தமிழில் மாநாடு...மற்ற மொழிகளில் என்ன டைட்டில் தெரியுமா ?

சென்னை : டைரக்டர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் சிம்பு நடித்துள்ள படம் மாநாடு. அரசியல் கலந்த ஆக்ஷன், த்ரில்லர் படமான மாநாடு படத்தில் சிம்பு, கல்யாணி பிரியதர்ஷன், எஸ்.ஜே.சூர்யா, எஸ்.ஏ.சந்திரசேகர், பி ரேம்ஜி அமரன், கருணாகரன், மனோஜ் பாரதிராஜா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சுரேஷ் காமாட்சியின் வி கிரியேஷன்ஸ் தயாரித்துள்ள இந்த படத்திற்கு யுவஜ்சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

2020 ம் ஆண்டே ரிலீஸ் செய்யப்பட்டிருக்க வேண்டிய இந்த படம் கொரோனா, லாக்டவுன் உள்ளிட்ட பல காரணங்களால் தள்ளி போனது. இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் மாநாடு படத்தின் டீசர் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றதுடன், படம் பற்றிய எதிர்பார்ப்பை அதிகரித்தது.

தள்ளிப்போன ரிலீஸ்

தள்ளிப்போன ரிலீஸ்

இந்த படத்தில் முதல் முறையாக சிம்பு இஸ்லாமிய இளைஞர் ரோலில் நடித்துள்ளார். எஸ்.ஜே.சூர்யா, போலீஸ் ரோலிலும், கல்யாணி பிரியதர்ஷினி, சீதாலட்சுமி என்ற ரோலிலும் நடித்துள்ளனர். இந்த படம் எப்போது ரிலீசாகும் என அப்டேட் கேட்டு வந்தார்கள் ரசிகர்கள். ஏற்கனவே மே 11 ம் தேதி ரம்ஜானுக்கு இந்த படத்தை ரிலீஸ் செய்ய முடிவு செய்திருந்தார்கள், ஆனால் தியேட்டர்கள் மூடப்பட்டதால் ரிலீஸ் தேதி முடிவு செய்யப்படாமல் இருந்தது.

ஒரு தேதி சொல்லுங்க

ஒரு தேதி சொல்லுங்க

இந்நிலையில் ஆயுத பூஜைக்கு படம் ரிலீசாகும் என்று பெரும்பாலான தகவல்கள் தெரிவித்தன. இந்நிலையில் யாரும் எதிர்பாராத விதமாக தீபாவளிக்கு, மாநாடு படம் தியேடரில் ரிலீஸ் செய்யப்படும் என தயாரிப்பாளர்கள் சுரேஷ் காமாட்சி அறிவித்தார். இதைத் தொடர்ந்து டிரைலர் எப்போன்னு ஒரு தேதி சொல்லுங்க என ரசிகர்கள் கேட்டனர்.

4 மொழிகளில் 4 பேர்

4 மொழிகளில் 4 பேர்

இதனால் டிரைலரை அக்டோபர் 2 ம் தேதி ரிலீசாகும் என அறிவித்தார் சுரேஷ் காமாட்சி. அதைத் தொடர்ந்து டைரக்டர் வெங்கட் பிரபு இன்ஸ்டாகிராமில், அக்டோபர் 2 ம் தேதி காலை 11.25 மணிக்கு மாநாடு டிரைலர் ரிலீசாகும். இதை ஏ.ஆர்.முருகதாஸ், நிவின் பாலி, நானி, ரக்ஷித் ஷெட்டி ஆகியோர் வெளியிட உள்ளதாக அறிவித்தார்.

மற்ற மொழிகளில் என்ன டைட்டில்

மற்ற மொழிகளில் என்ன டைட்டில்

மாநாடு படம் தமிழ் உள்ளிட்ட 5 மொழிகளில் ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டு விட்டது. இதனால் மற்ற மொழிகளில் இந்த படத்திற்கு என்ன டைட்டில் என்பது டிரைலருடன் சேர்த்து வெளியிடப்படும் எனவும் சுரேஷ் காமாட்சி அறிவித்தார். இதன்படி மாநாடு படத்தின் டிரைலரை தமிழில் ஏ.ஆர்.முருகதாஸ், மலையாளத்தில் நிவின் பாலி, கன்னடத்தில் ரக்ஷித் ஷெட்டி, தெலுங்கில் நானி ஆகியோர் வெளியிட்டனர்.

இது தான் டைட்டிலா

இது தான் டைட்டிலா

தமிழ் மற்றும் மலையாளத்தில் மாநாடு என்ற பெயரிலேயே இந்த படம் ரிலீசாக உள்ளது. தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் Time Loop என்ற பெயரிலும் இந்த படம் ரிலீஸ் செய்யப்பட உள்ளது தெரியவந்துள்ளது. டைம் லூப் என்ற பெயரிலேயே பிற மொழிகளில் டிரைலர் வெளியிடப்பட்டுள்ளது.

சுரேஷ் காமாட்சி ட்வீட்

சுரேஷ் காமாட்சி ட்வீட்

மிரட்டலான இந்த டிரைலர் சிம்பு ரசிகர்கள் வைரலாக்கி, லட்சக்கணக்கில் லைக்குகளை குவித்து வருகின்றனர். எப்படி டிரைலரை தெறிக்க விட்டோமா. மாநாடு அப்டேட் கேட்ட நண்பர்கள் அனைவரும் கமெண்ட் பகுதியில் வந்து ஆஜராகுங்கள் என தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி ட்வீட் செய்துள்ளார். ஹீரோ சிம்புவுக்கு இணையாக மீண்டும் தனது நடிப்பை அழுத்தமாக பதிவு செய்துள்ளார் எஸ்.ஜே.சூர்யா.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X