»   »  வசூலில்...சல்மானின் 'சுல்தானை' வீழ்த்தியது சந்தானத்தின் 'தில்லுக்குத் துட்டு'!

வசூலில்...சல்மானின் 'சுல்தானை' வீழ்த்தியது சந்தானத்தின் 'தில்லுக்குத் துட்டு'!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: கடந்த வாரம் வெளியான படங்களில் சந்தானத்தின் 'தில்லுக்குத் துட்டு' திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

ரம்ஜான் பண்டிகையையொட்டி கடந்த வாரம் 'தில்லுக்குத் துட்டு', 'அட்ரா மச்சான் விசிலு', 'கககபோ' என 3 தமிழ்ப்படங்கள் வெளியாகின. பொருளாதாரப் பிரச்சினைகளால் மாகாபாவின் 'அட்டி' தள்ளி வைக்கப்பட்டது.


இந்நிலையில் முதல் வார முடிவில் எந்தப் படம் எவ்வளவு வசூல் செய்தது என்ற விவரங்களை இங்கே பார்க்கலாம்.


தில்லுக்குத் துட்டு

தில்லுக்குத் துட்டு

முதல் வார முடிவில் சந்தானத்தின் 'தில்லுக்குத் துட்டு' 1.48 கோடிகளை சென்னையில் மட்டும் வசூலித்து சாதனை படைத்துள்ளது. சந்தானம், மொட்டை ராஜேந்திரன், கருணாஸ் மற்றும் ஆனந்த ராஜ் நடிப்பு ஆகியவை இப்படத்தின் வசூலுக்கு முக்கியக் காரணங்களாக அமைந்துள்ளன. இது தவிர தமிழ்நாடு முழுவதும் இப்படம் 10 கோடிகளுக்கும் அதிகமாக வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.


சுல்தான்

சுல்தான்

சந்தானத்தால் சென்னை பாக்ஸ் ஆபிஸில் முதலிடத்தை இழந்து 2 வது இடத்திற்கு சல்மான் தள்ளப்பட்டிருக்கிறார். எனினும் 1.29 கோடிகளை சென்னையில் 'சுல்தான்' வசூல் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது. மல்யுத்தம், சல்மானின் நடிப்பு, நேர்மறையான விமர்சனம் ஆகியவை இப்படத்திற்கு மிகப்பெரிய பலத்தைக் கொடுத்திருக்கின்றன.


ஜாக்சன் துரை

ஜாக்சன் துரை

19.76 லட்சங்களுடன் சத்யராஜ்-சிபிராஜின் 'ஜாக்சன் துரை' 3 வது இடத்தைக் கைப்பற்றியுள்ளது. 2 வார முடிவில் இப்படம் 1.42 கோடிகளை வசூலித்துள்ளது. 'ஜாக்சன் துரை', 'தில்லுக்குத் துட்டு' 2 படங்களையும் ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் வாங்கி வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.


அப்பா

அப்பா

சமுத்திரக்கனியின் 'அப்பா' 18.05 லட்சங்களுடன் 4 வது இடத்தைக் கைப்பற்றியுள்ளது. 2 வார முடிவில் இப்படம் 54.71 லட்சங்களை வசூல் செய்துள்ளது. ரசிகர்களின் நேர்மறையான விமர்சனம், ஊடகங்களின் பாராட்டு ஆகியவை அப்பாவின் வசூலுக்கு முக்கியக் காரணங்களாக மாறியுள்ளன.


பவர் ஸ்டார் - சிவாவின் 'அட்ரா மச்சான் விசிலு' திரைப்படம் சென்னையில் எதிர்பார்த்த வரவேற்பைப் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.English summary
Santhanam's Dhilluku Dhuddu Beats Salman Khan's Sultan in Chennai Box Office.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil