பீஸ்ட் டிரைலரில் முகமூடி அணிந்து வந்த வில்லன் யார் தெரியுமா...இதோ நீங்களே பாருங்க
சென்னை : பீஸ்ட் டிரைலரில் முகமூடி அணிந்த படி வந்த வில்லன் யார் என்பதை அந்த நடிகரே போட்டோவுடன் சோஷியல் மீடியாவில் பகிர்ந்துள்ளார். இதை பார்த்த நெட்டிசன்கள், அட...இவரா பீஸ்ட் வில்லன் என ஆச்சரியத்துடன் கேட்டு வருகிறார்கள்.
பீஸ்ட் படத்தில் ஹீரோவாக விஜய்யும், ஹீரோயினாக பூஜா ஹெக்டேவும் நடித்துள்ளனர். காமெடிக்கு யோகிபாபு, கிங்ஸ்லே இருக்கிறார்கள். ஆனால் வில்லன் யார் என தெரியாமல் குழம்பி வந்தனர். டைரக்டர் செல்வராகவன் இந்த படத்தில் முக்கிய ரோலில் நடிக்கிறார் என்றதும் அவர் தான் வில்லன் என சொல்லப்பட்டு வந்தது.

செல்வராகவன் வில்லன் இல்லை
ஆனால் சமீபத்தில் பீஸ்ட் படத்தில் செல்வராகவன் வில்லனாக நடிக்கவில்லை. அரசியல்வாதியாக தான் நடித்துள்ளார் என்றார்கள். ஆனால் சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ள பீஸ்ட் டீசரில் தீவிரவாதிகள் மற்றும் அரசிற்கு இடையே தூது செல்பவரை போல் காட்டப்படுகிறார். இதனால் பீஸ்ட் படத்தில் செல்வராகவன் வில்லன் இல்லை என்பது உறுதியாகி விட்டது.

யார் அந்த முகமூடி நபர்
அதே சமயம் கிறிஸ்துமஸ் தாத்தா உடையில், வயதானவர் போல் முகமூடி அணிந்து லிஃப்டில் ஒருவர் செல்வதை போல் காட்டி உள்ளனர். இதனால் மகமூடி அணிந்த இந்த மர்மநபர், இவர் தான் வில்லனா, யார் இவர் என்ற அடுக்கடுக்கான கேள்விகள் கேட்கப்பட்டு வருகிறது. இதற்கு இந்த படத்தில் நடித்துள்ள பிரபல நடிகரே, அந்த வில்லன் தான் தான் என பதில் அளித்துள்ளார்.

அட இவர் தான் வில்லனா
பிரபல மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோ தான் அந்த முகமூடி அணிந்து, வில்லனாக வந்துள்ளார். இதனை உறுதி செய்யும் விதமாக தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரி பக்கத்தில் அவரே அந்த போட்டோவை பதிவு செய்துள்ளார். இதை பார்த்த ரசிகர்கள், அட...இவர் தானா அது. பீஸ்ட் வில்லன் இவர் தானா என ஆச்சரியமாக கேட்டு வருகிறார்கள். இவர் ஏற்கனவே தனுஷ் நடிக்க வேங்கை படத்திலும் நடித்துள்ளார்.

எல்லாமே மாறுதேப்பா
பீஸ்ட் படம் ஏப்ரல் 13 ம் தேதி ரிலீசாக உள்ளது. ஆனால் இந்த படத்தில் நடித்துள்ளவர்களில் இதுவரை சாக்கோ பற்றிய தகவல்கள் பெரிதாக வெளியிடப்படவில்லை. மிக முக்கியமான கேரக்டர் என்பதால் தான் அவரை பற்றிய தகவல்களை ரகசியமாக வைத்து விட்டார்கள் போல. அதே போல் அபர்ணா தாசும் விஜய்யின் தங்கையாக நடிப்பதாக கூறினார்கள். ஆனால் டிரைலரில் தீவிரவாதிகள் கடத்தி வைத்திருக்கும் மினிஸ்டரின் மகளாக காட்டப்படுகிறார்.


Click it and Unblock the Notifications











