»   »  'தி கிரேட் காளி'யாக நடிக்கவிருக்கிறாரா தோனி நடிகர்?

'தி கிரேட் காளி'யாக நடிக்கவிருக்கிறாரா தோனி நடிகர்?

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை : உலகளவில் பிரபலமான WWE எனும் மல்யுத்த விளையாட்டுப் போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்றுப் பெருமை சேர்த்தவர் கிரேட் காளி என்று அழைக்கப்படும் திலீப் சிங் ராணா.

தற்போது முழுமையாக அந்த போட்டியில் பங்குகொள்ளாவிட்டாலும் அவ்வப்போது களத்தில் என்ட்ரி கொடுத்து ஜெர்க் ஆக்குவார். இந்நிலையில் பாலிவுட்டில் விளையாட்டு வீரர்களின் வாழ்க்கை சினிமாவாக உருவாகி வரும் நிலையில் கிரேட் காளியின் வாழ்க்கையையும் சினிமாவாக எடுக்கத் திட்டமிட்டுள்ளனர்.

Dhoni hero is acting in The Great Khali?

அவரது வாழ்க்கையைப் படமாக எடுப்பது தொடர்பாக அவரிடம் பேசி சம்மதம் வாங்கிவிட்டதாகவும் கூறப்படுகிறது. மேலும், கிரேட் காளியாக நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட்டை நடிக்க வைக்க முயற்சிகள் நடந்து வருகின்றன.

Dhoni hero is acting in The Great Khali?

சுஷாந்த் சிங் கிரேட் காளியாக நடிக்கவிருப்பது இன்னும் உறுதியாகவில்லை. கிரேட் காளியின் உயரத்திற்கும், உடல்வாகுவிற்கும் சரிப்பட்டு வருவாரா என்றும் தெரியவில்லை. தோனி கேரக்டரில் சிறப்பாக நடித்ததற்காகப் பலராலும் பாராட்டப்பட்ட சுஷாந்த் சிங் இந்தப் படத்தில் என்ன செய்யப்போகிறார் என்பதைப் பொறுத்திருந்து பார்க்கலாம்.

English summary
Film makers plan to take the life of Great Khali as a cinema in Bollywood. make They plans actor sushant singh to act as great khali.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil