twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    "இனி படமே வரலேன்னா நல்லது" - மக்களின் கருத்தைக் கேளுங்கள் தயாரிப்பாளர்களே!

    By Vignesh Selvaraj
    |

    சென்னை : தமிழ்த் திரையுலகில் இதுவரை இவ்வளவு நாட்களாக தொடர்ந்து எந்தப் படத்தையும் ரிலீஸ் செய்யாமல் இருக்கும் போராட்டம் நடைபெற்றிருக்க வாய்ப்பில்லை. சாத்தியப்படுத்தியிருக்கிறது விஷால் தலைமையிலான தயாரிப்பாளர் சங்கம்.

    அனைத்துத் தயாரிப்பாளர்களும், தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் சொன்னபடி அவர்களது புதிய படங்களை தியேட்டர்களில் வெளியிடாமல் நிறுத்திவிட்டார்கள். டிஜிட்டல் சேவைக் கட்டணம் மூலம் அவர்கள் எவ்வளவு பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பது இதன்மூலம் தெளிவாகிறது.

    ஆனால், இந்த ஸ்ட்ரைக் மக்களிடையேயும், ரசிகர்களிடையேயும் பெரிய தாக்கங்களை ஏற்படுத்தவில்லை எனத் தெரிகிறது. வாராவாரம் வெளிவரும் வெகு சுமாரான படங்களால் சலித்துப் போயிருந்தவர்களுக்கு இது ஆறுதலாகவே அமைந்திருக்கிறது.

    ஒரு மாதம் ஸ்ட்ரைக்

    ஒரு மாதம் ஸ்ட்ரைக்

    இந்த மார்ச் மாதத்தில் நேற்றுடன் சேர்த்தால் ஐந்து வெள்ளிக் கிழமைகள் கடந்திருக்கிறது. வாரத்திற்கு தமிழில் சராசரியாக நான்கு படங்கள் வருவது வழக்கம். இந்த ஐந்து வாரங்களில் குறைந்தபட்சம் 20 படங்களாவது வெளிவந்திருக்கலாம். ஆனால், தயாரிப்பாளர் சங்கத்தை மீறி யாரும் படங்களை வெளியிடவில்லை.

    ஒரு படம் மட்டுமே ரிலீஸ்

    ஒரு படம் மட்டுமே ரிலீஸ்

    இயக்குனர் பவித்ரன் இயக்கிய 'தாராவி' படத்தை மட்டும் மார்ச் 2-ம் தேதி வெளியிட்டார். இந்தப் படம் குறிப்பிட்ட தேதியில் வெளியாகாவிட்டால் தான் பெரும் நஷ்டத்தை அடைவேன் எனக் கூறி அன்றே வெளியிட்டார் பவித்ரன். அந்தப் படம் வந்ததும் தெரியாமல், போனதும் தெரியாமல் கடந்து போனது வேறு விஷயம்.

    தொடரும் ஸ்ட்ரைக்

    தொடரும் ஸ்ட்ரைக்

    மார்ச் மாதம் வெளிவந்திருக்கவேண்டிய 20 படங்களும் எப்படியும் ஸ்ட்ரைக் முடிந்து வெளிவரத் தயாராகும். அதுபோக, சென்சார் அனுமதி பெற்று இன்னும் சில படங்களும் ரிலீஸுக்கு காத்திருக்கின்றன. இதனால், அடுத்த சில மாதங்களுக்கு படங்களை வெளியிடுவதில் சில சிக்கல்கள் இருக்கலாம்.

    சம்மர் வசூல் பாதிக்காது

    சம்மர் வசூல் பாதிக்காது

    எல்லாப் படங்களையும், முதல் சென்சார் சான்றிதழ் பெற்றவர்களுக்கு முன்னுரிமை என்கிற விதிப்படி தயாரிப்பாளர் சங்கம் வெளியிட அனுமதிக்கும் எனக் கூறப்படுகிறது. பள்ளிகளில் கோடை விடுமுறை விரைவில் தொடங்குவதால் குடும்பத்துடன் பலர் படம் பார்க்க வரலாம்.

    தயாரிப்பாளர்கள் கணக்கு

    தயாரிப்பாளர்கள் கணக்கு

    எனவே, விரைந்து ஸ்ட்ரைக்கை முடிவுக்குக் கொண்டு வரவேண்டும் என தயாரிப்பாளர்களுக்குள் கோரிக்கைக் குரல்கள் எழுந்திருக்கின்றன. மார்ச் மாதம் இழந்த வசூலை இந்த கோடை விடுமுறையில் எடுத்துவிடலாம் என கணக்குப்போட்டு வருகிறார்கள் தயாரிப்பாளர்கள்.

    மக்களிடம் தாக்கம் இல்லை

    மக்களிடம் தாக்கம் இல்லை

    சினிமா துறையினரின் கணக்குப்படி இது மிகப்பெரிய போராட்டம் தான். ஒரு மாதத்தில் ஒரு படம் மட்டுமே ரிலீஸ் என்பது சமீப ஆண்டுகளில் கண்டிராத புள்ளி விபரம். ஆனால், இந்த ஸ்ட்ரைக், மக்கள் மத்தியில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்பதை நிச்சயம் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்.

    ஆறுதல்

    ஆறுதல்

    அதிகரித்த டிக்கெட் கட்டண உயர்வால், குடும்பத்துடன் படம் பார்க்கச் சென்றால் ஆயிரங்களில் செலவாகும். அது போக, ரிலீஸாகும் பல தமிழ்ப் படங்கள் படு சுமாராகவே இருந்துவருவதால் ரசிகர்களும் சலிப்படைந்துள்ளனர். இந்த ஸ்ட்ரைக் சாமானிய மக்களுக்கு ஆறுதலாகவே தோன்றியுள்ளது.

    மக்கள் கருத்து

    மக்கள் கருத்து

    நம் தளம் சார்பாக வாசகர்களிடம் நடத்திய கருத்துக் கணிப்பில் 77% க்கும் அதிகமானோர் "இனி படமே வரலேன்னா நல்லது" எனக் கூறியுள்ளனர். தமிழ் சினிமா, டிக்கெட் விலை, ஸ்நாக்ஸ் விலை எல்லாமும் சேர்ந்து ரசிகர்களிடையே பெரும் அதிருப்தியை உண்டாக்கியிருப்பது தெளிவாகிறது. இதற்கு தீர்வு ஏற்படுத்த முயற்சியுங்கள் சினிமா ஆர்வலர்களே!

    English summary
    Tamil filmmakers stopped releasing new films in theaters for a month. It is clear how much they are affected by digital service fees. But it seems that the Strike does not have big impacts among the fans.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X