Don't Miss!
- News
பிபிசி ஆவணப்படம் பார்த்த மாணவர்களை கைது செய்வது கருத்துரிமைக்கு எதிரானது.. வேல்முருகன் ஆவேசம்!
- Sports
உலக கோப்பை ஹாக்கி.. வெற்றியுடன் தொடரை நிறைவு செய்த இந்தியா.. 9வது இடத்தை பிடித்தது
- Finance
ஏலத்திற்கு வந்த டயானா-வின் வெல்வெட் கவுன்.. விலை மட்டும் கேட்காதீங்க..!
- Lifestyle
ஆண்களே! நீங்க செக்ஸ் சாட் பண்ணும்போது... இந்த தப்ப மட்டும் தெரியமா கூட பண்ணாதீங்க...!
- Automobiles
புதிய இன்னோவா காரின் புக்கிங் திடீரென நிறுத்தம்... இனிமேல் கிடைக்காதா? டொயோட்டா செய்த காரியத்தால் கலக்கம்!
- Technology
அம்மாடி.! ரூ.14000 வரை தள்ளுபடியா? Samsung டேப்லெட் வாங்க பெஸ்ட் நேரம் இதான் டோய்.!
- Travel
உங்களது விமான டிக்கெட் டவுன்கிரேடு ஆகினால் 75% வரை டிக்கெட் கட்டணத்தை திரும்ப பெறலாம்!
- Education
TNTET 2022 paper 2 exam date :'டெட் பேப்பர் 2' தேர்வு அறிவிப்பு...!
வெற்றி தோல்வி முக்கியம் இல்லை... வசூல் தான் மேட்டர்: மீண்டும் விஜய் தான் நம்பர் 1 மோடில் தில் ராஜூ
ஐதராபாத்:
விஜய்
நடித்துள்ள
வாரிசு
திரைப்படம்
பொங்கல்
தினத்தை
முன்னிட்டு
திரையரங்குகளில்
வெளியாகிறது.
தில்
ராஜூ
தயாரிப்பில்
தமிழ்,
தெலுங்கு
என
இருமொழிகளில்
உருவாகியுள்ள
இந்தப்
படத்தை
வம்ஷி
பைடிபள்ளி
இயக்கியுள்ளார்.
வாரிசு இசை வெளியீட்டு விழா கடந்த வாரம் சென்னையில் நடைபெற்ற நிலையில், விரைவில் ட்ரெய்லர் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், ஏற்கனவே விஜய் தான் கோலிவுட்டின் நம்பர் 1 நடிகர் என பேசியிருந்த தில் ராஜூ, தற்போது மீண்டும் ஒரு சர்ச்சையை கிளப்பியுள்ளார்.
நண்டு
இழுக்குற
கதையா
மாறிடும்..காத்துவாக்குல
ரெண்டு
காதல்
படத்தில்
நடிக்காதது
குறித்து
த்ரிஷா
பளிச்!

விஜய்யின் வாரிசு
பீஸ்ட் படத்தைத் தொடர்ந்து விஜய் நடித்துள்ள வாரிசு பொங்கல் ரேஸில் களமிறங்க ரெடியாகி வருகிறது. அஜித்தின் துணிவும் வாரிசு படத்துடன் நேருக்கு நேர் மோதவுள்ளதால், கோலிவுட்டே பரபரப்பாக காணப்படுகிறது. எப்போதுமே விஜய் - அஜித் திரைப்படங்கள் ஒன்றாக ரிலீஸாவதாக இருந்தால், யார் நம்பர் 1, யார் வசூலில் மாஸ் காட்டினார் என்ற பஞ்சாயத்து காலங்காலமாக நடைபெற்று வருகிறது. இந்தமுறை இதனை வாரிசு தயாரிப்பாளர் தில் ராஜூ கிளப்பியுள்ளார்.

