Idli Kadai day 5 Collection - தனுஷின் இட்லி கடை சூப்பர்.. ஐந்தாம் நாள் வசூல் இதோ.. செமயா கல்லா கட்டுதே

சென்னை: தனுஷே இயக்கி நடித்திருக்கும் இட்லி கடை திரைப்படம் கடந்த ஒன்றாம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இதில் அவருடன் ராஜ்கிரண், சத்யராஜ் என சீனியர்களும் அருண் விஜய், நித்யா மேனன், ஷாலினி பாண்டே என ஜூனியர்களும் களமிறங்கியிருந்தார்கள். படத்துக்கு ரசிகர்கள் தங்களது அமோக ஆதரவை கொடுத்துவருகிறார்கள். இந்நிலையில் ஐந்தாம் நாளான நேற்று படத்தின் வசூல் நிலவரம் குறித்து தகவல் வெளியாகியிருக்கிறது.

நடிகர் தனுஷ் இயக்கிய பவர் பாண்டி, ராயன், நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் ஆகிய படங்களில் ப.பாண்டி மட்டும்தான் ஹிட்டடித்தது. மற்ற இரண்டு படங்களும் தோல்வியையே சந்தித்தன. அதேபோல் அவர் நடிகராக நடித்த படங்களிலும் கடைசியாக திருச்சிற்றம்பலம்தான் ஹிட்டானது. எனவே இயக்குநராகவும், நடிகராகவும் ஒரு வெற்றியை பதிவு செய்தே ஆக வேண்டும் என்ற நோக்கத்தில் இருந்தார் அவர்.

இட்லி கடை: இப்படிப்பட்ட நிலைமையில்தான் இட்லி கடை படத்தை அவரே இயக்கி, நடித்திருக்கிறார். படத்தை டான் பிக்சர்ஸ் தயாரிக்க ஜிவி பிரகாஷ் இசையமைத்திருக்கிறார். பெரிய நட்சத்திர பட்டாளமே இந்தப் படத்தில் கமிட்டானது. தனுஷின் இயக்கம் என்பதால் பெரிய எதிர்பார்ப்புடன் படமானது கடந்த ஒன்றாம் தேதி திரையரங்குகளில் வெளியானது. அதீத நம்பிக்கையுடன் ரசிகர்கள் படம் பார்க்க சென்றார்கள்.

Dhanush s Idli Kadai Fifth Day Box Office Collection Report Here are Details
Photo Credit:

சூப்பர் ஆதரவு: படத்தை பார்த்த ரசிகர்களுக்கு திருப்தியே கிடைத்திருக்கிறது. தனுஷுக்குள் இப்படி ஒரு இயக்குநர் இருக்கிறாரா என்று ஆச்சரியப்படுத்தான் போனார்கள். ஃபீல் குட் படமாக வந்திருக்கும் இட்லி கடையை கண்டிப்பாக குடும்பங்கள் கொண்டாடும் என்று ஆரூடம் கூறினார்கள். அதன்படியே இப்படம் குடும்பங்கள் கொண்டாடும் வெற்றியை பெற்றிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

போட்டிக்கு வந்த காந்தாரா: ஒன்றாம் தேதி இட்லி கடை ரிலீஸான சூழலில் இரண்டாம் தேதி காந்தாரா - சாப்டர் 1 திரைப்படம் வெளியானது. ஏற்கனவே இதன் முதல் பாகம் மெகா ப்ளாக் பஸ்டர் என்பதால் இதன் மீதும் வானளவு ஹைப் இருந்தது. எனவே காந்தாராவின் வருகை இட்லி கடை படத்துக்கு பின்னடைவாக இருக்குமோ என்று D ரசிகர்கள் பயந்தார்கள். ஆனால் நல்வாய்ப்பாக அப்படி எதுவும் அமையவில்லை.

வசூலிலும் சூப்பர்: விமர்சன ரீதியாக மட்டுமின்றி வசூல் ரீதியாகவும் இட்லி கடைக்கு நல்ல ரெஸ்பான்ஸ்தான். முதல் நாளில் மட்டும் அந்தப் படம் இந்திய அளவில் 11 கோடி ரூபாயை வசூலித்ததாக கூறப்பட்டது. இதற்கு முன்னர் வெளியான குபேரா படத்தின் முதல் நாள் வசூலைவிடவும் இதன் வசூல் அதிகம்தான். தொடர்ந்து படத்துக்கு பாசிட்டிவ் விமர்சனங்கள் வந்ததாலும், தொடர் விடுமுறை என்பதாலும் நாளுக்கு நாள் வசூல் பெரிதாக டல் அடிக்கவில்லை.

ஐந்தாம் நாள் வசூல்: இந்நிலையில் ஐந்தாம் நாளான நேற்று இட்லி கடையின் வசூல் குறித்த தகவலை Sacnilk இணையதளம் வெளியிட்டிருக்கிறடு. அதன்படி மொத்தம் ஆறு கோடி ரூபாயை அந்தப் படம் வசூலித்திருக்கிறதாம். மொத்தம் ஐந்து நாட்களில் தனுஷின் இட்லி கடை 38.60 கோடி ரூபாயை அப்படம் வசூலித்திருப்பதாக் சாக்நில்க் தெரிவிக்கிறது. விரைவில் படம் 50 கோடி ரூபாய் வசூலை கடக்கும் என்றும் நம்பப்படுகிறது. வசூலில் இட்லி கடை நல்ல ரெஸ்பான்ஸை பெறுவதால் படக்குழுவினரும், ரசிகர்களும் மகிழ்ச்சியடைந்திருக்கிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X