»   »  உடல்நிலை தேறியது.. வீடு திரும்பினார் திலீப் குமார்!

உடல்நிலை தேறியது.. வீடு திரும்பினார் திலீப் குமார்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: உடல்நிலை தேறியதால் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார் நடிகர் திலீப்குமார்.

பாலிவுட்டின் மூத்த நடிகர், விருதுகள் பல பெற்றவர், திரைப்படங்களில் சாதனைப் படைத்தவர் திலீப் குமார். 94 வயதான அவருக்கு சில தினங்களுக்கு முன் மூச்சுத்திணறல் ஏற்பட்டதையடுத்து, மும்பையில் உள்ள லீலாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர்.

Dilip Kumar discharged

ஆரம்பத்தில், சற்று கவலைக்கிடமான் நிலையில் இருந்த திலிப் குமார் நான்கு நாட்களாக அளிக்கப்பட்ட தொடர் சிகிச்சையின் பலனாக குணம் அடைந்தார்.

எனவே அவரை வீட்டுக்குச் சென்று ஓய்வெடுக்குமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தினர். இதைத் தொடர்ந்து இன்று மாலை 4 மணிக்கு அவர் வீடு திரும்பினார்.

பாராளுமன்ற ராஜ்யசபை உறுப்பினராக ஐந்தாண்டுகள் பதவி வகித்த திலீப் குமார், தனது இரண்டாவது மனைவி சாய்ரா பானுவுடன் மும்பையில் வசித்து வருகிறார்.

English summary
Actor Dilip Kumar has been discharged from Mumbai Leelavathi Hospital today after recovered from ill.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil