30 கோடி நஷ்டம்.. லைகர் ஃபிளாப் ஆனதால் நடிகை சார்மிக்கு இத்தனை கோடி கொடுத்தாரா விஜய் தேவரகொண்டா?

ஹைதராபாத்: சிம்புவின் காதல் அழிவதில்லை படத்தில் ஹீரோயினாக நடித்த சார்மி தான் லைகர் படத்தை தயாரித்துள்ளார்.

கரண் ஜோஹர் மற்றும் இயக்குநர் பூரி ஜெகநாத் உடன் இணைந்து படத்தை ரிலீஸ் செய்ததில் சார்மிக்குத் தான் பெரும் பங்கு நஷ்டம் என்கின்றனர்.

இந்நிலையில், லைகர் படத்தின் தயாரிப்பாளர் சார்மிக்கு தனது சம்பளத்தில் ஒரு பெரிய தொகையை திருப்பிக் கொடுத்து விட்டாராம் விஜய் தேவரகொண்டா.

சம்பளத்தை திருப்பித் தந்த அமீர்கான்

சம்பளத்தை திருப்பித் தந்த அமீர்கான்

லால் சிங் சத்தா படம் படு தோல்வியை சந்தித்த நிலையில், தனது 100 கோடி ரூபாய் சம்பளத்தையே நடிகர் அமீர்கான் வேண்டாம் என திருப்பித் தந்து விட்டதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில், அதே போன்ற ஒரு முடிவை நடிகர் விஜய் தேவரகொண்டாவும் லைகர் படத்தின் தோல்விக்கு பிறகு எடுத்துள்ளார் என தகவல்கள் பரபரப்பை கிளப்பி உள்ளன.

சார்மிக்கு லாஸ்

சார்மிக்கு லாஸ்

இயக்குநர் பூரி ஜெகநாத்தையும் நடிகர் விஜய் தேவரகொண்டாவையும் நம்பி ஏகப்பட்ட கோடிகளை போட்டு லைகர் படத்தை தயாரித்துள்ளார் நடிகை சார்மி. தெலுங்கு இந்தி பைலிங்குவல் படமாக உருவான இந்த படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய டிசாஸ்டராக மாறியது. படத்தை பார்த்த பலரும் படு மோசமாக விமர்சித்து ட்ரோல் செய்தனர்.

30 கோடி நஷ்டம்

30 கோடி நஷ்டம்

லைகர் படத்தின் பட்ஜெட் சுமார் 110 கோடி வரை இருக்கும் என தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்நிலையில், இதுவரை அந்த திரைப்படம் 60 கோடி வரை தான் வசூல் ஈட்டியுள்ளது. டிஜிட்டல் உரிமம், சாட்டிலைட் உரிமத்தை எல்லாம் சேர்த்தால் மேலும், சில கோடிகள் கிடைக்கும். ஆனால், கிட்டத்தட்ட 30 கோடிகள் வரை படத்திற்கு நஷ்டம் ஏற்படும் என கணிப்புகள் வெளியாகி உள்ளன.

6 கோடியை திருப்பித் தந்த ஹீரோ

6 கோடியை திருப்பித் தந்த ஹீரோ

இந்நிலையில், லைகர் படத்தின் தோல்வியால் ஏற்பட்ட நஷ்டத்தை சரி செய்ய நடிகர் விஜய் தேவரகொண்டா நடிகை சார்மிக்கு சுமார் 6 கோடி வரை தனது சம்பளப் பணத்தை திருப்பிக் கொடுத்து விட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும், விஜய் தேவரகொண்டாவின் மார்கெட் சரிவை சந்தித்த நிலையில், அடுத்த படத்திற்கான சம்பளத்தையும் அவர் குறைத்துக் கொண்டதாக கூறப்படுகிறது.

சமந்தாவுடன்

சமந்தாவுடன்

இயக்குநர் ஷிவா நிர்வணா இயக்கத்தில் உருவாகி வரும் குஷி படத்தில் நடிகை சமந்தா உடன் நடித்து வருகிறார் விஜய் தேவரகொண்டா. காஷ்மீர் பேக்ட்ராப்பில் அந்த படம் உருவாக்கப்பட்டு வருகிறது. லைகர் படத்தின் தோல்வி அந்த படத்தையும் வெகுவாக பாதிக்கும் என பேச்சுக்கள் அடிபட்டு வருகிறது. சமந்தாவின் யசோதா, சகுந்தலம் உள்ளிட்ட படங்கள் வெளியாகி ஹிட் அடித்தால் தான் குஷி படத்திற்கான பிசினஸ் ஓப்பன் ஆகும் என்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X