»   »  அந்த பட்டத்துக்கே தாங்க முடியல.. இதுல உதயநிதிக்கு இன்னொரு பட்டமா?

அந்த பட்டத்துக்கே தாங்க முடியல.. இதுல உதயநிதிக்கு இன்னொரு பட்டமா?

Posted By:
Subscribe to Oneindia Tamil
மூன்றாம் கலைஞர் உதயநிதியா இல்ல மக்கள் அன்ப உதயநிதியா?- வீடியோ

சென்னை : நடிகர், தயாரிப்பாளர், விநியோகிஸ்தர் ஆகிய அவதாரங்களில் கோலிவுட் திரையுலகில் பயணம் செய்துவரும் உதயநிதி ஸ்டாலின், வலுவான பின்னணி இருப்பதால் சமீபகாலமாக அரசியலிலும் ஆர்வம் காட்டி வருகிறார்.

இதனையடுத்து திமுக தொண்டர்கள் உதயநிதி ஸ்டாலினுக்கு 'மூன்றாம் கலைஞர்' என்ற பட்டத்தை அளித்துள்ளனர். மூன்றாம் கலைஞரே என அவரது படத்துடன் வைக்கப்பட்ட பேனர்கள் சமூக வலைதளங்களில் வைரலாகின.

Director gives new title for Udhayanidhi

இந்த நிலையில் பிரபல இயக்குனர் சீனு ராமசாமி உதயநிதிக்கு 'மக்கள் அன்பன்' என்ற புதிய பட்டத்தைக் கொடுத்துள்ளார். இவர்தான் ஏற்கெனவே விஜய் சேதுபதிக்கு 'மக்கள் செல்வன்' என்ற பட்டத்தை கொடுத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

சீனுராமசாமி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், தமன்னா நடித்துள்ள 'கண்ணே கலைமானே' படத்தைப் பார்த்து முடித்ததும் உதயநிதியை 'மக்கள் அன்பன்' என்றே அழைக்கத் தோன்றுவதாகக் கூறியுள்ளார் சீனு ராமசாமி. படத்தின் டைட்டில் கார்டில் 'மக்கள் அன்பன்' உதயநிதி என்றே போடப்படும் என தெரிகிறது.

'மூன்றாம் கலைஞர்' பட்டத்திற்கே உதயநிதியை நெட்டிசன்கள் ரவுண்டு கட்டி கலாய்த்து வரும் நிலையில் இந்த 'மக்கள் அன்பன்' அவர்களுடைய கையில் சிக்கி என்ன பாடுபடப்போகிறதோ என்பதை நினைத்தால்தான் பதறுகிறது.

English summary
Director Seenu ramasamy gave 'Makkal anban' title for Udhayanidhi stalin.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X