twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    உணர்வுப்பூர்வமான கிராமிய கதைகளை திரையில் கொடுத்த பாரதிராஜா.. பிறந்தநாள் பதிவு!

    |

    சென்னை : இயக்குநர் இமயம் என்ற பாராட்டுக்கு உள்ளான இயக்குநர் பாரதிராஜாவின் பிறந்தநாள் இன்று.

    தொடர்ந்து தன்னுடைய கிராமியக் கதைகளின் மூலம் ஏராளமான ரசிகர்களை கவர்ந்தவர் பாரதிராஜா.

    இவர் இன்றைய தினம் தன்னுடைய 81வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.

     வாய்ப்புகளை குவிக்க அந்த அளவுக்கு இறங்கிய நடிகை.. டஃப் கொடுக்க முடியாமல் திணறும் டாப் நடிகைகள்! வாய்ப்புகளை குவிக்க அந்த அளவுக்கு இறங்கிய நடிகை.. டஃப் கொடுக்க முடியாமல் திணறும் டாப் நடிகைகள்!

    இயக்குநர் இமயம்

    இயக்குநர் இமயம்

    இயக்குநர் இமயம் என்று பாராட்டப்படுபவர் பாரதிராஜா. பாசத்திற்குரிய பாரதிராஜா என்று இவர் ஒவ்வொரு படத்திற்கும் கொடுக்கும் துவக்கம், மிகப்பெரிய ட்ரெண்ட் செட்டாக அமைந்தது. அந்த காலகட்டங்களில் செட் போட்டு ஒவ்வொரு படங்களும் எடுக்கப்பட்ட நிலையில் அதை உடைத்தெரிந்த இயக்குநர்களில் இவருக்கு முக்கியமான பங்கு உண்டு.

    கிராமியக் கதைகளை கொடுத்தவர்

    கிராமியக் கதைகளை கொடுத்தவர்

    தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளிலும் 40க்கும் மேற்பட்ட படங்களை இயக்கியவர் பாரதிராஜா. தனக்கென தனியாக ஒரு பாணியை உருவாக்கிக் கொண்டு கிராமியக் கதைகளை அதிகமாக ரசிகர்களுக்கு கொடுத்தவர். நம்முடைய கண்ணெதிரில் நடக்கும் குப்பன், சுப்பன் கதைகளை படமாக்கியவர்.

    கிராமத்து ஹீரோக்கள்

    கிராமத்து ஹீரோக்கள்

    கிராமத்து ஹீரோக்களை இவர் தன்னுடைய படங்களில் முதன்மை படுத்தினார். இதன்மூலம் சாமானிய ரசிகர்களை கவர்ந்து தமிழ்த் திரைப்படத்துறையில் புதிய புரட்சியை ஏற்படுத்தினார். சாமானிய ரசிகர்களை அதிகமாக திரையரங்குகளுக்கு வரவைத்த பெருமையும் பாரதிராஜாவுக்கு உண்டு.

    கமலை சப்பாணியாக்கியவர்

    கமலை சப்பாணியாக்கியவர்

    தன்னுடைய முதல் படமான பதினாறு வயதினிலே படத்தின்மூலம் அழகான கேரக்டர்களில் நடித்துவந்த கமல்ஹாசனை சப்பாணி ஆக்கியவர். ரஜினிக்கும் பரட்டை என்ற கேரக்டர் எவர்கிரீனாக அமைந்தது. அவரது ஸ்டைலிஷ்ஷான வில்லத்தனம் ஏராளமான ரசிகர்களை கவர்ந்தது. தன்னுடைய முதல் படத்திலேயே தமிழக அரசின் மாநில விருதை பெற்றார் பாரதிராஜா.

    வெள்ளந்தி மனிதர்களின் காதல்

    வெள்ளந்தி மனிதர்களின் காதல்

    தொடர்ந்து கிழக்கே போகும் ரயில் படத்தில் வெள்ளந்தி மனிதர்களின் காதலை அழகாக வெளிப்படுத்தினார். மேலும் கிராமத்தின் ஒரு சில பழக்கவழக்கங்களையும் கேள்விக்குள்ளாக்கினார். இவரது முதல் மரியாதை, வேதம் புதிது, கருத்தம்மா போன்ற படங்கள் சிறப்பான அதிர்வலைகளை ஏற்படுத்தின.

