»   »  திலீப், காவ்யா திருமணம்: ஃபேஸ்புக்கில் போஸ்ட் போட்டு சர்ச்சையில் சிக்கிய மாஜி அமைச்சர்

திலீப், காவ்யா திருமணம்: ஃபேஸ்புக்கில் போஸ்ட் போட்டு சர்ச்சையில் சிக்கிய மாஜி அமைச்சர்

Posted By:
Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: நடிகர் திலீப், நடிகை காவ்யா மாதவன் பற்றி ஃபேஸ்புக்கில் போஸ்ட் போட்டு சர்ச்சையில் சிக்கியுள்ளார் கேரள மாநில முன்னாள் அமைச்சர் பந்தளம் சுதாகரன்.

மலையாள நடிகர் திலீப் நடிகை காவ்யா மாதவனை கடந்த வெள்ளிக்கிழமை திடீர் என திருமணம் செய்து கொண்டார். திலீப் தனது காதல் மனைவியான நடிகை மஞ்சு வாரியரை விவாகரத்து செய்ய காவ்யா தான் காரணம் என்று பேசப்பட்டது.

Dileep, Kavya wedding: Former minister's controversial FB post

இந்நிலையில் தான் திலீப் காவ்யாவை மணந்தார். இது குறித்து கேரள மாநில முன்னாள் அமைச்சர் பந்தளம் சுதாகரன் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் இன்று கூறியதாவது,

இனி பிரச்சனை இல்லை. கறுப்பு பணம் வெள்ளையாகிவிட்டது என தெரிவித்திருந்தார்.

இதை பார்த்த பலரும் சுதாகரனுக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர். உடனே அவர் சர்ச்சைக்குரிய போஸ்ட்டை நீக்கிவிட்டார்.

English summary
Former Kerala minister Pandalam Sudhakaran's Facebook post has created controversy after which he deleted it.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil