மதராஸி: சிவகார்த்திகேயன் கைக்கு வந்த துப்பாக்கி.. ஏ.ஆர்.முருகதாஸ் சொன்ன அந்த விஷயம்!
சென்னை: சிவகார்த்திகேயன் நடிப்பில், ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் மதராஸி படம் செப்டம்பர் 5ம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இத்திரைப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. பிரம்மாண்டமாக நடைபெற்ற இந்த விழாவில் படத்தின் இயக்குநர் ஏ.ஆர் முருகதாஸ் படம் குறித்து பல விஷயத்தை பேசினார்.
மதராஸி திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் என்ன பேசலாம் என்று யோசித்த போது நண்பர் ஒருவர் படத்தைப் பற்றி ஆஹா... ஓஹோ என்று பேச வேண்டாம், குறைவாக பேசுங்கள் என்றார். உடனே நானும் சரி படத்தைப் பற்றிய கம்மியாக பேசலாம் என நினைத்துக் கொண்டு வந்தேன். அடுத்த நிமிடமே வேறு ஒரு ஃபோன் வருந்தது. அதில் ஒரு நண்பர், படத்தை பற்றி என்ன பேச நினைக்கிறீர்களோ அதை பேசுங்கள் என்றார். நீங்கள் எதுவுமே பேசவில்லை என்றால், உங்களுக்கு படத்தின் மீது நம்பிக்கை இல்லை என ரசிகர்கள் நினைத்துவிடுவார்கள் என்றார்.

ஏ.ஆர்.முருகதாஸ்: நடிகர் சிவகார்த்திகேயனிடம் இருந்து தான் இந்த படத்தின் புள்ளி ஆரம்பிக்கப்பட்டது. சினிமாவில் வெற்றி பெற வேண்டும் என்றால் ஒரு விஷயத்தை சொல்லுவார்கள். அதாவது, பறவை செல்லும்போது அதை நோக்கி குறி வைக்கக்கூடாது, பறவை பறந்து வரும் திசையை நோக்கி குறி வைத்து அடிக்க வேண்டும் அப்போது தான் ஜெயிக்க முடியும் என்பார்கள். அப்படித்தான் சிவகார்த்திகேயனுடைய வளர்ச்சியை நான் பார்க்கிறேன். அவரின் வளர்ச்சி உண்மையிலேயே அற்புதமான வளர்ச்சியாக இருக்கிறது. சினிமாவில் சாதிக்க வேண்டும் என்ற கனவோடு சென்னை வருபவர்களுக்கு, திறமையும், நம்பிக்கையும் இருந்தால் நிச்சயம் சாதித்து விடலாம் என்பதற்கு SK அவர்கள் ஒரு உதாரணமாகவும், இன்றைய இளைஞர்கள் சினிமாவிற்கு வருவதற்கு ஊக்கமாகவும் இருக்கிறார் சிவகார்த்திகேயன்.
கையில் கொடுத்த துப்பாக்கி: ரொம்ப கடினமான உழைப்பாளி, அது மட்டுமில்லாமல் குழந்தைகளின் மனதில் யார் இடம்பிடிக்கிறார்களோ ஒருநாள் அவர்கள் மிகபெரிய உச்சத்தை அடைவார்கள். சிவகார்த்திகேயன் குழந்தைகள், பெண்கள், பேமிலி ஆடியன்ஸ் மனதில் இடம் பிடித்து விட்டு, பின் மாஸ் ஹீரோவாக மாறியது தான் அவரின் மிகப்பெரிய பிளஸ். இதை சிவகார்த்திகேயன் சினிமாவிற்கு வருவதற்கு முன்பே செய்துவிட்டார். அவரை வைத்து படத்தை இயக்கியது உண்மையிலே எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு, அவருடைய வளர்ச்சி பாராட்டக்கூடியது. அது மட்டுமில்லாமல் துப்பாக்கியை வேற அவர் கையில் கொடுத்துவிட்டார். இது மதராஸி படப்பிடிப்பின் போது தான் நடந்தது. மதராஸி படத்தை பாருங்கள் படத்தில் சிவகார்த்திகேயன் துப்பாக்கியை எப்படி இறுக்கி பிடிச்சு இருக்காரு என்பதை உங்களால் உணர முடியும். இந்த படத்திற்கு பெரிய பலத்தை சேர்ந்த சிவகார்த்திகேயனுக்கு மிகவும் நன்றி.
எப்போதுமே தயாரிப்பாளர்கள் ஒரு கணக்கு போட்டு அதற்குள் என்ன லாபம் வரும் என்று தான் பார்ப்பார்கள், படம் நன்றாக வரவேண்டும் என பார்த்தவர் படத்தின் தயாரிப்பாளர் பிரசாத், அவருக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் அவர் இல்லை என்றால் இந்த திரைப்படம் உருவாகி இருக்காது. அதே போல படத்தின் இரண்டாவது ஹீரோவாக அனிருத் இருந்து சிறப்பான பாடலை கொடுத்து இருக்கிறார் என ஏ.ஆர். முருகதாஸ் மதராஸி படத்தின் இசைவெளியீட்டு விழாவில் பேசினார்.


Click it and Unblock the Notifications











