»   »  எந்திரன் 2.0 வில் அர்னால்டு நடிக்க முடியாமல் போனது இதனால் தான்- எழுத்தாளர் ஜெயமோகன்

எந்திரன் 2.0 வில் அர்னால்டு நடிக்க முடியாமல் போனது இதனால் தான்- எழுத்தாளர் ஜெயமோகன்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ரஜினியின் சினம், குறும்பு, வேகம் ஆகிய மூன்றுக்கும் இடமுள்ள சிட்டி கதாபாத்திரம் எந்திரன் 2.0 வில் மேலும் விரிவாகியிருக்கிறது என்று எழுத்தாளர் ஜெயமோகன் தெரிவித்திருக்கிறார்.

ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் '2.0' படத்தின் படப்பிடிப்பு கடந்த வாரம் சென்னையில் துவங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இப்படத்தின் வசனகர்த்தா ஜெயமோகன் எந்திரன் 2.0 குறித்து முதன்முறையாக சில தகவல்களை பகிர்ந்து கொண்டிருக்கிறார்.

எந்திரன் 2.0

எந்திரன் 2.0

பாலிவுட் நாயகன் அக்ஷய்குமார் எந்திரன் 2.0 வில் ரஜினிக்கு வில்லனாக நடிக்கிறார். எமி ஜாக்சனும் இந்தப் படத்தில் நடிக்கவிருக்கிறார்.முன்னணி தொழில்நுட்பக் கலைஞர்கள் இணையும் எந்திரன் 2.0 வை இந்தியாவிலேயே பெரும் பொருட்செலவில் லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது.

ஜெயமோகன்

ஜெயமோகன்

எந்திரன் 2.0 வில் இயக்குநர் ஷங்கருடன் இணைந்து பணியாற்றிய எழுத்தாளர் ஜெயமோகன் இப்படம் குறித்து சில விஷயங்களை தனது வலைத்தளத்தில் பகிர்ந்து கொண்டிருக்கிறார்."எந்திரனில் என் பணிகள் முடிந்து பல மாதகாலம் ஆகிறது. சின்னச்சின்ன மெருகேற்றல்கள் மட்டுமே எஞ்சியிருந்தன. அர்னால்ட் நடிப்பதாக அனேகமாக உறுதியாகி இருந்தது. இறுதிநேரம் வரை முயன்றும் அதில் உள்ள சர்வதேச நிதிச்சட்டச் சிக்கல்களால் நடக்கமுடியாமல் போயிற்று.

அக்ஷய் குமார்

அக்ஷய் குமார்

அக்ஷய்குமார் அந்த வலுவான எதிர்நாயகன் வேடத்தில் நடிக்கிறார். தமிழின் இன்னொரு பெரிய கதாநாயகனை எண்ணி உருவாக்கப்பட்ட கதாபாத்திரம் அது. பலமுகங்கள் கொண்டது.

சிட்டி கதாபாத்திரம்

சிட்டி கதாபாத்திரம்

உடல்நலம் நன்கு தேறி இருபடங்களில் ஒரேசமயம் ரஜினிகாந்த் நடிப்பது மிக உற்சாகமான செய்தி. அவருடைய குறும்பு, வேகம், சினம் மூன்றுக்கும் இடமுள்ள கதாபாத்திரமாக சிட்டி மேலும் விரிவாகியிருக்கிறது.

எந்திரனை விட

எந்திரனை விட

ஷங்கர் படங்கள் அவருக்கே உரிய தெளிவான ஆனால் சுருக்கமான திரைக்கதை அமைப்பு கொண்டவை. என் பார்வையில் அவரது மிகச்சிறந்த திரைக்கதை அந்நியன். அதைவிட இது ஒரு படி மேல் எனத் தோன்றுகிறது. வலுவான எதிர்நாயகன் காரணமாக 'எந்திரன்' முதல் பகுதியைவிட இது தீவிரமானது.

நிறைவாக உள்ளது

நிறைவாக உள்ளது

நான் எப்போதுமே ஜேம்ஸ் பாண்ட் வகை படங்களுக்கும் அறிவியல் புனைவு படங்களுக்கும் ரசிகன்.என்னுள் உள்ள சிறுவனை உற்சாகமடையச் செய்த கதை இது. இதில் பங்கெடுத்தது நிறைவூட்டுகிறது" என்று கூறியிருக்கிறார். மேலும் இது குறித்து தான் இனிமேல் எதுவும் கூறப்போவதில்லை என்றும் இது முழுக்க, முழுக்க ஷங்கர் படம் என்றும் அவர் கூறியிருக்கிறார்.

    English summary
    Rajini's Endhiran 2.0 Shooting Starts Last Week. Now Dialogue Writer Jeyamohan Share some Information about the Endhiran 2.0 for the First Time.

    சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil