Don't Miss!
- News
இருக்குற சிக்கல்ல பேனா நினைவு சின்னம் எதுக்கு? உருப்படியா ஏதாவது செய்யுங்க.. சீமானுக்கு சசிகலா ஆதரவு
- Lifestyle
கருட புராணத்தின் படி இந்த 5 விஷயங்களை செஞ்சா, மரணத்திற்கு பின் நரகம் செல்வதை தவிர்க்கலாம்..!
- Automobiles
இந்த கதை தெரியுமா? சஃபாரி பெயருக்காக டாடாவிடம் கையேந்தி நின்ற பிரபல வெளிநாட்டு கார் நிறுவனம்!!
- Sports
"கேப்டன் குற்றச்சாட்டு; துணைக்கேப்டன் பாராட்டு" நியூசி,தொடரில் ஏற்பட்ட சர்ச்சை..குழம்பும் ரசிகர்கள்
- Technology
தரமான 5G ஸ்மார்ட்போனை இந்தியாவுக்கு கொண்டுவரும் விவோ.! என்னென்ன அம்சங்கள்?
- Finance
பொறுப்புக்கு வந்த வாரிசுகள்.. குமார் மங்கலம் பிர்லா நிம்மதி..!
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
ஹாலிவுட் போல எல்லை மீறுகிறதா இந்திய சினிமா? அதிகரிக்கும் நிர்வாணக் காட்சிகள்.. காரணம் என்ன?
சென்னை: ஹாலிவுட் படங்களில் காலம் காலமாகவே நடிகர்களின் நிர்வாணக் காட்சிகளும் லிப் லாக் முத்தக் காட்சிகளும் சர்வ சாதரணமாக திரைப்படங்களில் வந்துள்ளன.
இந்திய படங்களில் எப்போதாவது அதுபோன்ற காட்சிகள் வெளியானால் பெரிய சர்ச்சையே வெடித்து விடும்.
சில படங்கள் ஓடாமல் போனதற்கு குறிப்பாக அந்த படத்தில் இடம்பெற்ற ஒரு நிர்வாணக் காட்சி கூட காரணமாக அமைந்திருக்கும். கலாச்சார பூமியான இந்தியாவில் சமீப காலமாக நிர்வாணக் காட்சிகளில், நடிகர்களும் நடிகைகளும் நடிக்க பெரிதும் ஆர்வம் காட்டி வருவதற்கு பின்னணியில் உள்ள காரணம் என்ன? என்பது குறித்து லேசாக அலசுவோம்.
சூர்யாவின்
சிறப்பான
4
கிளாஸிக்
திரைப்படங்கள்:
இன்னும்
பார்க்கலன்னா
கண்டிப்பா
பார்த்துடுங்க…

நிர்வாணக் காட்சிகள் தேவையா?
சினிமா என்பதே நடிப்பு தான். ஆஸ்கர் விருதுகளில் இன்னமும் டிராமா என்று தான் திரைப்படங்களை வகுக்கின்றனர். எந்தளவுக்கு ரியாலிஸ்டிக் கொடுக்க வேண்டும் என்கிற முனைப்பில் தான் கொடூரமான கொலைக் காட்சிகள், சண்டைக் காட்சிகள் இடம்பெற்று வந்தன. ஹாலிவுட் உள்ளிட்ட சர்வதேச திரைப்படங்களில் ஏராளமான நிர்வாணக் காட்சிகள் இடம்பெறுவதற்கு பின்னணியில் பெரிய வர்த்தக எண்ணமே உள்ள நிலையில், அதை காமக் கண்ணோடு பார்க்க வேண்டாம், கலைக் கண்ணோடு பார்க்க வேண்டும் என சப்பைக் கட்டு கட்டுகின்றனர். ஆனால், பார்ன் மூவிகளையும் அதன் வெப்சைட்டுகளையும் தடை செய்து வருகின்றனர்.

