வலிமை பற்றி தியேட்டர் உரிமையாளர்கள் என்ன சொல்கிறார்கள் தெரியுமா ?
சென்னை : வலிமை படத்தை அஜித் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இந்த படத்திற்கு பெரும்பாலும் பாசிடிவ் விமர்சனங்களே வந்துள்ளது. சிலர் குறைகள் என பட்டியல் வாசித்தாலும் ரசிகர்கள் அதை கொஞ்சமும் கண்டுகொள்ளாமல் வலிமை படம் பற்றிய ஒவ்வொரு தகவலையும் தற்போது வரை பெரிய அளவில் புகழ்ந்து வருகிறார்கள். ரசிகர்கள் புகழ்கிறார்கள். ஆனால் தியேட்டர் உரிமையாளர்கள் வலிமை பற்றி என்ன சொல்கிறார்கள் என இங்கே பார்ப்போம்.
அஜித் நடித்த வலிமை படம் பிப்ரவரி 24 ம் தேதி ரிலீஸ் செய்யப்பட்டது. நீண்ட கால காத்திருப்பிற்கு பிறகு வந்த படம் என்பதாலும், ரசிகர்கள் எதிர்பார்த்தபடி பக்கா ஆக்ஷன் படமாக உருவாக்கப்பட்டுள்ளதாலும் ரசிகர்கள் இதனை கொண்டாடி வருகின்றனர். உலகம் முழுவதும் வலிமை படம் வசூல் வேட்டை நடத்தி வருகிறது.

சாதனைகளை நொறுக்கிய வலிமை
இதுவரை வெளிவந்த படங்களின் முதல் நாள் வசூல் சாதனையை வலிமை அடித்து நொறுக்கி உள்ளது. வெறும் மூன்றே நாளில் 100 கோடி வசூல் கிளப்பில் இணைந்துள்ளது. தமிழ்நாட்டை விட, மற்ற நாடுகளில் வலிமை படத்தை ரசிகர்கள் வேற லெவலில் கொண்டாடி வருகிறார்கள். விமர்சகர்கள் பலர் குறையாக கூறியதால் படத்தில் 14 நிமிட காட்சிகள் கத்தரிக்கப்பட்டு, ரன்னிங் டைம் இரண்டரை மணி நேரமாக சுருக்கப்பட்டு திரையிடப்பட்டு வருகிறது.

5 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா
இதுவரை வெளியான தகவலின் படி முதல் 5 நாட்ககளில் வலிமை படம் 150 முதல் 160 கோடிகளை வசூல் செய்துள்ளதாம். முதல் நாளில் 59.48 கோடி , இரண்டாவது நாளில் 35.74 கோடி, மூன்றாவது நாளில் 28.30 கோடி, நான்காவது நாளில் 36.23 கோடி என வசூல் செய்துள்ளது. மொத்தமாக இதுவரை 159 கோடிகளை வசூல் செய்துள்ளாதாக கூறப்படுகிறது. வலிமை படத்தின் வசூல் அதிரடியாக குறைந்து விட்டதாக ஒரு பக்கம் விமர்சனங்கள் எழுந்து வருகிறது.

தியேட்டர்கள் உரிமையாளர்கள் என்ன சொல்றாங்க
ஆனால் தியேட்டர் உரிமையாளர்கள் இதை கண்டு கொள்ளவேயில்லை. வலிமை படம் பற்றி தியேட்டர்களின் உரிமையாளர்கள் தரப்பில் என்ன சொல்லப்படுகிறது என்றால், டாக்டர், மாநாடு படங்களின் ஒட்டு மொத்த வசூலை 4 நாட்களில் கடந்து விட்டது வலிமை படம். விமர்சனங்கள் பற்றி கவலை இல்லை. குடும்ப ரசிகர்கள் கொண்டாடுகின்றனர். அதுவே வெற்றியை நிர்ணயிக்கிறது என தெரிவித்துள்ளனர்.
Recommended Video

குடும்ப ரசிகர்கள் கொண்டாடும் வலிமை
வலிமை ரிலீசான முதல் இரண்டு நாட்கள் ரசிகர்கள் அதிகம் வந்த நிலையில், அதற்கு பிறகு வருபவர்களில் 80 சதவீதம் பேர் குடும்பத்துடன் வந்து வலிமை படத்தை பார்ப்பதாக தியேட்டர் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். நீண்ட காலத்திற்கு 100 சதவீதம் பார்வையாளர்களுடன் படம் ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. முதல் படமே அஜித் படமாக அமைந்ததால் தியேட்டர் உரிமையாளர்கள் எதிர்பார்த்த லாபம் கிடைத்து விட்டதாக கூறப்படுகிறது. இதனால் அனைவரும் செம குஷியாகி உள்ளனராம்.


Click it and Unblock the Notifications











