ஹவுஸ்மேட்களை இன்ஃப்ளுயன்ஸ் செய்கிறாரா அபிஷேக்...எரிச்சலடையும் ரசிகர்கள்

சென்னை : பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி வெற்றிகரமாக இரண்டாவது வாரத்தை நிறைவு செய்துள்ளது. மொத்தம் 18 பேர் போட்டியாளர்கள் பங்கேற்ற நிலையில் இதுவரை இரண்டு பேர் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறி உள்ளனர்.

முதல் வாரத்தில் தாமரை செல்வி வீட்டின் தலைவராக இருந்த நிலையில், இரண்டாவது வாரத்திற்கான தலைவரை தேர்வு செய்யும் டாஸ்க் நேற்று நடைபெற்றது. இதில் சிபி தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு செல்வதற்கு முன்பே வெளியில் கடும் எதிர்ப்பை பெற்றவர் யூட்யூப்பரான அபிஷேக் ராஜா. பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்த பிறகும் சோஷியல் மீடியாவில் இவரின் பழைய வீடியோக்கள் பலவற்றை பகிர்ந்து நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகிறார்கள். அபிஷேக் குறித்த பல சர்ச்சைகளும், சந்தேகங்களும் எழுப்பப்பட்டு வருகின்றன.

ரெவ்யூ கொடுத்த அபிஷேக்

ரெவ்யூ கொடுத்த அபிஷேக்

முதல் வாரத்தில் ஹவுஸ்மேட்கள் குறித்து ரெவ்யூ செய்து வந்த அபிஷேக், எலிமினேஷன் ப்ராசஸ் துவங்கியதும் சற்று அமைதியாக இருந்தார். இதனால் மக்களிடம் ஓட்டுக்களை பெறுவதற்காக அமைதி காக்கிறாரா என நெட்டிசன்கள் கலாய்த்தனர். முதல் வாரத்தில் அபிஷேக் மற்றும் சின்ன பொண்ணு மிக குறைந்த ஓட்டுக்களை பெற்றதால், இவர்களில் ஒருவர் தான் வெளியேறுவார் என கூறப்பட்டது.

கோபமாக பேசும் அபிஷேக்

கோபமாக பேசும் அபிஷேக்

ஆனால் யாரும் எதிர்பாராத விதமாக நாடியா சாங் வெளியேறினார். இதனால் நிம்மதி பெருமூச்சு விட்ட அபிஷேக், அதற்கு பிறகு ஹவுஸ்மேட்கள் பலரிடமும் கோபமாக பேசினார். இமான் அண்ணாச்சி, பாவனி, சின்ன பொண்ணு என பலரிடமும் கோபமாக பேசினார். இதனால் ஹவுஸ்மேட்கள் மட்டுமல்ல ரசிகர்கள் பலரும் எரிச்சலடைய துவங்கி விட்டனர்.

சவுண்ட் ஓவரா இருக்கே

சவுண்ட் ஓவரா இருக்கே

இரண்டாவது வாரத்தில் எலிமினேஷ் முடிந்த பிறகு பிக்பாஸ் வீட்டில் அபிஷேக்கின் சத்தம் ஓவராக இருக்கிறது என பலர் தெரிவித்துள்ளனர். இவர் சொல்வதை தான் மற்றவர்கள் கேட்க வேண்டும் என்பதை போல் அதிகார தோரணையில் பேசி வருவதாக பலர் குற்றம்சாட்டி உள்ளனர்.

பந்தா காட்டிய அபிஷேக்

பந்தா காட்டிய அபிஷேக்

விஜயதசமியை முன்னிட்டு திருவிழா நடத்த கொடுக்கப்பட்ட டாஸ்கின் போது கதை அமைத்தவர் ராஜு. ஆனால் அபிஷேக் தனது தலைமையில் எல்லாம் நடப்பதை போல் பந்தா காட்டினார். மற்றவர்களிடம் சத்தமாக, கோபமாக பேசினார். சின்ன பொண்ணுவிடமும் சத்தமாக பேசினார். அப்போது சமாதானம் செய்ய வந்த அக்ஷரா, ஐக்கி, தாமரை ஆகியோரிடம், உங்கள் வேலையை பாருங்கள் என்றார்.

கடுப்பான ரசிகர்கள்

கடுப்பான ரசிகர்கள்

யார் ஜொலித்தவர்கள், யார் காணாமல் போனவர்கள் என்பதை தேர்வு செய்வதிலும் கூட பாவனி மற்றும் அக்ஷராவிடம் பேருக்கு கருத்து கேட்டு விட்டு, தான் சொல்வது தான் சரி என்பது போல் பேசினார் அபிஷேக். இது ரசிகர்கள் பலரை கடுப்பாக்கியது.

மதுமிதாவை கேப்டன் ஆக்குவேன்

மதுமிதாவை கேப்டன் ஆக்குவேன்

இமான் அண்ணாச்சியிடம் அடிக்கடி முறைத்துக் கொள்கிறார். பாவனியிடம், மதுமிதாவை தனக்கு மிகவும் பிடிப்பதாகவும், மதுமிதாவை தான் வீட்டின் தலைவராக்க போவதாகவும், அவர் திறமையை வெளியே காட்ட போவதாகவும் சவால் விட்டார். இதைத் தொடர்ந்து நேற்று நடைபெற்ற தலைவர் டாஸ்கில், மாலை போட்டு தேர்வு செய்ய வேண்டும் என்ற டாஸ்க் கொடுக்கப்பட்டது.

இன்ஸ்ப்ளூயன்ஸ் பண்ணும் அபிஷேக்

இன்ஸ்ப்ளூயன்ஸ் பண்ணும் அபிஷேக்

அப்போது ஹவுஸ்மேட்கள் ஸ்டோர் ரூம் கதவு திறப்பதற்காக காத்திருக்கும் போது, சிபி தான் சரியான ஆள். அவரை தேர்வு செய்தால் தான் சரியாக இருக்கும் என கூறினார் அபிஷேக். அதுவரை பாவனி அல்லது ராஜுவை வீட்டின் தலைவராக தேர்வு செய்யலாம் என நினைத்தவர்களும், முதலில் போட்ட மாலையை கழற்றி சிபியின் கழுத்தில் போட்டு தலைவராக்கினர்.

ஸ்டாட்டர்ஜி பண்ணாதீங்க

ஸ்டாட்டர்ஜி பண்ணாதீங்க

சிபியை தேர்வு செய்யும் படி அபிஷேக் பேசிக் கொண்டிருக்கும் போது குறிக்கிட்ட பிரியங்கா, இது உன்னோட கருத்து தான. அத தெளிவாக சொல்லு. ஸ்டாட்டர்ஜி பண்ணாதீங்க அபிஷேக் என்கிறார். அதற்கு அபிஷேக், நான் ஸ்டாட்டர்ஜி பண்ணுவேன் என்கிறார்.

இந்த வாரம் இவர் தான்

இந்த வாரம் இவர் தான்

இந்த வாரம் அபிஷேக் நடந்து கொண்டதை பார்த்து விட்டு நெட்டி்சன்கள் பலர், இந்த வாரம் கன்ஃபார்மாக வெளியேற போறது அபிஷேக் தான். அபிஷேக், வருண் போன்றவர்கள் வீட்டில் இருந்து வெளியேற முடிவு செய்து விட்டார்கள். அதனால் தான் இப்படி எல்லாம் நடந்து கொள்கிறார்கள் என கமெண்ட் செய்து வருகிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X