மகளிர் தினத்தில் தனுஷை வம்புக்கு இழுத்தாரா ஐஸ்வர்யா?...எதுக்கு இப்படி ஒரு பதிவு?
சென்னை : தான் மகளிர் தினம் கொண்டாடி போட்டோக்களை சோஷியல் மீடியாவில் பகிர்ந்த ஐஸ்வர்யா ரஜினிகாந்த், அதோடு வெளியிட்டுள்ள கேப்ஷன் தான் சோஷியல் மீடியாவில் மிகப் பெரிய டாப்பிக்காக ஓடிக் கொண்டிருக்கிறது.
நடிகர் தனுஷை திருமணம் செய்து கொண்ட ரஜினியின் மூத்த ஐஸ்வர்யாவிற்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இந்நிலையில் திருமணமாகி 18 ஆண்டுகளுக்கு பிறகு தாங்கள் பிரிவதாக ஜனவரி மாதம் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா அறிவித்தனர். இவர்களின் பிரிவிற்கு என்ன காரணம் என ஒரு பக்கம் செய்திகள் ஓடிக் கொண்டிருக்க, மற்றொரு புறம் இவர்களை சேர்த்து வைக்கும் முயற்சியில் இரு குடும்பத்தினரும் ஈடுபட்டுள்ளதாக செய்திகள் பரவி வருகின்றன.

ஐஸ்வர்யா மருத்துவமனையில் அனுமதி
இதற்கிடையில் கணவரை பிரிவதாக அறிவித்த பிறகு மியூசிக் வீடியோ ஷுட்டிங்கில் பிஸியாக இருந்த ஐஸ்வர்யாவிற்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதிலிருந்து குணமாகி மீண்டும் ஷுட்டிங்கிற்கு வந்து, வேலையை முடித்து, வீடியோ ரிலீசுக்கும் ஏற்பாடு செய்து விட்டார் ஐஸ்வர்யா. இந்த சமயத்தில் அவருக்கு கொரோனாவுக்கு பிந்தைய பாதிப்புக்கள் காரணமாக காய்ச்சல் மற்றும் தலைசுற்றல் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நர்ஸ்களுடன் மகளிர் தினம்
மருத்துவமனையில் தான் அனுமதிக்கப்பட்டுள்ளதை போட்டோவுடன் பகிர்ந்தவர், நேற்று மகளிர் தினத்தை முன்னிட்டு, தான் பெண்ணாக பிறந்ததை நினைத்து ஒவ்வொரு நாளும் பெருமைபடுவதாக குறிப்பிட்டு ஒரு போட்டோ போஸ்ட் செய்திருந்தார். அதைத் தொடர்ந்து மாலையில், நர்ஸ்களுடன் ஜாலியாக அரட்டை அடித்து தான் மகளிர் தினம் கொண்டாடிய போட்டோக்களை பகிர்ந்திருந்தார் ஐஸ்வர்யா.

பெண்களை மதிக்க கற்றுக் கொடுத்துள்ளேன்
அதோடு, கொரோனாவிற்கு பிந்தைய பாதிப்புகளால் பாதிக்கப்பட்டுள்ள என்னை அக்கறை, பரிவோடு கவனித்துக் கொள்ளும் நர்ஸ்களுடன் மகளிர் தினத்தை கொண்டாடினேன். என் மகன்களுக்கு அவர்கள் வாழ்க்கையில் ஒவ்வொரு பெண்களையும் எப்படி மரியாதையுடன் நடத்த வேண்டும் என கற்றுக் கொடுத்துள்ளேன். உங்கள் வாழ்க்கையில் உள்ள பெண்களை நேசியுங்கள். வாழ்க்கையும் உங்களை நேசிக்கும் என கேப்ஷன் வேறு பதிவிட்டிருந்தார் ஐஸ்வர்யா.
Recommended Video

தனுஷை தாக்குகிறாரா ஐஸ்வர்யா
மகளிர் தின போட்டோக்களை வெளியிட்டார், வாழ்த்து பகிர்ந்தார் ஓகே. எதற்காக ஐஸ்வர்யா தனது மகன்களுக்கு பெண்களை மதிக்க கற்றுக் கொடுத்திருப்பதை குறிப்பிட்டுள்ளார். மறைமுகமாக தனுஷை தாக்குவதற்கு தான் இதை பதிவிட்டுள்ளாரோ. மகளிர் தினத்தை காரணமாக வைத்து தனுஷை குத்தி காட்டுவதற்காக தான் இந்த பதிவை போட்டுள்ளாரோ என நெட்டின்கள் பல விதமாக கேள்வி கேட்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