கோலிவுட் நம்பர் 1
தெலுங்கில் பல பிரம்மாண்டமான படங்களைத் தாயரித்துள்ள தில் ராஜூ, முதன்முறையாக தமிழிலும் களமிறங்கியுள்ளார். முதல் படத்திலேயே விஜய்யுடன் கூட்டணி வைத்த அவர், வாரிசு திரைப்படத்தை தயாரித்துள்ளார். தமிழ், தெலுங்கு மொழிகளில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் விஜய் ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். இந்நிலையில், தமிழில் விஜய் தான் நம்பர் 1, அதனால் வாரிசு படத்திற்கு தான் அதிக தியேட்டர்கள் வேண்டும் என உதயநிதியிடம் கேட்கப் போவதாகக் கூறினார் தில் ராஜூ. அவரின் இந்த கருத்து சர்ச்சையானதோடு மட்டும் அல்லாமல், யார் நம்பர் 1 என்ற விவாதத்தையும் ஏற்படுத்தியது.

மீண்டும் வண்டியில் ஏறிய தில் ராஜூ
அதேபோல், வாரிசு இசை வெளியீட்டு விழாவில் விஜய் தான் மாஸ் நடிகர் என புகழ்ந்தார் ஷாம். சரத்குமார் இன்னும் ஒருபடி மேலே போய், விஜய் அடுத்த சூப்பர் ஸ்டார் என ஒரேபோடாக போட்டார். தொடர்ச்சியாக விஜய் தான் கோலிவுட்டின் நம்பர் 1 என்ற போட்டி வலுத்து வரும் நிலையில், தில் ராஜூ மீண்டும் தனது அட்ராசிட்டியை ஆரம்பித்துள்ளார். தெலுங்கு யூடியூப் சேனலுக்கு பேட்டி கொடுத்துள்ள தில் ராஜூ, விஜய் ஏன் நம்பர் 1 எனக் கூறினேன், அதிக தியேட்டர்கள் கேட்டது எதற்காக என விளக்கம் அளித்துள்ளார்.

மீண்டும் வண்டியில் ஏறிய தில் ராஜூ
அதேபோல், வாரிசு இசை வெளியீட்டு விழாவில் விஜய் தான் மாஸ் நடிகர் என புகழ்ந்தார் ஷாம். சரத்குமார் இன்னும் ஒருபடி மேலே போய், விஜய் அடுத்த சூப்பர் ஸ்டார் என ஒரேபோடாக போட்டார். தொடர்ச்சியாக விஜய் தான் கோலிவுட்டின் நம்பர் 1 என்ற போட்டி வலுத்து வரும் நிலையில், தில் ராஜூ மீண்டும் தனது அட்ராசிட்டியை ஆரம்பித்துள்ளார். தெலுங்கு யூடியூப் சேனலுக்கு பேட்டி கொடுத்துள்ள தில் ராஜூ, விஜய் ஏன் நம்பர் 1 எனக் கூறினேன், அதிக தியேட்டர்கள் கேட்டது எதற்காக என விளக்கம் அளித்துள்ளார்.

வசூல் தான் இங்கே மேட்டர்
அந்தப் பேட்டியில், ஒரு மாஸ் ஹீரோ என்ற அடையாளம் படம் வெளியாகும் போது தியேட்டரில் ரசிகர்களால் கிடைக்கும் வரவேற்பை பொறுத்தே தீர்மானிக்கப்படுகிறது. அதன்படி பார்த்தால் விஜய்யின் கடைசி 5 - 6 திரைப்படங்கள் 60 கோடிக்கும் மேல் வருமானம் கொடுத்துள்ளது. விஜய்யின் படம் வெற்றியா தோல்வியா என்பதை விட வசூலில் எப்படி இருக்கிறது என்பது தான் இங்கே முக்கியம். அதை வைத்துதான் வாரிசு படத்துக்கு அதிக தியேட்டர்கள் கேட்டேன், விஜய்யையும் நம்பர் 1 நடிகர் என்றேன் எனக் கூறியுள்ளார். வாரிசு படத்தின் ரிலீஸ் தேதி நெருங்கி வரும் நிலையில், தில் ராஜூ மீண்டும் அஜித்தை மறைமுகமாக சாடியிருப்பது ரசிகர்களிடம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.