twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    தளபதி 66 கதை இது தானா?...விஜய் அப்படி சொன்னதுக்கு இது தான் காரணமோ

    |

    சென்னை : விஜய்யின் அடுத்த படமான தளபதி 66 பற்றிய அடுத்தடுத்த அப்டேட்கள் வெளியாகி வரும் நிலையில், படத்தின் கதை பற்றிய தகவலும் வெளியாகி உள்ளது. இதையும் தயாரிப்பாளர் தில் ராஜுவே வெளியிட்டுள்ளார். இதனால் தளபதி 66 படத்தின் மீதான ரசிகர்களின் ஆர்வம் அதிகரித்து வருகிறது.

    விஜய் தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கிய பீஸ்ட் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தின் அடுத்த அப்டேட் எப்போது வரும், ரிலீஸ் தேதியை எப்போது அறிவிப்பார்கள் என ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள். இதற்காக அவ்வவ் போது பீஸ்ட் ஹாஷ்டேக்கை ட்விட்டரில் டிரெண்டிங் ஆக்கி வருகிறார்கள். பீஸ்ட் பற்றிய அப்டேட்கள் வராவிட்டாலும், விஜய் அடுத்து நடிக்க போகும் தளபதி 66 படம் பற்றி தொடர்ந்து அப்டேட்கள் வந்து கொண்டிருக்கின்றன.

     விரைவில் தளபதி 66 ஆரம்பம்

    விரைவில் தளபதி 66 ஆரம்பம்

    விஜய் 66 படத்தை பிரபல தெலுங்கு டைரக்டரான வம்சி பைடபள்ளி இயக்க உள்ளார். இந்த படத்தை தில் ராஜு தயாரிக்க உள்ளார். மிக பிரம்மாண்டமாக தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் இந்த படத்தை எடுக்க திட்டமிட்டுள்ளனர். படக்குழுவினர் பற்றிய தேர்வு நடைபெற்று வருவதால் விரைவில் இந்த படம் பற்றி அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கள் வெளியாக உள்ளன. இந்நிலையில் படத்தின் அப்டேட்களை தயாரிப்பாளர் தில் ராஜுவே வெளியிட்டு வருகிறார்.

     தில் ராஜு வெளியிட்ட அப்டேட்

    தில் ராஜு வெளியிட்ட அப்டேட்

    சமீபத்தில் தில் ராஜு அளித்த பேட்டி ஒன்றில், தளபதி 66 ஷுட்டிங் மார்ச் மாதம் துவங்கப்பட உள்ளது. இந்த ஆண்டு தீபாவளிக்கு படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளோம். ஆனால் கொரோனா சூழல் எப்படி இருக்கும் என தெரியவில்லை. ரிலீசிற்கான முதல் சாய்ஸ் தீபாவளி. அப்படி முடியாமல் போனால் 2023 ம் ஆண்டு சங்கராந்தி (பொங்கல்) அன்று படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளோம். படத்தின் கதையை கேட்டு விட்டு, 20 வருடத்திற்கு பிறகு இப்படி ஒரு கதையை கேட்கிறேன் என சொல்லி விஜய் சொன்னதாக கூறியிருந்தார்.

    எதுக்காக விஜய் அப்படி சொன்னார்

    எதுக்காக விஜய் அப்படி சொன்னார்

    தில் ராஜுவின் இந்த பேட்டியால், தளபதி 66 படத்தின் கதை என்னவாக இருக்கும் என அனைவரும் யோசிக்க துவங்கி விட்டனர். விஜய் வேறு, 20 வருடங்களுக்கு பிறகு இப்படி ஒரு கதை கேட்கிறேன் என சொல்லி இருக்கிறாரே. எதற்காக அவர் அப்படி சொன்னார். அப்படியானால் தமிழ் சினிமாவில் யாருமே விஜய்யிடம் அப்படி என்ன கதையை சொல்லாமல் இருந்திருப்பார்கள் என அனைவரும் யோசிக்க துவங்கி விட்டனர். ஆனால் இதற்கான பதிலும் தற்போது தில் ராஜுவே மற்றொரு பேட்டியில் கூறி உள்ளார்.

    இது தான் தளபதி 66 கதை

    இது தான் தளபதி 66 கதை

    அதாவது, தளபதி 66 படம் முழுக்க முழுக்க குடும்ப, பொழுதுபோக்கு படமாம். குடும்ப கதையை மையமாகக் கொண்டு தான் அமைக்கப்பட்டுள்ளதாம். பூவே உனக்காக, துள்ளாத மனமும் துள்ளும் வரிசையில் விஜய்யின் மாறுபட்ட நடிப்பை சொல்வதாக இந்த படம் இருக்குமாம். ஆக்ஷன், சென்டிமென்ட், பாடல்கள் என அனைத்தும் கலந்த கலவையாக இருக்குமாம். மிக சிறப்பான உணர்ச்சிகரமான, மனதை தொடுவதாக தளபதி 66 படத்தின் கதை இருக்குமாம்.

    விஜய் சொன்னதுக்கு இதுதான் காரணமா

    விஜய் சொன்னதுக்கு இதுதான் காரணமா

    தொடர்ந்து அதிரடி ஆக்ஷன், மாஸ் ஹீரோ கதைகளிலேயே விஜய் அடுத்தடுத்து நடித்து வருவதால் நீண்ட காலத்திற்கு பிறகு குடும்ப சப்ஜெக்ட் கதையை கேட்டதால் தான் 20 வருடங்களுக்கு பிறகு இப்படி ஒரு கதை கேட்கிறேன் என விஜய் பாராட்டினாராம். தளபதி 66 குடும்ப சென்டிமென்ட் கதையாகவும், அதே சமயம் விஜய் ரசிகர்களை ஏமாற்றாத வகையில் ஆக்ஷன் காட்சிகள் நிறைந்ததாகவும் இருக்குமாம்.

    English summary
    Producer Dil Raju revealed Vijay's Thalapathy 66 storyline in his recent interview. He said that this is family subject with action sequences. After a long time vijay to act in family, emotional subject.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X