நண்டுக் குழம்புடன் சிஎஸ் அமுதன் போட்ட ட்வீட்.. நீங்க பீஃப் சாப்பிடுவீங்களான்னு கேட்ட ரசிகர்!
சென்னை: தமிழ்ப்படம் என்கிற ஸ்பூஃப் படத்தை இயக்கி ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் இயக்குநர் சி.எஸ். அமுதன்.
ஞாயிற்றுக்கிழமை அதுவுமா நண்டுக் குழம்பை ஒரு பிடி பிடிக்கப் போகிறேன் என்பது போல நண்டுக் குழம்பு போட்டோவை ட்விட்டரில் ஷேர் செய்திருந்தார்.
அவரது ட்வீட்டுக்கு கீழே உடனடியாக ஒரு ரசிகர் நீங்க பீஃப் மற்றும் போர்க் சாப்பிடுவீர்களா என கேட்க அதற்கு சி.எஸ். அமுதன் பதில் அளித்துள்ளார்.

சிஎஸ் அமுதன்
கெளதம் மேனனின் மின்னலே படத்தில் மாதவனின் மாஸ் ஓப்பனிங் காட்சியில் வரும் மேடி மேடி என்கிற பாடலை எழுதி பாடலாசிரியராக சினிமாவில் நுழைந்தவர் தான் சிஎஸ் அமுதன். தமிழ்ப்படத்தின் ஓ மகஸியா, அனேகன் படத்தின் யோலோ பாடல், தமிழ்ப்படம் 2ன் எவன் டா உன்ன பெத்தான் உள்ளிட்ட பல பாடல்களை எழுதியவர்.

தமிழ்ப்படம் இயக்குநர்
கடந்த 2010ம் ஆண்டு சிவா நடிப்பில் ஸ்பூஃப் மூவியாக வெளியான தமிழ்ப்படம் ஒட்டுமொத்த ரசிகர்களின் பேராதரவை பெற்றது. அதன் பின்னர் அவர் இயக்கிய ரெண்டாவது படம் இதுவரை வெளியாகவில்லை. என்ன ஆனது என்றே தெரியவில்லை. 2018ல் தமிழ்ப்படம் 2 படத்தை இயக்கி வெளியிட்டார். ஆனால், முதல் படத்திற்கு கிடைத்த வரவேற்பு இந்த முறை அவருக்கு கிடைக்கவில்லை. அடுத்து விஜய் ஆண்டனியின் ரத்தம் படத்தை இயக்கி உள்ளார்.

நண்டு குழம்பு
சமூக வலைதளங்களில் அவ்வப்போது நகைச்சுவையாகவும் சிந்திக்கத்தூண்டும் பதிவுகளையும் அவர் பதிவிட்டு ஆக்டிவாக இருந்து வருகிறார். இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை அதுவுமாக நண்டுக் குழம்பு லஞ்ச் என போட்டோ போட்டு ஒரு ட்வீட்டை அவர் போட்டுள்ளார்.

நண்டு பிராண்ட் லுங்கி
மேலும், அதற்கு கேப்ஷனாக நண்டு லுங்கியை நான் அணிந்துள்ளேன் என்பதை குறிப்பிட்டு இருந்த சி.எஸ். அமுதனின் ட்வீட்டுக்கு கீழ் ஏகப்பட்ட பேர் என்ன நண்டு பிராண்ட் விளம்பரமா? சார் என கமெண்ட் போட்டு கலாய்த்து வருகின்றனர். ஆனால், ஒரு ரசிகர் மட்டும் திடீரென அப்படியொரு கேள்வியை எழுப்பி சி.எஸ். அமுதனை அப்படியே ஆஃப் செய்து விட்டார்.

பீஃப், போர்க் சாப்பிடுவீங்களா
ஜாலியாக நண்டுக் குழம்பு சாப்பிட்டேன் என்கிற போஸ்ட்டை போட்ட சி.எஸ். அமுதனிடம் நீங்க பீஃப், போர்க் எல்லாம் சாப்பிடுவீங்களா என்கிற கேள்வியை ரசிகர் ஒருவர் எழுப்ப, சாப்பிடுவேன் என்று பதில் அளிக்காமல், சில விஷயங்களை மட்டும் சாப்பிட மாட்டேன் என சி.எஸ். அமுதன் பதில் அளிக்க, அப்போ நீங்களும் இந்த சாதி வட்டத்துக்குள் அடங்கிய ஆள் தான் என கமெண்ட் போட சி.எஸ். அமுதன் அப்படியே சைலண்ட் ஆகி விட்டார்.


Click it and Unblock the Notifications