    வயதைக் கடந்த காதல்

    வயதைக் கடந்த காதல்

    முதல் மரியாதையில் வயதை கடந்த காதலை கதைக்களமாக்கினார். இதில் சிவாஜி மற்றும் ராதாவை நிஜ மனிதர்களாக நடைபயில செய்தார். இதேபோல வேதம் புதிது படத்தில் நான் கரையேறிட்டேன்.. நீங்க என்று சத்யராஜிடம் கேட்கப்பட்ட கேள்வி சிலருக்கு சவுக்கடியாக அமைந்தது.

    மிகையில்லாத காதல்

    மிகையில்லாத காதல்

    இவரது படங்களில் சமூக அக்கறையுடன் சிறப்பாக அமைந்த நிலையில், கருத்தம்மா படத்தில் பெண் சிசுக் கொலை சிறப்பாக கையாளப்பட்டது. மிகையில்லாத காதலை தன்னுடைய படங்களில் அழகாக சொன்ன பாரதிராஜா த்ரில்லர் வகை படங்களுக்கும் ட்ரெண்ட் செட்டராக மாறினார்.

    த்ரில்லர் வகை படங்கள்

    த்ரில்லர் வகை படங்கள்

    இவரது சிகப்பு ரோஜாக்கள் தற்போதைய ரசிகர்களையும் சீட்டின் நுனியில் உட்கார வைக்கும் வகையிலானது. தொடர்ந்து ஒரு கைதியின் டைரி படமும் சிறப்பான காட்சி அமைப்புகளுடன் ரசிகர்களை கட்டிப் போட்டது. குறிப்பாக சிகப்பு ரோஜாக்கள் படத்தில் கமலின் பிளாஷ்பேக் காட்சிகள் மற்றும் க்ளைமாக்ஸ் காட்சிகள் மிரட்டின.

    அண்ணன் -தங்கை பாசம்

    அண்ணன் -தங்கை பாசம்

    அண்ணன் -தங்கை பாசத்தை மிகையுணர்வுடன் கொடுத்தப்படம் பாசமலர். ஆனால் அதே அண்ணன் -தங்கை பாசத்தை வைத்துக் கொண்டு கிழக்கு சீமையிலே படம் மூலம் கொடுத்தவர் பாரதிராஜா. அந்த காலக்கட்டத்தில் இந்தப் படத்தை பார்த்துவிட்டு அழாமல் திரையரங்குகளில் இருந்து வெளியில் வந்தவர்கள் குறைவு. அந்த அளவிற்கு ராதிகா -விஜய்குமாரின் யதார்த்த நடிப்பு சிறப்பாக அமைந்தது.

    நடிப்பின் மீது காதல்

    நடிப்பின் மீது காதல்

    40க்கும் மேற்பட்ட படங்களை இயக்கிய பாரதிராஜா, தற்போதும் தன்னுடைய நடிப்பின் மீதான காதலை விட்டுக் கொடுக்காமல் இருக்கிறார். தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார். இவரது இயக்கத்தை மிஸ் செய்யும் ரசிகர்கள், இவரை எந்த வகையிலாவது படங்களில் பார்ப்பதை மிகவும் பெருமையாக பார்க்கின்றனர்.

    சுறுசுறுப்பான பாரதிராஜா

    சுறுசுறுப்பான பாரதிராஜா

    இது மட்டுமில்லாமல், இந்த வயதிலும் திரையுலக பிரபலங்களின் பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்வது, புதிய படங்களின் பூஜைகள், இசை வெளியீடுகளில் பங்கேற்பது என்று தன்னை பிசியாக வைத்துக் கொண்டு வருகிறார் பாரதிராஜா. தற்போது இவரது பிறந்தநாளையொட்டி திரையுலக பிரபலங்கள் வாழ்த்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

    English summary
    Director Bharathiraja celebrates his birthday today
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X