twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    வரலாற்றிலேயே முதல்முறை.. டைம்ஸ் ஸ்கொயரில் இடம்பெற்ற தமிழ் பாட்டு.. எகிறும் தீ-ன் புகழ்!

    |

    சென்னை: வரலாற்றிலேயே முதல்முறையாக ஒரு தமிழ் பாடலின் விளம்பரம் அமெரிக்காவின் டைம்ஸ் சதுக்கத்தில் இடம்பெற்றுள்ளது.

    சந்தோஷ் நாராயணன் தயாரிப்பில் பாடகி தீ மற்றும் தெருக்குரல் அறிவு இணைந்து பாடிய என்ஜாய் எஞ்சாமி பாடல் உலகளவில் பிரபலமடைந்துள்ளது.

    பயோபிக்கை இயக்கி, நடிக்கும் கங்கனா...யாருடையது தெரியுமா ? பயோபிக்கை இயக்கி, நடிக்கும் கங்கனா...யாருடையது தெரியுமா ?

    இந்நிலையில், அந்த பாடலின் ரீமீக்ஸ் பாடலை பிரெஞ்ச் ராப் இசை கலைஞர் டிஜே ஸ்நேக் உருவாக்கி உள்ளார்.

    270 மில்லியன்

    270 மில்லியன்

    இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் தயாரிப்பில் அவரது மகள் தீ மற்றும் தெருக்குரல் அறிவு இணைந்து பாடிய இண்டிபென்டன்ட் இசை ஆல்பமான என்ஜாய் எஞ்சாமி பாடல் இதுவரை 270 மில்லியன் வியூஸ் பெற்று உலகளவில் பிரபலம் ஆகி உள்ளது.

    பாடகி தீ

    பாடகி தீ

    சந்தோஷ் நாராயணன் இசையில் தொடர்ந்து ஏகப்பட்ட பாடல்களை பாடி வரும் பாடகி தீயின் வித்தியாசமான குரல் வளம் மற்றும் தெருக்குரல் அறிவின் வரிகள் மற்றும் ராப் என்ஜாய் எஞ்சாமி பாடலை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கேட்கும் விதமாகவும் பார்க்கும் விதமாகவும் மாற்றி உள்ளது.

    உலக இசை தினம்

    உலக இசை தினம்

    கடந்த ஜூன் 21ம் தேதி உலக இசை தினம் கொண்டாடப்பட்டது. உலக இசை தினத்தை முன்னிட்டு ஸ்பாட்டிஃபை இசை இணையதளத்திற்காக பிரெஞ்சு கலைஞர் டிஜே ஸ்நேக் உடன் பாடகி தீ இணைந்து என்ஜாய் எஞ்சாமி பாடலின் ரீமிக்ஸை உருவாக்கி உள்ளார்.

    டைம்ஸ் சதுக்கத்தில்

    டைம்ஸ் சதுக்கத்தில்

    உலக வரலாற்றிலேயே முதன் முறையாக அமெரிக்காவில் உள்ள டைம்ஸ் சதுக்கத்தில் பாடகி தீ மற்றும் டிஜே ஸ்நேக் உள்ளிட்டோரின் புகைப்படத்துடன் தமிழ் பாடலான என்ஜாய் எஞ்சாமி பாடலின் விளம்பரம் பிரம்மாண்டமாக ஒளிபரப்பப்பட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

    வாங்கோ வாங்கோ ஒன்னாகி

    வாங்கோ வாங்கோ ஒன்னாகி

    பிரபல பிரெஞ்சு ராப் இசை கலைஞர் டிஜே ஸ்நேக் கடந்த ஞாயிற்றுக் கிழமை தனது ட்விட்டர் பக்கத்தில், ரீமிக்ஸ் வெர்ஷனை ஷேர் செய்து "வாங்கோ வாங்கோ ஒன்னாகி" என அந்த பாடலின் வரிகளை ட்வீட் செய்ய சர்வதேச இசை ரசிகர்கள் அனைவரும் அந்த பாடலை கேட்டு மெய் மறந்து போயுள்ளனர்.

    English summary
    Dhee’s Enjoy Enjaami remix ad banner flashed in Times Square. First time ever in history a Tamil independent album song achieved this remark.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X