Don't Miss!
- Sports
அடி தூள்.. ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடர்.. இந்தியாவுக்காக பிசிசிஐ செய்த ஸ்பெஷல் ஏற்பாடு.. வீரர்கள் குஷி!
- Finance
பொருளாதார ஆய்வறிக்கை வெளியானது.. இந்திய பொருளாதாரம் 6-6.8% வளர்ச்சி அடையும்,..!
- News
பத்திக்கிருச்சே.. இதுக்குன்னே தனி வீடு.. ராகினியிடம் கெஞ்சிய குடும்பம்.. பரிதாப கணவன்.. அலறிய ஆவடி
- Lifestyle
இந்த 4 அறிகுறிகள் உங்களுக்கு இருந்தா? இரத்த சர்க்கரையால் தீவிரமான நரம்பு பாதிப்பு ஏற்பட வாய்ப்பிருக்காம்!
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Automobiles
கார் பைக்குகளில் இருப்பது போல ரயில் இன்ஜின்களிலும் கியர் இருக்குமா? இது எப்படிப் பயன்படுகிறது?
- Technology
ஒட்டுமொத்த பட்ஜெட் போன்களையும் பேக்கில் ஓடவிடப்போகும் OnePlus Nord 3.! இது தான் காரணமா?
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
அண்ணே நடிப்புல "சாமி ஆடிருக்கிங்க".. இயக்குநர் சொன்ன வார்த்தையால் மகிழ்ந்து போன சேரன்!
சென்னை: ஆனந்தம் விளையாடும் படத்திற்காக இயக்குநர் பாராட்டியதை பெருமிதத்துடன் பகிர்ந்துள்ளார் இயக்குநர் சேரன்.
தமிழ் சினிமாவின் தரமான இயக்குநர்களில் ஒருவர் சேரன். இயக்குநர் கே எஸ் ரவிக்குமாரிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய சேரன், பாரதி கண்ணம்மா படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார்.
தொடர்ந்து பல வெற்றி படங்களை கொடுத்துள்ளார் இயக்குநர் சேரன். தொடர்ந்து பொற்காலம், தேசியகீதம், வெற்றிக்கொடிக்கட்டு, பாண்டவர் பூமி, சொல்ல மறந்த கதை, ஆட்டோ கிராஃப், தவமாய் தவமிருந்து உள்ளிட்ட பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ளார்.
படப்பிடிப்பில்
தவறி
விழுந்த
இயக்குநர்
சேரன்..
தலையில்
பலத்த
காயம்..
8
தையல்
போடப்பட்டுள்ளதாக
தகவல்!

நான்கு தேசிய விருதுகள்
இயக்குநர் சேரன் நான்கு தேசிய விருதுகள் உட்பட ஏராளமான விருதுகளையும் குவித்துள்ளார். இயக்குநராக மட்டுமின்றி நடிகராகவும் வலம் வருகிறார் சேரன். ஆட்டோகிராஃப், சொல்ல மறந்த கதை, தவமாய் தவமிருந்து, மாய கண்ணாடி, ஆடும் கூத்து, பிரிவோம் சந்திப்போம், ராமன் தேடிய சீதை, பொக்கிஷம், யுத்தம் செய், முரண், சென்னையில் ஒரு நாள் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

ஆனந்தம் விளையாடும் வீடு
விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியிலும் பங்கேற்றார் இயக்குநர் சேரன். இதில் நடந்து கொண்ட விதத்தின் மூலம் மக்கள் மத்தியில் தவிர்க்க முடியாத இடத்தை பெற்றார். இந்நிலையில் இயக்குநர் சேரன் நந்தா பெரியசாமி இயக்கத்தில் உருவாகும் ஆனந்தம் விளையாடும் வீடு படத்தில் நடிக்கிறார்.