அதிகரிக்கும் ஆபாசம்
ஆனால், இந்திய சினிமாவில் பல ஆண்டுகளாக ஆபாசக் காட்சிகளுக்கு பெரிய தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், பல இயக்குநர்களும் அதுபோன்ற காட்சிகளை எடுக்கவே தயங்கி வந்தனர். ஆனால், அதையும் மீறி சில இயக்குநர்கள் காமசூத்ரா, ராதிகா ஆப்தேவின் பார்ச்சட், ரந்தீப் ஹூடாவின் ரங் ரசியா உள்ளிட்ட படங்களில் நிர்வாணக் காட்சிகள் எட்டிப் பார்த்தன. செல்வராகவன் இயக்கத்தில் கார்த்தி, பார்த்திபன் நடித்த ஆயிரத்தில் ஒருவன் படத்தில் மார்பில் இருந்து பால் வராமல் ரத்தம் வரும் காட்சியை இயக்கி இருப்பார். ஆளவந்தான் படத்தில் கமல் நிர்வாணமாக ஒரு காட்சியில் நடித்து இருப்பார்.

அமலா பாலின் ஆடை
இயக்குநர் ரத்னகுமார், இதெல்லாம் என்னங்க, நான் எடுக்கிறேன் பாருங்க என அமலா பாலை முழு நிர்வாணமாக ஆடை படத்தில் அதிகமான காட்சிகளில் நடிக்க வைத்து பார்வையாளர்களின் பிபியை எகிற வைத்து இருந்தார். ஆடை அணியாமல் தைரியமாக ஷூட்டிங்கிற்கு சென்று ஆபாசமாக எந்த இடமும் தெரிந்து விடக் கூடாது, அப்படி ஏதாவது தெரிந்து விட்டால், படத்தை வெளியிட விடமாட்டார்கள் என்கிற அச்சத்தால், அவ்வளவு மெனக்கெட்டு அந்த காட்சியை எடுத்திருப்பார்கள். ஆனால், அதன் பின்னர் அமலா பாலுக்கு பல படங்கள் தமிழ் சினிமாவில் கிடைக்காமல் போனது.

விஜய் தேவரகொண்டா
சமீபத்தில் நடிகர் விஜய் தேவரகொண்டா ஆடை அணியாமல் பிகே படத்தில் அமீர் கான் எப்படி அந்த இடத்தை மறைத்துக் கொண்டு நின்றாரோ அதே போல, ரோஜா பூங்கொத்தை அங்கே வைத்து மறைத்துக் கொண்டு நின்றபடி இருக்கும் லைகர் படத்தின் போஸ்டரை வெளியிட்டு டிரெண்டாக்கினார். சமீப காலமாக இப்படி இந்திய சினிமா பிரபலங்கள் எல்லை மீறி செல்வது அதிகரித்துள்ளது.

புஷ்பாவில் வைக்க நினைத்த இயக்குநர்
புஷ்பா படத்தில் சமந்தாவின் கவர்ச்சி நடனமே ரசிகர்களை கிக்கேற்றியது. ராஷ்மிகா மந்தனா தனது பங்கிற்கு பாவடை கட்டிக் கொண்டு ஆடினார். மேலும், அல்லு அர்ஜுன் மற்றும் ராஷ்மிகாவின் கார் சீனை ரசிகர்கள் கோரிக்கைக்கு பின்னர் நீக்கினர். இயக்குநர் சுகுமார் பேட்டி ஒன்றில் பேசும் போது புஷ்பா படத்தின் கிளைமேக்ஸ் காட்சியில் ஹீரோ அல்லு அர்ஜுனும் வில்லன் பகத் ஃபாசிலும் நிர்வாணமாகத் தான் இருக்க வேண்டும் என நினைத்து கதை எழுதினாராம். ஆனால், கடைசியில் அந்த எண்ணத்தை மாற்றிக் கொண்டு இருவரையும் ஜட்டியோடு நடிக்க வைத்து இருந்தார். முழு நிர்வாணமாக நடித்து இருந்தால், படம் பார்க்க தியேட்டருக்கு யாரும் வந்திருக்க மாட்டார்கள் என்று இயக்குநரே சொல்லி உள்ளார்.

இரவின் நிழல் பிரிகிடா
பார்த்திபன் இயக்கி நடித்த இரவின் நிழல் திரைப்படத்தில் நடிகை பிரிகிடா ஒரு காட்சியில் ஆடையே இல்லாமல் நிர்வாணக் கோலத்தில் காட்சி அளிக்கிறார். அது தொடர்பாக பேட்டியில் கேட்கும் போது, அவ்வளவு கூச்சப்பட்டுக் கொண்டு அது கவர்ச்சியாக தெரியாது, புனிதமாகத்தான் தெரியும், எங்க வீட்லையும் அனுமதிக்கல, பார்த்திபன் சார் வந்து பேசி கன்வின்ஸ் பண்ணினார் என்றெல்லாம் பேசியது குறிப்பிடத்தக்கது.

எல்லை மீறிய கிரண்
நடிகை கிரண் ஆப் மூலம் ஆபாச போட்டோக்களை பதிவிட்டு வருகிறார் என தகவல்கள் வெளியாகின. தனது இன்ஸ்டாகிராமில் பிகினி உடைகளில் போட்டோக்களை போட்டு வந்த அவர், திடீரென முழு நிர்வாணமாக புகைப்பிடிக்கும் போட்டோவையும் போட்டு அதிர வைத்தார். ஏற்கனவே கோலிவுட் நடிகைகள் எல்லாம் பிகினி உடைகளில் சர்வ சாதாரணமாக வலம் வரத் துணிந்து விட்டனர். ஷகிலா படங்களின் போஸ்டர்கள் கிழிக்கப்பட்டு போராட்டங்கள் நடத்தப்பட்ட நம்ம ஊரில் இப்போ நிர்வாணமாக போஸ் கொடுத்தால் ஹாட் என வர்ணிக்கின்றனர்.

தீபிகா படுகோன் கணவர்
இந்நிலையில், இந்த வரிசையில் அடுத்ததாக தீபிகா படுகோனின் கணவரும் நடிகருமான ரன்வீர் சிங்கும் நிர்வாண போட்டோஷூட்டை நடத்தி உள்ளார். பொதுவெளியில் நிர்வாண போட்டோஷூட் நடத்தினார் பூனம் பாண்டே என அவர் மீது வழக்கு பதியப்பட்ட நிலையில், ரன்வீர் சிங், விஜய் தேவரகொண்டா போட்டோக்களுக்கு ஹீரோயின்களே ஃபயர் விடுகின்றனர். அந்த இடத்தை மறைத்து இப்பவே வெளியிடும் நடிகர்கள் இன்னும் கொஞ்ச நாட்களில் எப்படி நடிப்பார்கள் என்கிற கேள்வியும் எழுந்துள்ளது.

ஓடிடி தான் காரணமா
டைட்டானிக் படத்தை ஸ்டார் மூவிஸில் போட்டாலே நிர்வாணக் காட்சிகள் கட் செய்யப்பட்டுத் தான் இந்தியாவில் வெளியாகும். ஆனால், ஓடிடிக்களின் வருகையாள் கேம் ஆஃப் த்ரோன்ஸ், உல்ஃப் ஆஃப் வால்ஸ்ட்ரீட், ஸ்பார்ட்டகஸ் என வெப்சீரிஸ்களையும் திரைப்படங்களையும் எந்தவித சென்சாரும் இன்றி இந்திய இளைஞர்களும் பிரபலங்களும் பார்ப்பதன் விளைவு தான் சமீப காலமாக இந்த அளவுக்கு இவர்களை எல்லை மீற தூண்ட வைக்கிறதா? என்கிற கேள்வி எழுந்துள்ளது. இப்போதைக்கு மறைத்து நிர்வாணக் காட்சிகளை வெளியிடும் இதே சினிமா பிரபலங்கள், ராதிகா ஆப்தே போல சீக்கிரமே எல்லை மீறியும் நடிக்கத்தான் போகிறார்கள் என்கிற எச்சரிக்கை மணியையும் அடிக்கத்தான் செய்கிறது. பல ஆயிரம் கோடி போட்டு எடுக்கும் மார்வெல் படங்களிலேயே நிர்வாணக் காட்சிகள் இடம்பெறவில்லை என்பது கூடுதல் தகவல்.