அல்டிமேட்ன்னு சும்மாவா சொன்னாங்க...அஜித்தை புகழ்ந்த பிரபலம்

சென்னை : அல்டிமேட்ன்னு சும்மாவா சொன்னாங்க என அஜித்குமாரை மனம் திறந்து பாராட்டியதுடன் அவருடன் எடுத்துக் கொண்ட லேட்டஸ்ட் போட்டோ ஒன்றை பிரபலம் ஒருவர் வெளியிட்டுள்ளதை ரசிகர்கள் ஆச்சரியமாக பார்த்து வருகின்றனர்.

வலிமை படத்தின் பிளாக்பஸ்டர் வெற்றிக்கு பிறகு அஜித் கடந்த ஒரு மாதமாக ஐதராபாத்தில் நடக்கும் ஏகே 61 படத்தின் ஷுட்டிங்கில் பிஸியாக இருந்து வருகிறார். போனி கபூர், ஹெச்.வினோத் கூட்டணி மூன்றாவது முறையாக இணைந்துள்ள இந்த படமும் எதிர்பார்ப்பை கிளப்பி உள்ளது. சென்னை மவுண்ட் ரோடு போன்று அமைக்கப்பட்டுள்ள செட்டில் ஷுட்டிங் நடைபெற்று வருகிறது.

இந்த பிரம்மாண்ட செட்டில் அஜித்தும், சமுத்திரக்கனியும் நடிக்கும் காட்சிகள் தற்போது படமாக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இது ஜுன் முதல் வாரம் வரை நடைபெறும் என்றும், அதற்கு பிறகு சிறிது பிரேக் விட படக்குழு திட்டமிட்டுள்ளதாகவும், அதற்கு பிறகு புதிய செட் அமைக்கப்பட்டு மீதாமுள்ள காட்சிகள் அதில் படமாக்கப்பட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

அஜித் போட்டோ பகிர்ந்த பிரபலம்

அஜித் போட்டோ பகிர்ந்த பிரபலம்

நரைத்த வெள்ளை தாடி, ஃபிட்டான உடல் என மாஸ் லுக்கில் வலம் வரும் அஜித்தின் லேட்டஸ்ட் போட்டோக்கள் அவ்வப்போது வெளியாகி டிரெண்டிங் ஆகி வருகின்றன. இந்நிலையில் அஜித் குடும்பத்துடன் தான் எடுத்துக் கொண்ட போட்டோ ஒன்றை ட்விட்டரில் பகிர்ந்துள்ளார் Cloud Nine movies நிறுத்தின் உரிமையாளர் தயா அழகிரி. சூர்யாவின் வாரணம் ஆயிரம், அஜித்தின் மங்காத்தா, கார்த்தியின் பையா, நான் மகான் அல்ல உள்ளிட்ட ஹிட் படங்களை தயாரித்தவர் இவர் தான்.

வாவ்...செம போட்டோ

வாவ்...செம போட்டோ

தயா அழகிரியின் Cloud Nine movies சார்பில் கடைசியாக 2014 ம் ஆண்டு வடகறி படம் தயாரிக்கப்பட்டது. அதற்கு பிறகு இவர்கள் எந்த படமும் தயாரிக்கவில்லை. இந்நிலையில் அஜித், அவரது மனைவி ஷாலினி, மகள் அனோஸ்கா ஆகியோருடன் தயாவும், அவரது மனைவி அனுஷா ஆகியோர் எடுத்துக் கொண்ட போட்டோ ஒன்றை ட்விட்டரில் பகிர்ந்துள்ளார் தயா அழகிரி.

சும்மாவா சொன்னாங்க அல்டிமேட்ன்னு

சும்மாவா சொன்னாங்க அல்டிமேட்ன்னு

அதோடு, சும்மாவா சொன்னாங்க அல்டிமேட்ன்னு. அவரை சுற்றி இருக்கும் எனர்ஜியை விளக்க முடியாது. மொத்தத்தில் ஆச்சரியப்பட வைக்கும் மனிதர் என அஜித்தை பாராட்டி கேப்ஷன் பதிவிட்டுள்ளார் தயா அழகிரி. இதை பார்த்த நெட்டிசன்கள், தயவு செய்து மங்காத்தா 2 தயாரிக்க சார். தயார் சார், ஏதாவது சர்ப்ரைஸ் காத்திருக்கா இல்லை வழக்கமான சாதாரண சந்திப்பு தானா. மங்காத்தா 2 படத்திற்கு வாய்ப்பிருக்கா என கேட்டுள்ளனர்.

மங்காத்தா 2 வருமா ப்ரோ

மங்காத்தா 2 வருமா ப்ரோ

இன்னும் சிலர், ப்ரோ...அஜித் சாரோட க்ளோஸ் அப் போட்டோ போடுங்க. சீக்கிரமா மங்காத்தா 2 அறிவிப்பை வெளியிடுங்க சார். அப்படியே மங்காத்தா 2 ரெடி பண்ணுங்க ப்ரோ. மங்காத்தா 2 எதிர்பார்க்கலாமா சார். இன்னொரு படம் அஜித் கூட பண்ணுங்கண்ணா. ஏகே எப்பவுமே அல்டிமேட் தான் என கமெண்ட் செய்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X