கேஜிஎஃப் ராக்கி பாயை தொடர்ந்து காளி… விஜய் சேதுபதியின் குரலில் கேடி தி டெவில் டைட்டில் டீசர்
பெங்களூரு: கன்னட திரையுலகில் அடுத்தடுத்து பிரம்மாண்டமான திரைப்படங்கள் வெளியாகி வருகின்றன.
கேஜிஎஃப், காந்தாரா வரிசையில் இப்போது அடுத்து ஒரு பிரம்மாண்டமான திரைப்படம் உருவாகி வருகிறது.
ஆக்சன் ஸ்டார் துருவா சார்ஜா நடிப்பில் கேடி தி டெவில் படத்தின் டைட்டில் டீசர் தற்போது வெளியாகியுள்ளது.

ராக்கி பாய் வரிசையில்
பெரும்பாலும் சின்ன பட்ஜெட் படங்கள் மட்டுமே அதிகம் வெளியாகும் கன்னட திரையுலகில், கடந்த சில வருடங்களாக பெரிய மாற்றமே நடந்துள்ளது. பிரசாந்த் நீல் இயக்கத்தில் யாஷ் நடிப்பில் வெளியான கேஜிஎஃப், இந்தியா முழுவதும் வசூலில் சூறையாட்டம் ஆடியது. இரண்டு பாகங்களாக வெளியான கேஜிஎஃப், ஆக்சன் படங்களுக்கான புதிய வரைமுறையை படைத்தது. இதனைத் தொடர்ந்து கடந்த மாதம் 30ம் தேதி வெளியான காந்தாரா படமும் வசூலில் 100 கோடியை கடந்துள்ளது. சில கோடிகள் வசூல் செய்வதற்குள்ளாகவே சுருண்டு விழுந்துவிடும் கன்னட படங்கள், இப்போது பாக்ஸ் ஆபிஸில் தூள் கிளப்பி வருகின்றன.

கேடி தி டெவில்
கேஜிஎஃப், காந்தாரா வரிசையில் அடுத்து ஒரு பிரம்மாண்டமான திரைப்படம் உருவாகி வருகிறது. ஷோமேன் பிரேம் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தப் படத்தில் கன்னட ஆக்சன் ஸ்டார் துருவா சார்ஜா ஹீரோவாக நடித்து வருகிறார். இந்நிலையில், இந்தப் படத்தின் டைட்டில் டீசர் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி 'கேடி தி டெவில்' என்ற தலைப்பில் உருவாகி வரும் இந்தப் படத்தில், காளி என்ற கேரக்டரில் துருவா சார்ஜா நடித்து வருகிறார். இதுவும் கேஜிஎஃப் பாணியில் பான் இந்தியா படமாக கன்னடம், தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என 5 மொழிகளில் தயாராகி வருகிறது.

விஜய் சேதுபதியின் குரலில் டீசர்
இந்நிலையில், தற்போது வெளியான கேடி தி டெவில் டைட்டில் டீசர் செம்ம வைரலாகி வருகிறது. தமிழில் விஜய் சேதுபதியின் பின்னணிக் குரலில் வெளியாகியுள்ளது. "ராமாயண யுத்தம் பெண்ணுக்காக, மஹாபாரதம் யுத்தம் மண்ணுக்காக, இந்த கலியுக யுத்தம் கொதிக்கும் ரத்தத்திற்காக" எனத் தொடங்குகிறது. காளி என்ற கேரக்டரில் கேங்ஸ்டராக நடித்துள்ள துருவா சார்ஜாவுக்கு ஓவர் பில்டப் கொடுத்து இந்த டீசர் உருவாகியுள்ளது. கிட்டத்தட்ட கேஜிஎஃப் கலர் டோனில், அதே சாயலில் கேடி தி டெவில் டீசர் இருப்பதாக ரசிகர்கள் கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர்.

ஆக்சன் ட்ரீட்டு தான்
அதேபோல், மலையாளத்தில் வெளியாகியுள்ள கேடி தி டெவில் படத்தின் டைட்டில் டீசருக்கு மோகன்லால் வாய்ஸ் ஓவர் கொடுத்துள்ளார். முழுக்க முழுக்க ஆக்சன் ஜானரில் உருவாகியுள்ள இந்த டீசர், கேஜிஎஃப் ராக்கி பாய்க்கே டஃப் கொடுக்கும் என தெரிகிறது. ரெட்ரோ ஸ்டைலில் பீரியட் ஜான���ில் ஆக்சன் திரைப்படமாக உருவாகும் கேடி தி டெவில் அடுத்தாண்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், ரத்தம் தெறிக்க தெறிக்க வெளியாகியுள்ள கேடி தி டெவில் டைட்டில் டீசர் வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











