தனை அப்டேட், படத்தின் டைட்டில் என அனைத்தையும் வெளியிட்டு வருவதால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. டைட்டில் வர போகிறது என்ற அறிவிப்பே இப்படி மாஸாக இருக்கிறது என்றால் டைட்டில், ஃபஸ்லுக், டீசர், டிரைலர் எல்லாம் எப்படி இருக்கும் என பிரம்மிப்பில் உள்ளனர் தனுஷ் ரசிகர்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X