»   »  தீயா வேலை பார்க்கும் இயக்குனர் தனுஷ்: வியப்பில் கோலிவுட்

தீயா வேலை பார்க்கும் இயக்குனர் தனுஷ்: வியப்பில் கோலிவுட்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தனுஷ் இயக்கி வரும் பவர் பாண்டி படத்தின் 50 சதவீத படப்பிடிப்பு முடிந்துவிட்டது.

நடிகர், தயாரிப்பாளர், பாடகர், பாடல் ஆசிரியராக இருந்த தனுஷ் ஒரு சுபயோக சுபதினத்தில் இயக்குனர் அவதாரம் எடுத்தார். தனது தந்தை கஸ்தூரி ராஜாவின் முதல் ஹீரோவான ராஜ்கிரணையே தனது படத்தின் ஹீரோவாக்கியுள்ளார்.


Director Dhanush is super fast

பவர் பாண்டி என்று பெயரிடப்பட்டுள்ள படத்தில் நதியா, பிரசன்னா, சாயா சிங், ரோபோ ஷங்கர் உள்ளிட்டோர் நடித்து வருகிறார்கள். தனுஷும் படத்தில் சிறப்பு தோற்றத்தில் வருகிறாராம்.


Director Dhanush is super fast

கடந்த மாதம் துவங்கிய படப்பிடிப்பு விறு விறு என நடந்து வருகிறது. அதற்குள் 50 சதவீத படப்பிடிப்பு முடிந்துவிட்டதாம். இந்த பட வேலையை முடித்து விட்டு தனுஷ் ஹாலிவுட் படத்தில் நடிக்க செல்ல வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.


தனுஷ் இயக்குனராக அதுவும் முதல் படத்திலேயே இவ்வளவு வேகமாக வேலை பார்ப்பது பலரையும் வியக்க வைத்துள்ளது.

English summary
Dhanush's directorial debut Power Paandi starring Rajkiran is already half done.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil