twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    தொடரும் சோகம்... பிரபல இயக்குனர் மாரடைப்பால் திடீர் மரணம்.. அதிர்ச்சியில் திரையுலகம்!

    |

    சென்னை: பிரபல இயக்குநரான ஆச்சார்யா ரவி மாரடைப்பால் காலமானார். அவரது திடீர் மரணம் திரையுலகினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

    தமிழ் சினிமாவின் பிரபல இயக்குநர்களில் ஒருவரான பாலாவின் உதவி இயக்குநராக இருந்தவர் ரவி. இவர் 2006ஆம் ஆண்டு வெளியான ஆச்சார்யா படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார்.

    சமுத்திரக்கனி சார் தான் ஹீரோன்னு தெரியாது... இனியா குஷி பேட்டி! சமுத்திரக்கனி சார் தான் ஹீரோன்னு தெரியாது... இனியா குஷி பேட்டி!

    இதனை தொடர்ந்து ஆச்சார்யா ரவி என அழைக்கப்பட்டு வருகிறார். விக்னேஷ், நாசர், சரண் ராஜ் நடிப்பில் வெளியான இப்படம் வித்தியாசமான கதைக்களத்தை கொண்டிருந்தது.

    மதுரை மீனாட்சி மிஷன்

    மதுரை மீனாட்சி மிஷன்

    தொடர்ந்து டம்மி டப்பாசு என்ற படத்தையும் இயக்கியுள்ளார் ஆச்சார்யா ரவி. இந்நிலையில் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த இயக்குநர் ரவி மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

    சிகிச்சைப் பலனின்றி மரணம்

    சிகிச்சைப் பலனின்றி மரணம்

    அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று காலை இயக்குநர் ரவி மாரடைப்பால் காலமானார். நேற்று முன்தினம் இரவுதான் பிரபல பாடகரும் நடிகருமான மாணிக்க விநாயகம் மாரடைப்பால் திடீரென மரணமடைந்தார்.

    அடுத்தடுத்து மரணம் - சோகம்

    அடுத்தடுத்து மரணம் - சோகம்

    அவரது மரணம் தமிழ் சினிமாவில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. அவரது மறைவில் இருந்தே இன்னும் ரசிகர்களும் திரையுலக பிரபலங்களும் மீளாத நிலையில் இயக்குநர் ஆச்சார்யா ரவியின் மரணம் மேலும் சோகத்தை கூட்டியுள்ளது.

    சினிமா பிரபலங்கள் இரங்கல்

    சினிமா பிரபலங்கள் இரங்கல்

    இயக்குநர் ஆச்சார்யா ரவியின் மறைவுக்கு ரசிகர்களும் தமிழ் சினிமா பிரபலங்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர். அவரது இறுதிச்சடங்கு குறித்த தகவல்கள் எதுவும் இதுவரை வெளியாக வில்லை.

    English summary
    Director Aacharya Ravi passes away. Due to heart attack he last breathed at Madurai Meenakshi Mission hospital.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X