»   »  ரீல் டோணியுடன் கொஞ்சி விளையாடும் ஜிவா: வைரல் போட்டோ

ரீல் டோணியுடன் கொஞ்சி விளையாடும் ஜிவா: வைரல் போட்டோ

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் கிரிக்கெட் வீரர் டோணியின் செல்ல மகள் ஜிவாவுடன் விளையாடியபோது எடுக்கப்பட்ட புகைப்படம் வைரலாகியுள்ளது.

கிரிக்கெட் வீரர் டோணியின் வாழ்க்கை வரலாற்று படமான எம்.எஸ். டோணி: தி அன்டோல்ட் ஸ்டோரி வரும் 30ம் தேதி 60 நாடுகளில் 4 ஆயிரத்து 500 தியேட்டர்களில் வெளியாக உள்ளது.

Dhoni's daughter Ziva playing with Sushant Singh Rajput, Watch cutest pic

படத்தில் சுஷாந்த் சிங் ராஜ்புட் டோணியாக நடித்துள்ளார். இந்த படத்தில் நடித்ததன் மூலம் டோணியும், சுஷாந்தும் நெருங்கிய நண்பர்களாகியுள்ளனர். டோணி சுஷாந்துடன் சேர்ந்து படத்தை விளம்பரம் செய்து வருகிறார்.

இந்நிலையில் சுஷாந்த் டோணியின் செல்ல மகள் ஜிவாவுடன் கொஞ்சி விளையாடியபோது எடுக்கப்பட்ட புகைப்படத்தை அவரே ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் தற்போது வைரலாகியுள்ளது.

அந்த புகைப்படத்தில் ஜிவா டோணியின் மடியில் தலையை சாய்த்து தனது பிஞ்சு விரல்களால் சுஷாந்தை தொடுகிறது.

English summary
Cute picture of Ziva Dhoni playing with actor Sushant Singh Rajput has gone viral.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil