»   »  தனுஷின் கொடி 'அணு ஆலை' தொடர்பான கதையா?

தனுஷின் கொடி 'அணு ஆலை' தொடர்பான கதையா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தனுஷ் நடிப்பில் உருவாகியிருக்கும் 'கொடி' அணு ஆலை தொடர்பான கதை என்று கிசுகிசுக்கப்படுகிறது.

தனுஷ், திரிஷா, அனுபமா பரமேஸ்வரன் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் 'கொடி'. தனுஷ் முதன்முறையாக இரட்டை வேடமேற்று நடித்திருக்கும் இப்படத்தில் அவர் அரசியல்வாதியாக நடித்திருக்கிறார்.

Dhanush-Trisha's Kodi Story Revealed

அதேபோல திரிஷாவும் இதில் அரசியல்வாதியாக நடித்திருக்கிறார். துரை.செந்தில்குமார் இயக்கத்தில் தனுஷ் சொந்தமாகத் தயாரித்திருக்கும் இப்படத்தின் வெளியீட்டுத் தேதி இன்னும் அறிவிக்கப்படாமலேயே உள்ளது.

இந்நிலையில் இப்படத்தின் கதை குறித்து ஒருசில தகவல்கள் கசிந்துள்ளன. கிராமம் ஒன்றில் அணு ஆலையை நிறுவிட முயலும்போது அதனால் ஏற்படும் தீங்குகளை எண்ணி கிராம மக்கள் அதனை எதிர்க்கின்றனர்.

கிராம மக்களின் எதிர்ப்பை மீறி அணு உலை அங்கு நிறுவப்பட்டதா? இல்லையா? என்பதே படத்தின் முக்கியக் கதை என்று கூறுகின்றனர். நிஜ சம்பவங்களின் தொகுப்பை வைத்து இப்படத்தை துரை.செந்தில்குமார் இயக்கியிருக்கிறாரா? என்பது தெரியவில்லை.

சந்தோஷ் நாராயணன் இசையில் உருவாகியிருக்கும் 'கொடி', 'தொடரி' படத்துக்குப் பின் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

English summary
Sources Said Dhanush's Kodi Story Based on Nuclear Plant.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil