ஆதரவு கேட்கும் பிரபலம்...இவரும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு போறாரா ?

சென்னை : விஜய் டிவி.,யில் பிரபலமான ரியாலிட்டி ஷோவான பிக்பாஸ் நிகழ்ச்சியின் நான்கு சீசன்கள் முடிவடைந்த நிலையில், இன்று முதல் ஐந்தாவது சீசன் துவங்கப்பட உள்ளது. ஐந்தாவது சீசனின் துவக்க விழா இன்று மாலை 6 மணிக்கு துவங்கி இரவு 11 மணி வரை நடைபெற உள்ளது.

Recommended Video

Bigg Boss 5 Confirmed Contestant List | Kamal Hassan, BB 5 Grand Launch

அடுத்த 100 நாட்களுக்கு தினமும் இரவு 10 மணி முதல் 11 மணி வரை பிக்பாஸ் தமிழ் சீசன் 5 நிகழ்ச்சி விஜய் டிவி.,யில் ஒளிபரப்பாக உள்ளது. வார இறுதி நாட்களில் கமல் வரும் எபிசோட்கள் இரவு 10 மணிக்கு துவங்கி, 11.30 மணி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் போட்டியாளர்கள் பற்றிய கேள்வி தான் அனைவரின் மனதிலும் உள்ளது.

கன்ஃபார்ம் போட்டியாளர்கள்

கன்ஃபார்ம் போட்டியாளர்கள்

கன்ஃபார்ம் போட்டியாளர்கள் என இதுவரை கானா பாடகியான இசைவாணி, நாம் இருவர் நமக்கு இருவர் உள்ளிட்ட சீரியல்களில் நடிக்கும் ராஜு ஜெயமோகன், பிரபல தொகுப்பாளர் அபிஷேக் ராஜா, காஸ்ட்யூம் டிசைனர் மதுமிதா ஆகிய நான்கு பேரின் பெயர்கள் வெளியாகி உள்ளது.

 இத்தனை போட்டியாளர்களா

இத்தனை போட்டியாளர்களா

இதற்கிடையில் முந்தைய நான்கு சீசன்களை போல் இந்த சீசனின் மொத்தம் 16 போட்டியாளர்கள் கலந்து கொள்ள போவதில்லையாம். அதற்கு பதிலாக 18 போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டிற்குள் செல்ல உள்ளதாக மற்றொரு தகவல் வெளியாகி உள்ளது. இதனால் நான்கு பேரின் பெயர்கள் கசிந்துள்ளது, மீதமுள்ள 14 பேர் யார் என்ற ஆர்வம் அதிகரித்துள்ளது.

பிரபலம் வெளியிட்ட வீடியோ

பிரபலம் வெளியிட்ட வீடியோ

இந்நிலையில் பிரபல மலேசிய மாடலான நதியா சாங் (Nadia Chang) தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் இதுவரை எனக்கு ஆதரவு அளித்த அனைவருக்கும் நன்றி. இதுவரை தந்த ஆதரவை இந்த நிகழ்ச்சியில் நான் பயணிக்கவும் தர வேண்டும். உங்களது கேள்விகள், சந்தேகங்கள் எதுவானாலும் எனக்கு அனுப்பலாம். இனி எனது அக்கவுண்ட்டை எனது சகோதரர்கள் கையாள்வார்கள். எனது சார்பாக அவர்கள் உங்களின் கேள்விகளுக்கு பதில் அளிப்பார்கள் என பேசி உள்ளார்.

இவரும் போட்டியாளரா

இவரும் போட்டியாளரா

அவரின் வீடியோவில் பிக்பாஸ் லோகோ இருப்பதால், நதியாவும் பிக்பாஸ் போட்டியில் பங்கேற்க உள்ளது உறுதியாகி உள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சிக்காக தனிமையில் இருப்பதற்கு முன் நதியா, இந்த வீடியோவை பேசி இருக்கலாம் என கூறப்படுகிறது. அவர் சார்பாக தற்போது இந்த வீடியோ வெளியிடப்பட்டிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

யார் இந்த நதியா சாங்

யார் இந்த நதியா சாங்

நதியா சாங், மலேசியாவை சேர்ந்த பிரபல மாடல் ஆவார். இவர் டிக்டாக் வீடியோக்கள் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானர். அதைத் தொடர்ந்து யூட்யூப் சேனலும் துவங்கி லட்சக்கணக்கான ஃபாலோவர்களையும், சப்ஸ்கிரைபர்களையும் பெற்றுள்ளார். இவருக்கு திருமணமாகி மூன்று பெண் குழந்தைகள் உள்ளனர். மலேசிய பிரபலமான இவரும் பிக்பாஸ் வீட்டிற்குள் செல்கிறார் என்ற தகவல் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X