படப்பிடிப்பு நிறைவு
இந்தப் படத்தில், கவுதம் கார்த்திக், ஷிவாத்மிகா ராஜசேகர், சரவணன், டேனியல் பாலாஜி, வெண்பா, மொட்டை ராஜேந்திரன், சிங்கம் புலி, சினேகன், நமோ நாராயணன் உட்பட பலர் இப்படத்தில் நடிக்கின்றனர். இந்தப் படத்தின் படப்பிடிப்பு திண்டுக்கல்லில் நடைபெற்று வந்தது. அண்மையில் நிறைவடைந்தது.

நடிப்புல "சாமி ஆடிருக்கிங்க"
இந்நிலையில்
இப்படம்
குறித்து
இயக்குநர்
சேரன்
தனது
டிவிட்டர்
பக்கத்தில்
பதிவிட்டுள்ளார்.
அதாவது
இயக்குனர்
நந்தா
பெரியசாமி..
ஆனந்தம்
விளையாடும்
வீடு
படப்பிடிப்பை
சிறப்பாக
முடித்துவிட்டார்.
நேற்று
எடிட்டில்
படத்தின்
காட்சிகள்
அனைத்தையும்
பார்த்துவிட்டு
அண்ணே
இந்த
படத்துல
நடிப்புல
"சாமி
ஆடிருக்கிங்க"
என
சொன்னது
மகிழ்வைத்
தந்ததது..
நன்றி
இயக்குனரே..
குடும்பங்கள்
கொண்டாடட்டும்..
என்று
பதிவிட்டுள்ளார்.

அப்டியே கருப்புசாமி மாதி..
மேலும் இயக்குநர் நந்தா பெரியசாமியுடன் சேர்ந்து எடுத்த போட்டோவையும் ஷேர் செய்துள்ளார். இயக்குநர் சேரனின் இந்த பதிவை பார்த்த நடிகர் சவுந்தர் ராஜா, சேரன் அண்ணா நானும் சொன்னேன் ., நம்ம சண்டைக்காட்சி எடுக்கும் போது அப்டியே கருப்புசாமி மாதி .! நமக்கு பிடித்த இந்த படம் மக்களுக்கும் பிடிக்க கடவுளை வேண்டுகிறேன் என பதிவிட்டுள்ளார்.

நடிப்பிலும் உச்சம் தொட வாழ்த்துகள்
இயக்குநர் சேரனின் பதிவை பார்த்த நெட்டிசன்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்த நெட்டிசன், இயக்கத்தில் உச்சம் தொட்ட நீங்கள், நடிப்பிலும் உச்சம் தொட வாழ்த்துகள், ஆயிரம் இருந்தாலும் நீங்கள் தமிழ் திரைப்பட உலகின் ஆகச்சிறந்த இயக்குநர்களில் ஒருவர்தான், அந்த அடையாளமே நெஞ்சில் பதிந்துவிட்டது, பெரும் மகிழ்ச்சி.. என பதிவிட்டுள்ளார்.

நாங்களும் பார்த்து இரசித்து விளையாட
மற்றொரு நெட்டிசனான இவர் நாங்களும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம் ஆனந்தம் விளையாடும் வீட்டில் நாங்களும் பார்த்து இரசித்து விளையாட என பதிவிட்டுள்ளார்.

அருமை சார்..
இந்த நெட்டிசன், அருமை சார்.. திரைப்படக் குழுவினர்க்கு வாழ்த்துக்கள்.. விரைவில் திரைப்படத்தை காண ஆவலுடன் காத்திருக்கிறோம்.. என பதிவிட்டுள்ளார்.
Recommended Video

தலையில் பலத்த காயம்
கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்தப் படத்தின் படப்பிடிப்பு திண்டுக்கல்லில் நடைபெற்றது. அப்போது, இயக்குநர் சேரன் மேல் இருந்து தவறி கிழே விழுந்தார். இதில் அவரது தலையில் காயம் ஏற்பட்டது. தலையில் 8 தையல்கள் போடப்பட்டதாகவும் தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.