»   »  படுக்கையில் பிணமாகக் கிடந்த இளம் டிவி நடிகர்: 2 வாரத்தில் 2 நடிகர்கள் மரணம்

படுக்கையில் பிணமாகக் கிடந்த இளம் டிவி நடிகர்: 2 வாரத்தில் 2 நடிகர்கள் மரணம்

Posted By:
Subscribe to Oneindia Tamil
2 வாரத்தில் 2 நடிகர்கள் மரணம்- வீடியோ

மும்பை: பிரபல தொலைக்காட்சி நடிகர் கரண் பரஞ்பே பிணமாகக் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

தில் மில் கயி என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் கரண் பரஞ்பே(26). அந்த நிகழ்ச்சியில் அவர் ஜிக்னேஷ் என்ற ஆண் நர்ஸாக நடித்து ரசிகர்களை கவர்ந்தார்.

அதில் இருந்து ரசிகர்கள் அவரை ஜிக்னேஷ் என்றே அழைத்து வந்தனர்.

மும்பை

மும்பை

மும்பையில் வசித்து வந்தார் கரண். அவர் தனது வீட்டு படுக்கையறையில் பிணமாகக் கிடந்ததை அவரது தாய் ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணிக்கு கண்டுபிடித்தார்.

இரங்கல்

இரங்கல்

கரணுக்கு தூக்கத்திலேயே மாரடைப்பு ஏற்பட்டிருக்கக்கூடும் என்று சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கரணின் மரண செய்தி அறிந்து அவருடன் நடித்த கலைஞர்கள் அதிர்ச்சியும், கவலையும் அடைந்துள்ளனர்.

 ஏன் கரண்?

ஏன் கரண்?

ஏன் கரண் அதற்குள் சென்றுவிட்டீர்கள். அப்படி என்ன அவசரம். உங்களை ரொம்பவே மிஸ் பண்ணுவோம் என்று அவருடன் நடித்த கலைஞர்கள் தெரிவித்துள்ளனர்.

 அடுத்தடுத்த மரணம்

அடுத்தடுத்த மரணம்

சாந்தி உள்ளிட்ட பல பிரபல தொலைக்காட்சி தொடர்களில் நடித்த நரேந்திர ஜா கடந்த 14ம் தேதி புனேவில் மரணம் அடைந்தார். இதையடுத்து கரண் இறந்துள்ளது தொலைக்காட்சி பிரபலங்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

English summary
Television actor, Karan Paranjpe passed away on Sunday (March 25). He was just 26. The actor was seen on Star One's popular show, Dill Mill Gayye, in which he played the role of a male nurse Jignesh/Jiggy in Sanjeevani (hospital).

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X