Don't Miss!
- News
டெல்லிக்கு பறக்கும் ‘இன்புட்ஸ்’.. பல ஆங்கிள்கள்.. பின்வாங்கும் பாஜக? மூத்த பத்திரிகையாளர் ‘பளிச்’!
- Sports
உலக கோப்பை ஹாக்கி.. 3வது முறையாக ஜெர்மனி சாம்பியன்.. பரபரப்பான டிவிஸ்டில் நடந்த இறுதிப் போட்டி
- Finance
பிப்ரவரி மாதத்தில் தமிழகத்தில் வங்கிகளுக்கு எத்தனை நாட்கள் விடுமுறை?
- Automobiles
ஹோண்டா ஆக்டிவா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலை இவ்ளோதானா! எப்புட்றா என மண்டையை சொறியும் போட்டி நிறுவனங்கள்!
- Lifestyle
எடையை வேகமாக குறைக்க பழச்சாறு குடிப்பவரா நீங்கள்? இனிமே அந்த தப்ப பண்ணாதீங்க...!
- Technology
மூன்று அதிநவீன ஸ்மார்ட்வாட்ச் மாடல்களை கம்மி விலையில் இறக்கிவிட்ட Fire Boltt.!
- Travel
உங்களது விமான டிக்கெட் டவுன்கிரேடு ஆகினால் 75% வரை டிக்கெட் கட்டணத்தை திரும்ப பெறலாம்!
- Education
TNTET 2022 paper 2 exam date :'டெட் பேப்பர் 2' தேர்வு அறிவிப்பு...!
’V’ டைட்டில் விஜய்க்கு வெற்றி கொடுத்து இருக்கிறதா? வெற்றி முதல் வாரிசு வரை ஒரு ரவுண்டப்!
சென்னை: விஜயகாந்தின் வெற்றி படத்தில் தான் முதன் முறையாக குழந்தை நட்சத்திரமாக விஜய் அறிமுகமானார்.
வம்சி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் தளபதி 66 படத்திற்கு 'V' தலைப்பில் வாரிசு என டைட்டில் வைத்துள்ளனர்.
'V' டைட்டிலில் நடிகர் விஜய் மிகவும் குறைவான படங்களிலேயே நடித்துள்ளார். அந்த எழுத்தில் ஆரம்பித்த படங்கள் விஜய்க்கு இதுவரை வெற்றி கொடுத்து இருக்கிறதா? என்பது குறித்து இங்கே அலசுவோம்.
விஜய்யின் சினிமா வாழ்க்கையை திருப்பிப்போட்ட டாப் 5 படங்கள் எது தெரியுமா ?

முதல் படம்
அப்பா எஸ்.ஏ. சந்திரசேகர் இயக்கத்தில் விஜயகாந்த் ஹீரோவாக நடித்த வெற்றி படத்தில் தான் நடிகர் விஜய் குழந்தை நட்சத்திரமாக முதன்முறையாக தமிழ் சினிமாவில் வாரிசு நடிகராக அறிமுகமானார். 1984ம் ஆண்டு வெளியான வெற்றி திரைப்படம் தான் நடிகர் விஜய் மனதில் தான் ஒரு ஹீரோவாக உருவாக வேண்டும் என்கிற விதையையே விதைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

விஷ்ணு
ஹீரோவான பிறகு 1995ம் ஆண்டு ஆகஸ்ட் 17ம் தேதி தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர் இயக்கத்தில் விஜய் நடித்த விஷ்ணு படத்தின் டைட்டிலும் 'வி' எனும் எழுத்தில் ஆரம்பித்தது தான். பெரும் செல்வந்தர் ஜெய்சங்கரின் மகனான விஜய் அந்த புகழ்ச்சி பிடிக்கமல் அநாதை என ஒரு எஸ்டேட்டுக்கு செல்ல அங்கே தலைவாசல் விஜய் மகனாக விஷ்ணு விஜய்யை தத்தெடுப்பார். வளர்ப்பு தந்தையின் வாரிசான விஜய்யிடம் பெற்ற தந்தையை கொல்லும் பொறுப்பு கொடுக்கப்பட உண்மையான வில்லனை கண்டுபிடிப்பதே விஷ்ணு படத்தின் கதை. ஆனால், அந்த படம் அந்தளவுக்கு மிகப்பெரிய படமாக விஜய்க்கு அமையவில்லை.

வசீகரா
விஷ்ணு படத்தைத் தொடர்ந்து 1996ல் வசந்த வாசல் எனும் படத்தில் விஜய் நடித்தார். அப்படியொர் படத்தை விஜய் ரசிகர்களில் பலருமே பார்த்து இருக்க மாட்டார்கள். அதன் பின்னர் 'வி' டைட்டிலை தேர்வு செய்யாத விஜய் 2003ல் வசீகரா படத்திற்கு அந்த எழுத்தை தேர்வு செய்தார். செல்வபாரதி இயக்கத்தில் விஜய், சினேகா, நாசர், மணிவண்ணன், வடிவேலு நடிப்பில் வெளியான அந்த படம் காமெடியில் அசத்தினாலும் பாக்ஸ் ஆபிஸில் ஹிட் அடிக்கவில்லை.

விளங்காத வில்லு
பிரபுதேவா இயக்கத்தில் விஜய் நடித்த போக்கிரி திரைப்படம் பாக்ஸ் ஆபிஸ் ஹிட் அடித்த நிலையில், மீண்டும் பிரபுதேவா இயக்கம் என்றதுமே ஓகே சொல்லி விட்டார் விஜய். ஜோடியாக நடித்த நயன்தாராவுக்கும் பிரபுதேவாவுக்கும் இடையே காதல் மலர வில்லு படத்தின் கதையின் டிராக்கே டோட்டலாக மாறி விளங்காமல் போய்விட்டது.

வேட்டைக்காரனும் வேலையை காட்டியது
எம்ஜிஆர் படத்தின் டைட்டிலான வேட்டைக்காரன் டைட்டிலை வைத்து மிகப்பெரிய ஹிட் கொடுக்கலாம் என விஜய் நினைத்தார். சன் பிக்சர்ஸ் அந்த படத்துக்கு பண்ண புரமோஷன் அப்போது "புலி உறுமுது" பாட்டைப் போட்டாலே நாடி நரம்பு எல்லாம் துடித்தன. ஆனால், படம் வெளியான பின்னர், புலி பூனையாக பதுங்கி விட்டது. வேட்டைக்காரனும் கடைசியில் விஜய்க்கு வேலையை காட்டி விட்டது.

வேலாயுதம்
தம்பி ஜெயம் ரவியை வைத்து ரீமேக் படங்களை இயக்கி ஹிட் கொடுத்து வந்த இயக்குநர் மோகன் ராஜா விஜய்க்கு ஒரு சூப்பர் ஹீரோ படம் பண்ணனும் என காத்திருந்து வேலாயுதம் படத்தை 'வி' டைட்டிலில் இயக்கினார். ஹன்சிகா, ஜெனிலியா என இரு ஹீரோயின்கள் இருந்தும் பாடல்கள் ஹிட் அடித்தும் படம் பெரியளவில் சொதப்பி விட்டது.

'வி' டைட்டிலை கையில் எடுத்த அஜித்
வேலாயுதம் படத்துடன் போதும்டா சாமி என 'வி' டைட்டிலை விஜய் விட நடிகர் அஜித் வீரம், வேதாளம், விவேகம், விஸ்வாசம், வலிமை என அடுத்தடுத்து அதே டைட்டிலில் தனது படங்கள் ஓடுகிறதோ, இல்லையோ அதையெல்லாம் பார்க்காமல் அடித்து நொறுக்கி வருகிறார். அடுத்த படத்திற்கு 'வங்கி' என டைட்டில் வைக்காமல் இருந்தால் சரி என ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

மீண்டும் 'வி'
இந்நிலையில், நடிகர் விஜய் மீண்டும் 'வி' டைட்டிலில் வாரிசு எனும் படத்தில் நடித்து வருகிறார். இயக்குநர் வம்சி இயக்கத்தில் விஜய், ராஷ்மிகா மந்தனா, மெஹ்ரின் பிர்சடா, ஷாம், சரத்குமார், பிரபு, பிரகாஷ் ராஜ், குஷ்பு உள்ளிட்ட பலர் நடிக்கும் இந்த படம் பழைய ஆருடங்களை பொய்யாக்குகிறதா? இல்லையா? என்பதை வரும் பொங்கலுக்கு பார்த்து தெரிந்து கொள்வோம்.