twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பழம்பெரும் இயக்குனர் சங்கர் மரணம் சென்னை:இறையருட் செல்வர் என்று அழைக்கப்பட்ட முன்னாள் பிரபல இயக்குனர் கே.சங்கர் சென்னையில் மரணமடைந்தார். அவருக்கு வயது 80. பழம்பெரும் திரைப்பட இயக்குனரான சங்கர், எம்.ஜி.ஆர். , சிவாஜி கணேசன் ஆகியோரை வைத்து ஏராளமான படங்களை இயக்கியவர். குடியிருந்த கோவில், கலங்கரை விளக்கம், இன்று போல் என்றும் வாழ்க, அடிமைப் பெண், ஆலயமணி, ஆண்டவன் கட்டளை, வருவான் வடிவேலன் உள்ளிட்ட பல படங்களை இயக்கியவர் சங்கர். 101 படங்களை இயக்கியுள்ள சங்கர், உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார். இந் நிலையில் கோடம்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தார். சங்கருக்கு மனைவி, 3 மகன்கள், 3 மகள்கள் உள்ளனர். கடந்த 2004ம் ஆண்டு ராஜா சாண்டோ திரை விருதை சங்கர் பெற்றார். கடந்த வாரம்தான் இதற்கான விழாவில் முதல்வர் ஜெயலலிதாவின் கையால் விருதை வாங்கினார் சங்கர் என்பது குறிப்பிடத்தக்கது. திரையுலக வாழ்க்கையின் கடைசி காலத்தில் பக்திப் படங்களை இயக்ககத் தொடங்கினார் சங்கர். இதனால் அவருக்கு இறையருட் செல்வர் என்ற பட்டம் அவருக்குக் கிடைத்தது.

    By Staff
    |

    சென்னை:

    இறையருட் செல்வர் என்று அழைக்கப்பட்ட முன்னாள் பிரபல இயக்குனர் கே.சங்கர் சென்னையில் மரணமடைந்தார். அவருக்கு வயது 80.

    பழம்பெரும் திரைப்பட இயக்குனரான சங்கர், எம்.ஜி.ஆர். , சிவாஜி கணேசன் ஆகியோரை வைத்து ஏராளமான படங்களை இயக்கியவர். குடியிருந்த கோவில், கலங்கரை விளக்கம், இன்று போல் என்றும் வாழ்க, அடிமைப் பெண், ஆலயமணி, ஆண்டவன் கட்டளை, வருவான் வடிவேலன் உள்ளிட்ட பல படங்களை இயக்கியவர் சங்கர்.

    101 படங்களை இயக்கியுள்ள சங்கர், உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார். இந் நிலையில் கோடம்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தார்.

    சங்கருக்கு மனைவி, 3 மகன்கள், 3 மகள்கள் உள்ளனர். கடந்த 2004ம் ஆண்டு ராஜா சாண்டோ திரை விருதை சங்கர் பெற்றார். கடந்த வாரம்தான் இதற்கான விழாவில் முதல்வர் ஜெயலலிதாவின் கையால் விருதை வாங்கினார் சங்கர் என்பது குறிப்பிடத்தக்கது.

    திரையுலக வாழ்க்கையின் கடைசி காலத்தில் பக்திப் படங்களை இயக்ககத் தொடங்கினார் சங்கர். இதனால் அவருக்கு இறையருட் செல்வர் என்ற பட்டம் அவருக்குக் கிடைத்தது.

      உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
      Enable
      x
      Notification Settings X
      Time Settings
      Done
      Clear Notification X
      Do you want to clear all the notifications from your inbox?
      Settings X
      X