10 வருடத்துக்கு பின் இணைய போகிறதா தனுஷ் - மித்ரன் ஆர்.ஜவஹர் கூட்டணி!?

சென்னை: தனுஷ் நடிப்பில் சமீபத்தில் Netflix ல் ஜகமே தந்திரம் வெளியானது. படம் பெரிய அளவில் வரவேற்பை பெற்றது.

ஒரு புறம் கோலிவுட், பாலிவுட், ஹாலிவுட் என தனுஷ் தொடர்ந்து பிஸியாக படங்களில் நடித்து வருகிறார்.

மறு புறம் தனுஷின் பட வரிசை நீண்டு கொண்டே போகிறது. தனுஷின் மார்கெட்டும் உயர்ந்து கொண்டு போகிறது.

நாடு திரும்பினார்

நாடு திரும்பினார்

The Gray Man படத்தில் நடிக்க தனுஷ் வெளிநாட்டிற்கு சென்று அங்கு படப்பிடிப்பு பணிகளை முடித்து அண்மையில் நாடு திரும்பினார். நாடு திரும்பிய தனுஷ் ஹைதராபாத்தில் கார்த்திக் நரேன் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். க்ரைம் த்ரில்லர் கதைகளத்தை கொண்டு இந்த படம் தயாராகி வருகிறது. இந்த படத்தின் பணிகளை முடித்த உடன் தனுஷ் தமிழகம் திரும்பவுள்ளதாக தெரிகிறது.

சன் பிக்ச்சர்ஸ்

சன் பிக்ச்சர்ஸ்

இதற்கிடையில் தனுஷின் 44வது படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது என அறிவிப்பு வெளியாகியது. நீண்ட இடைவெளிக்கு பின்னர் இந்த படத்தில் தனுஷ் - அனிருத் கூட்டணி இணைந்துள்ளது. எனவே இந்த படத்தின் மேல் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

மூன்று ஹீரோயின்

மூன்று ஹீரோயின்

#D44 படத்தின் இயக்குனர் & படத்தில் நடிக்கவுள்ள நடிகர்கள் குறித்து எந்த அறிவிப்பும் இதுவரை வெளியாகவில்லை. இந்நிலையில் இந்த படத்தை மித்ரன் ஆர்.ஜவஹர் இயக்கவுள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த படத்தில் மூன்று ஹீரோயின் நடிக்கவுள்ளதகவும் பேசப்படுகிறது.

தனுஷின் பிறந்தநாள்

தனுஷின் பிறந்தநாள்

மித்ரன் ஆர்.ஜவஹர் தனுஷின் யாரடி நீ மோகினி, குட்டி படங்களை இயக்கிய இயக்குனர் என்பதால் இந்த கூட்டணிக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்கும் என தெரிகிறது. வருகின்ற ஜூலை 28ம் தேதி தனுஷின் பிறந்தநாள் என்பதால், அன்று இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது.


More from Filmibeat

Read more about: dhanush தனுஷ்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X